8TH TAMIL தொடர் வகைகள்
8TH TAMIL தொடர் வகைகள்
- தொடர்கள் பொருள் வகையில் நான்கு வகைப்படும். அவை,
- செய்தித் தொடர்
- வினாத் தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
செய்தித் தொடர் என்றால் என்ன
- ஒரு செய்தியை தெளிவாக கூறும் தொடர் செய்தித் தொடர் எனப்படும்.
- எ.கா:
- கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
வினாத் தொடர் என்றால் என்ன
- ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத் தொடர் எனப்படும்.
- எ.கா:
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர் என்றால் என்ன
- ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் எனப்படும்.
- எ.கா:
- இளமையில் கல் = ஏவல்
- உன் திருக்குறள் நூலைத் தருக = வேண்டுதல்
- உழவுத்தொழில் வாழ்க = வாழ்த்துதல்
- கல்லாமை ஒழிக = வைதல்
உணர்ச்சித் தொடர் என்றால் என்ன
- உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
- எ.கா:
- உவகை = அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!
- அச்சம் = ஆ! புலி வருகிறது!
- அவலம் = பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டன
- வியப்பு = ஆ! மலையின் உயரம் தான் என்னே!
முக்கிய தினங்கள்
- உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாள் = சூலை 28
- உலக ஈர நில நாள் = பிப்ரவரி 2
- உலக ஓசோன் நாள் = செப்டம்பர் 16.
- உலக இயற்கை நாள் = அக்டோபர் 3.
- உலக வனவிலங்கு நாள் = அக்டோபர் 6.
- உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் = அக்டோபர் 5.
8TH TAMIL