12 TAMIL திருக்குறள்

12 TAMIL திருக்குறள்

12 TAMIL திருக்குறள்
12 TAMIL திருக்குறள்

அணி

நிரல்நிறை அணி அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

ஏகதேச உருவாக அணி சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்

12 TAMIL திருக்குறள்

  • திரு + குறள் = திருக்குறள்
  • சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
  • குறள் = இரண்டடி வெண்பா
  • திரு = சிறப்பு அடைமொழி
  • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவி ஆகுபெயர்” ஆகும்.
  • குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்தமிழர் திருமறை; மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல்
  • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
  • இந்நூலின் பெருமையை உணர்த்தும் வாசகங்கள் = 1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி, 2. பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
  • நாள் என்பது “நாலடியாரையும்”, இரண்டு என்பது “திருக்குறளையும்” குறிக்கும்

நூல் அமைப்பு

பால்

அதிகாரம் இயல் இயல்களின் பெயர்கள்
அறம் 38 4

பாயிரவியல் (04)

இல்லறவியல் (20)

துறவறவியல் (13)

ஊழியல் (01)

பொருள்

70 3 அரசு இயல் (25)

அமைச்சு இயல் (32)

ஒழிபியல் (13)

இன்பம் 25 2

களவியல் (07)

கற்பியல் (18)

திருக்குறளுக்கு உரை எழுதியோர்

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிதி பரிமேலழகர் திருமலையார்

மள்ளர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்.

திருக்குறள் புகழ்மொழிகள்

  • பாரதியார் = வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
  • பாரதிதாசன் = வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

சிறப்பு

  • ஏட்டுச் சுவடியில் இருந்து திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு = 1812
  • தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவி உள்ளது
  • திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது

அருஞ்சொற்பொருள்

  • வையம் – உலகம்
  • அரிது – இயலாது
  • மகற்கு – மகனுக்கு
  • வெகுளி – கோவம்

இலக்கணக்குறிப்பு

  • அறன் – ‘அறம்’ என்பதன் ஈற்றுப்போலி
  • இல் – இடவாகுபெயர்
  • இல்வாழ்க்கை – மூன்றாம் வேற்றுமை இருப்பும் பயனும் உடன்தொக்க தொகை
  • வாழ்பவன் – குறிப்பு வினையாலணையும் பெயர்
  • வானுறையும் – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • வையகமும் வானகமும் – எண்ணும்மை
  • உதவி – தொழிற்பெயர்
  • வையகம் – காரணப்பெயர்
  • செய்த – இறந்தகாலப் பெயரெச்சம்
  • தூக்கார் – முற்றெச்சம்
  • தூக்கின் – வினையெச்சம்
  • செயின் – வினையெச்சம்
  • சால்பு – பண்புப்பெயர்
  • தினைத்துணை, பனைத்துணை – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
  • மறப்பது – எதிர்காலத் தொழிற்பெயர்
  • கொன்றார் – வினையாலணையும் பெயர்
  • உய்வு – தொழில் ஆகுபெயர்
  • படுபயன் – வினைத்தொகை
  • வெஃகி – வினையெச்சம்
  • அஃகாமை – ஆகுபெயர்
  • வெஃகாமை – தொழிற்பெயர்
  • உலகு – இடவாகு பெயர்
  • காப்பான் – வினையாலணையும் பெயர்
  • சினம் காப்பான் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • மறத்தல் – வியங்கோள் வினைமுற்று
  • காக்க – வியங்கோள் வினைமுற்று
  • சுடும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று

 

 

 

Leave a Reply