வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் வாழ்க்கைக் குறிப்பு

  • பெயர் = வீரமா முனிவர்
  • இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
  • பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
  • தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
  • சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
  • காலம் = 1680-1747

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

வீரமாமுனிவர் சிறப்பு பெயர்

  • தமிழ் சிறுகதையின் முன்னோடி
  • தமிழ் உரைநடையின் தந்தை
  • எள்ளல் இலக்கிய வழிகாட்டி
  • உரைநடை இலக்கிய முன்னோடி
  • செந்தமிழ் தேசிகர்
  • மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
  • வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
  • தமிழ் அகராதியின் தந்தை
  • ஒப்பிலக்கண வாயில்
  • தொகுப்புப்பணியின் வழிகாட்டி

வீரமாமுனிவர்

காப்பியம்

  • தேம்பாவணி (கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்)

சிற்றிலக்கியம்

  • திருக்காவலூர் கலம்பகம்
  • கித்தேரி அம்மாள் அம்மானை
  • அடைக்கல நாயகி வெண்பா
  • அன்னை அழுங்கல் அந்தாதி
  • கருணாகரப் பதிகம்

உரைநடை

  • வேதியர் ஒழுக்கம்
  • வேத விளக்கம்
  • பேதகம் மறத்தல்
  • லூதர் இனதியல்பு
  • ஞானக் கண்ணாடி
  • வாமணன் கதை

இலக்கணம்

  • தொன்னூல் விளக்கம் (“குட்டித் தொல்காப்பியம்” என்பர்)
  • கொடுந்தமிழ் இலக்கணம்
  • செந்தமிழ் இலக்கணம்

மொழிபெயர்ப்பு

  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்

வீரமாமுனிவர்

அகராதி

  • சதுரகராதி (தமிழின் முதல் அகராதி)
  • தமிழ்-இலத்தின் அகராதி
  • போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தின் அகராதி

ஏளன இலக்கியம்

  • பரமார்த்த குரு கதை(தமிழின் முதல் ஏளன இலக்கியம்)

தொகுப்பு

  • தமிழ் செய்யுள் தொகை

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

  • எழுத்து சீர்திருத்தம் செய்து, சில குறில் எழுத்துக்களையும் நெடில் எழுத்துக்களையும் வேறுபடுத்தி மாற்றம் செய்தார்
  • ஐந்திலக்கண நூலான “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூலை படைத்தார். இதன் சிறப்பு கருதி இந்நூலை “குட்டித் தொல்காப்பியம்” என்பர்
  • சதுரகராதி என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார்
  • தேம்பாவணி காப்பியத்திற்கு வீரமாமுனிவரே உரை வடித்துள்ளார்
  • திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தார்
  • இவர் மறைந்த இடம் = அம்பலகாடு
  • தனது பெயரை முதலில் “தைரியநாதர்” என மாற்றிக்கொண்டார்

இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
  • இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
  • வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
  • “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
  • இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.

வீரமாமுனிவர் சிறப்பு

  • கவியோகி சுத்தானந்த பாரதி = சாரமாம் தேம்பாவணியினைத் தொடினும், தமிழ் மனம் கமழும் என்கரமே
  • கவியோகி சுத்தானந்த பாரதி = தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது. அதுவே தேம்பாவணி என்னும் பெருங் காப்பிய மாலை
  • திரு பூர்ணலிங்கம் பிள்ளை = இது சீவக சிந்தாமணிக்கு இணையான காவியமாகும்
  • கால்டுவெல் = தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று
  • ரா.பி.சேதுபிள்ளை = தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது; தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்

 

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

Leave a Reply