11TH TAMIL காற்றில் கலந்த பேரோசை
11TH TAMIL காற்றில் கலந்த பேரோசை
- ஒருசமயம் திருவாங்கூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவுவதற்காக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஜீவா அவர்கள், தனது சக மாணவர்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு உதவ நாஞ்சில் நாட்டின் தோவாளை என்னும் இடத்தில் நிதி திரட்டினார்.
- ஜீவா என்றழைக்கப்படும் ப. ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்
- சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
- ஜீவா அவர்களின் கூற்று
- மனிதச் சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாதே பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு
- செய்து காட்டுகிறேன். என்னைப் பயன்படுத்திக்கொள். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக் கொள்.
- கைம்மாறு வேண்டாம்.
- என்னை நீ பயன்படுத்திக்கொள்வதே நீ எனக்குத் தரும் கைமாறு.
- ஒரு சில கருத்துக்களை விரிவாக சொல்லி புரியவைத்து விட்டால் போதும் என்பது அவர் எண்ணம்.
- “நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டே இருப்பேன்” என்பார்.
- “என் வாழ்வு என் கைகளில்” என்ற நம்பிக்கை உடையவர்.
சுந்தர ராமசாமி
- நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்.
- பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர்.
- ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகளை எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
- செம்மீன், தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
- ஜீவா பற்றி இவர் எழுதிய கட்டுரை = காற்றில் கலந்த பேரோசை