1793ம் ஆண்டு பட்டயச் சட்டத்தை “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1793” எனவும் அழைக்கப்பட்டது
பட்டயச் சட்டத்தின் தேவை:
1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, கம்பெனியின் வணிகம் 2௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே உள்ள பட்டயச் சட்டங்களை புதுப்பிக்க வேண்டி இச்சட்டம் உருவாக்கப்பட்டது
அடுத்த 2௦ ஆண்டுகளுக்கு கம்பெனியின் ஏகபோக வர்த்தகத்தை தொடர செய்தல்
கம்பெனி மேற்கொள்ளும் அணைத்து அரசியல் நடவடிக்கைகளும், இங்கிலாந்து அரசின் உத்தரவின் பேரிலே நடைபெறும்
கம்பெனியின் வருவாயில் இருந்து வழங்கப்படும் ஈவுத்தொகை, 1௦% ஆக உயர்த்தப்பட்டது
பட்டயச் சட்டம் 1793 கவர்னர் ஜெனரலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது
மதராஸ் மற்றும் பம்பாய் மாகாண கவர்னர் ஜெனரல்கள், வங்காள கவர்னர் ஜெனரலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டனர்
கம்பெனி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு இந்திய வருவாயில் இருந்து ஊதியம் வழங்குதல்
கம்பெனியின் அணைத்து செலவினங்களும் போக, இந்திய வருவாயில் இருந்து ஆண்டு தோறும் 5 லட்ச பவுண்டுகள் பிரிட்டிஷ் அரசிற்கு அளிக்க வேண்டும்
கம்பெனியின் மூத்த அதிகாரிகள் உரிய அனுமதி இன்றி இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் வணிகம் செய்வதற்கு தனியாள் அலல்து கம்பெனிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது
இச்சட்டம் ஒரு வலிமையான மைய அரசாங்கம் அமைவதற்கு வழிவகை செய்தது
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நில எல்லையை விரிவாக்கும் எண்ணம் கம்பெனிக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது
கவர்னர் ஜெனரலின் ஆலோசனை சபை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் இனிமேல் குறைந்தது 12 ஆண்டுகளாவது இந்திய நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனப்பட்டது
இச்சட்டப்படி கவர்னர் ஜெனரலுக்கு மாகாணங்களில் “அமைதிகான் நீதிபதி” (Justice of Peace) நியமிக்க உரிமை வழங்கப்பட்டது
நீதி நிர்வாகத்தில் இருந்து வருவாய் நிர்வாகம் தனியாக பிரிக்கப்பட்டது
சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய குறிப்பு:
இச்சட்டத்தால் ஏற்கனவே இருந்த சட்டங்களில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை
ஆனால் கம்பெனி செலவுகளுக்கு இந்திய வருவாயில் இருந்து செலவுகள் மேற்கொள்ளப்பட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.