10TH TAMIL உவம உருபுகள்
10TH TAMIL உவம உருபுகள்
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையே வரும் உருபு, உவம உருபு எனப்படும்.
- எ.கா:
- தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள்.
- இத்தொடர் குரல் இனிமையை உணர்த்துகிறது.
- குரலின் இனிமைக்கு குயிலின் குரல் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
- இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும்.
- இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உவமை உவமேயம்
- சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும்.
- அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும்.
- உவமையை “உவமானம்” என்றும் கூறுவர்.
- எ.கா:
- தமிழ் தேன்போல இனிமையானது.
- இத்தொடரில் “போல” என்பது “உவம உருபு” ஆகும்.
உவம உருபுகள்
- உவம உருபுகள் = போல, புரைய, ஒப்ப, உறழ, இயைய, ஏய்ப்ப, மான, கடுப்ப, இயைய, நேர, நிகர, அன்ன, இன்ன.
- போல = கிளிபோலப் பேசினாள்
- புரைய = வேய்புரை தோள்
- ஒப்ப = தாயொப்பப் பேசும்
- உறழ = முழவு உறழ் தடக்கை
- அன்ன = மலரன்ன சேவடி.
போல புரைய ஒப்ப உறழ இயைய ஏய்ப்ப
- “போல புரைய ஒப்ப உறழ இயைய ஏய்ப்ப மான கடுப்ப இயைய நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” எனக் கூறும் நூல் = நன்னூல்.
விரியுவமை என்றால் என்ன
- உவமை, உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) ஆகிய இரண்டனையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை எனப்படும்.
- உவம உருபு வெளிப்படையாக வருவது = விரியுவமை.
- உவம உருபு வெளிப்படையாக வருவது = உவமைத் தொடர்.
- விரியுவமையை “உவமைத் தொடர்” எனவும் கூறுவர்.
- எ.கா:
- தேன்போன்ற மொழி.
- தேன் = உவமை.
- மொழி = உவமேயம்
- போன்ற = உவம உருபு..
- இத்தொடரில் வெளிப்பட வந்துள்ளதனால் இது, விரியுவமை எனப்படும். இஃது, உவமைத் தொடராகும்.
தொகையுவமை என்றால் என்ன
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது “தொகை உவமை” என்பர்.
- தொகையுவமையை “உவமத்தொகை” என்றும் கூறுவர்.
- உவம உருபு மறைந்து வருவது = தொகையுவமை.
- உவம உருபு மறைந்து வருவது = உவமத்தொகை.
- எ.கா:
- தேன்மொழி.
- இதில் உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
உவமை உருவக மாற்றம்
- பவளவாய் ( பவளம் போன்ற வாய் )
- இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
- பவளம் = உவமை.
- வாய் = உவமேயம் (உவமையை ஏற்கும் பொருள்).
- இவ்வாறு, ஒருபொருளை அதனைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
- வாய்ப்பவளம்.
- இத்தொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
- உவமைத்தொகையில் முதல் பகுதி ( பவளம் ) உவமானமாகவும் அதன் அடுத்த பகுதி உவமேயமாகவும் ( வாய் ) அமையும். உருவகத்தில், உவமேயம் முதல் பகுதி; உவமை அடுத்த பகுதியாக இருக்கும்.
- இவ்வாறு உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே உருவகம்.
உவமை உருவகம்
உவமை | உருவகம் |
---|---|
அமுதமொழி | மொழியமுது |
கயற்கண் | கண்கயல் |
தேன்தமிழ் | தமிழ்த்தேன் |
பூவிரல் | விரல்பூ |
மதிமுகம் | முகமதி |
மலரடி | அடிமலர் |
முத்துப்பல் | பல்முத்து |
விற்புருவம் | புருவவில் |
மலர்ப்பாதம் | பாதமலர் |
- கம்பராமாயணம்
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது
- நற்றிணை
- புறநானூறு
- பேச்சுக்கலை
- வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
- பெரியபுராணம்
- திரைப்படக்கலை உருவான கதை