11TH TAMIL சங்கரதாசு சுவாமிகள்

11TH TAMIL சங்கரதாசு சுவாமிகள்

11TH TAMIL சங்கரதாசு சுவாமிகள்
11TH TAMIL சங்கரதாசு சுவாமிகள்

11TH TAMIL சங்கரதாசு சுவாமிகள்

  • நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கினார்.
  • இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடைய 16 ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.
  • இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24.
  • வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக்குழிப்புகளின்’ சொற்சிலம்பங்களைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

சமரச சன்மார்க்க சபை

  • சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார்.
  • இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி. கிட்டப்பா நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

  • மேடை நாடகம் தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.
  • இங்கு உருவானவர்களே டி.கே.எஸ். சகோதரர்கள்.

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

  • நாடகத்தின் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவைமிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத் துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்‘ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

Leave a Reply