10TH TAMIL நிறுத்தற்குறிகள்
10TH TAMIL நிறுத்தற்குறிகள்
- இன்றுமுதல், தோசைக்குத் துவையல் இல்லை.
- இன்று, முதல்தோசைக்குத் துவையல் இல்லை.
- முதல் தொடர் இன்றுதொடங்கித் தோசைக்குத் துவையல் இல்லை எனவும், அடுத்ததொடர் முதல் தோசைக்கு மட்டும் துவையல் இல்லை எனவும் வெவ்வேறு பொருள் தருகிறதன்றோ? இரண்டு தொடரும் ஒன்றே ஆயினும், இருவேறு பொருள்கள் தரக் காரணம் நிறுத்தற்குறிகள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
காற்புள்ளி ( , )
- பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிகளுக்குமுன், ஆதலால், ஆகவே முதலிய சொற்களின்பின், முகவரியில் இறுதிவரி தவிர்த்த பிற இடங்களில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
- எ.கா:
- நிலம், நீர், தீ, காற்று, வான் என்பன ஐம்பூதங்கள்.
- மகனே, நான் சொல்வதைக் கேள்.
அரைப்புள்ளி ( ; )
- ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.
- எ.கா:
- சிலப்பதிகாரம், செந்தமிழ்க் காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தரையும் பாடும் காப்பியம்.
- இளமுருகு என்பானிடம் நிறைய அறிவுண்டு; பொறுமை இல்லை.
முக்காற் புள்ளி ( : )
- ஒருவர் கூற்றை விளக்குதல், சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலியன விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்காற்புள்ளி இடுதல் வேண்டும்.
- எ.கா:
- முப்பால் என்பன வருமாறு: அறம், பொருள், இன்பம்.
- மத்தேயு, 8 : 6
- பெயர் : மணிமேகலை
முற்றுப்புள்ளி ( . )
- சொற்றொடர் இறுதி, முகவரி இறுதி, நாள் இறுதி, சொற் குறுக்கம், பெயர்த் தலைப்பெழுத்து முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி இடப்படும்.
- எ.கா:
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
- 10.2003.
- தொல். சொல். 25.
வினாக்குறி ( ? )
- ஒரு வினாத்தொடர் முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் வினாக்குறி இடுதல் வேண்டும்.
- எ.கா:
- அங்கே படிப்பவர் யார்?
- நீ வருவாயா?
உணர்ச்சிக்குறி ( ! )
- வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின்பின் (!) இக்குறி இடுதல் வேண்டும்.
- எ.கா:
- என்னே, இதன் பெருமை!
- பாம்பு பாம்பு!
- வருக வருக!
- வாழ்க வாழ்க!
ஒற்றை மேற்கோள்குறி ( ‘ )
- இக்குறி, தற்சுட்டின்கண்ணும் ( ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறித்தல்), பிறர் கூற்றாக வரும் இடத்தும், கட்டுரைப் பெயரும், நூற்பெயர் வருமிடத்தும் ஒற்றை மேற்கோள்குறி வரும்.
- எ.கா:
- ‘ஏ’ என்று சொன்னான்.
- ‘செய்யும்’ என்பது பெயரெச்ச வாய்பாடுகளுள் ஒன்று.
- ‘இணரெரி தோய்வன்ன இன்னா செய்பவர்.
- கம்பர், ‘கம்பராமாயணம்’ என்னும் காவியம் படைத்தார்.
இரட்டை மேற்கோள்குறி ( ” )
- நேர்கூற்றுத் தொடர்களிலும் மேற்கோள் தொடர்களிலும் இரட்டைமேற்கோள் குறி இடப்படும்.
- எ.கா:
- இராமன், “நாளை வருகிறேன்” என்றான்.
- “ஒழுக்கமுடைமை குடிமை” என்றார் திருவள்ளுவர்.
- வல்லினம் மிகும் இடங்கள்
- வல்லினம் மிகா இடங்கள்
- திருக்குறள்
- தேவாரம்
- தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்
- பொருள் இலக்கணம்
- சீறாப்புராணம்
- காந்தியம்