10TH TAMIL பெருமாள் திருமொழி
10TH TAMIL பெருமாள் திருமொழி
- மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பெருமாள் திருமொழி நூல் குறிப்பு
- நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள திருமொழி = பெருமாள் திருமொழி.
- இதன் ஆசிரியர் = குலசேகர ஆழ்வார்.
- இவரின் காலம் = எட்டாம் நூற்றாண்டு.
- பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 105 பாடல்கள்.
- “வித்துவக் கோட்டம்மா” என குலசேகர ஆழ்வார் பாடியது = வித்துவக்கோட்டில் உள்ள “உய்யவந்த பெருமாளை” அன்னையாக உருவகப்படுத்தி பாடியுள்ளார்.
அருஞ்சொற்பொருள்
- சுடினும் = சுட்டாலும்
- மாளாத = தீராத
- மாயம் = விளையாட்டு
வித்துவக்கோடு என்பது யாது
- வித்துவக்கோடு என்பது கேரள மாநிலத்தின் பாலக்காடு அருகே உள்ள ஓர் ஊர் ஆகும்.
- வித்துவக்கோடில் உள்ள இறைவன் = உய்யவந்த பெருமாள்.
- குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள “உய்யவந்த பெருமாளை” அன்னையாக உருவகப்படுத்தி இப்பாடலை பாடியுள்ளார்.
பெருமாள் திருமொழியில் அறிவியல் கருத்து
- “மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே” என்ற அறிவியல் கருத்தை கூறும் பாடல் = குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் உள்ளது.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- கோபல்லபுரத்து மக்கள்
SUPER