10TH TAMIL செயற்கை நுண்ணறிவு
10TH TAMIL செயற்கை நுண்ணறிவு
- “தனிநபர் கணினிகள்” (Personal Computers) வளர்ச்சி பெற்ற ஆண்டு = 1980
- மின்னணுப் புரட்சிக்கு காரணமாக அமைந்தவை = தனிநபர் கணினி வளர்ச்சி + இணையப் பயன்பாட்டின் பிறப்பும்
செயற்கை நுண்ணறிவு
- தற்போதைய மின்னணு உலகை மிகுதியாக ஆளும் தொழில்நுட்பம் = செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இதழியலில் செயற்கை நுண்ணறிவு
- இதழியல் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றிய மிகப்பெரிய மாற்றம் = “இயல்பான மொழிநடையை உருவாக்குதல்” (Natural Language Generation).
- இதற்கு “வோர்டுஸ்மித்” (எழுத்தாளி) என்று பெயர்.
- தகவல்களை கொடுத்தால் பொது, வோர்டுஸ்மித் சில நிமிடங்களில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.
மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும்
- இது வரை இந்த உலகை ஆண்டு கொண்டிருந்தது = மென்பொருள் (Software)
- இனி இவ்வுலகை ஆளப்போவது = செயற்கை நுண்ணறிவு.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன
- செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program) என்பதாகும்.
- இது தானாகவே கற்றுக் கொள்ளும் திறன் கொண்டது.
- புதிய புதிய சூழ்நிலைகளில், மனிதரைப் போல தானே முடிவு எடுக்கும் திறன் கொண்டது.
செயற்கை நுண்ணறிவின் சிறப்பு
- செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் சிறப்பு = செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களால் பார்க்கவும், கேட்கவும், புரிந்துக்கொள்ளவும் முடியும்.
- மனிதனால் கடினம் என்று கருதப்படும் செயல்களையும் செய்யும் திறன் கொண்டது செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்.
மெய்நிகர் உதவியாளர்
- திறன்பேசிகளில் இயங்கும் உதவி மென்பொருள் = மெய்நிகர் உதவியாளர் (Virtual Assistant)
- இது மனிதனைப் போல, நம்முடன் உரையாடி, உதவிகளை செய்யும்.
- இது நாம் கேட்பதை உலாவியில் (browser) தேடும்.
காணொலிகளில் செயற்கை நுண்ணறிவு
- காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் (Video Editing) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
- இதனால் நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
உரையாடல் மென்பொருள்
- இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான “பாரத ஸ்டேட் வங்கி” தனது வாடிக்கை யாளர்களுக்காக “இலா” (Ela = Electronic Live Assistant) என்னும் உரையாடல் மென்பொருளை (Chatbot) உருவாக்கி உள்ளது.
- இது ஒரு வினாடிக்கு பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் திறன் கொண்டது.
தரவு அறிவியலாளர்கள்
- செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் “தரவு அறிவியலாளர்கள்” (Data Scientists) தேவை அதிகரித்துள்ளது.
- இயந்திரக் கற்றல் வல்லுனர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
நான்காவது தொழிற்புரட்சி
- இப்போது கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் (Digital Literacy) மின்னணுச் சந்தைப்படுத்தலும் (Digital Marketing) அறிந்திருப்பது அவசியமாகும்.
- எதிர்காலத்தில் நம்மை வளப்படுத்த உதவுபவை = செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் + நான்காவது தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அறிவும்.
செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன்
- 2016 இல் ஐ.பி.எம் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கணினி = வாட்சன்.
- இது சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்து.
இயந்திர மனிதர்கள்
- சீனாவில் மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
- அவை அங்கு வரும் மனிதர்களுடன் உரையாடி, நோயாளிகளின் குரலையும்,, முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுகிறது.
இயந்திர மனிதன் “பெப்பர்”
- ஜப்பானில் “பெப்பர்” என்ற பெயரில் இயந்திர மனிதனை உருவாக்கிய நிறுவனம் = சாப்ட்வங்கி.
- இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ ஆகும்.
- வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்பிற்கு என மூன்று வகைகளில் இது கிடைக்கிறது.
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு
- சீன நாட்டில் ‘காண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது.
- பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று.
- அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
- அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது.
- அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது.
- இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- கோபல்லபுரத்து மக்கள்