8TH TAMIL வினைமுற்று

8TH TAMIL வினைமுற்று

8TH TAMIL வினைமுற்று
8TH TAMIL வினைமுற்று

8TH TAMIL வினைமுற்று

  • செயலை “வினை” என்றும் கூறுவர்.
  • ஒரு செயலை குறிக்கும் சொல் “வினைச்சொல்” எனப்படும்.
  • எ.கா:
    • படிதான், ஆடினான்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வினைமுற்று என்றால் என்ன

  • எ.கா:
    • மலர்விழி எழுதினாள்
    • கண்ணன் பாடுகிறான்
    • மாடு மேயும்
  • இவற்றில் வினைச் சொற்கள் = எலுதுனால், பாடுகிறான், மேயும்.
  • இச்சொற்கள் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது.
  • இவ்வாறு பொருள் முற்று பெற்ற வினைச்சொற்களை “முற்றுவினை” அல்லது “வினைமுற்று” என்பர்.
  • வினைமுற்று வரும் இடங்கள்,
    • ஐந்து பால்
    • மூன்று காலம்
    • மூன்று இடம்
  • வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று எத்தனை வகைப்படும்

  • வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை,
    • தெரிநிலை வினைமுற்று
    • குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன

  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையானவை = ஆறு. அவை,
    • செய்பவர்
    • கருவி
    • நிலம்
    • செயல்
    • காலம்
    • செய்பொருள்
  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையாவையான “செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்” ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • எ.கா:
    • மாணவி கட்டுரை எழுதினாள்.
      • செய்பவர் = மாணவி
      • கருவி = தாளும் எழுதுகோலும்
      • நிலம் = பள்ளி
      • காலம் = இறந்தகாலம்
      • செய்பொருள் = கட்டுரை
      • செயல் = எழுதுதல்

குறிப்பு வினைமுற்று என்றால் என்ன

  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு “காலத்தை வெளிப்படையாக காட்டாது” செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, “குறிப்பு வினைமுற்று” எனப்படும்.
  • காலத்தை வெளிப்படையாக காட்டாத வினைமுற்று = குறிப்பு வினைமுற்று
  • செயலை செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று = குறிப்பு வினைமுற்று.
  • எ.கா:
    • பொருள் = பொன்னன்
    • இடம் = தென்னாட்டார்
    • காலம் = ஆதிரையான்
    • சினை = கண்ணன்
    • பண்பு (குணம்) = கரியன்
    • தொழில் = எழுத்தன்

பிற வினைமுற்றுகள்

  • தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் தவிர ஏவல் வினைமுற்று, வியன்கோல் வினைமுற்று போன்ற பிற வகைகளும் உள்ளன.

ஏவல் வினைமுற்று என்றால் என்ன

  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.
  • எ.கா:
    • பாடம் படி
    • கடைக்குப் போ.
  • ஏவல் வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை,
    • ஒருமை ஏவல் வினைமுற்று
    • பன்மை ஏவல் வினைமுற்று
  • ஒருமை ஏவல் வினைமுற்று
    • எழுது = ஒருமை
  • பன்மை ஏவல் வினைமுற்று
    • எழுதுமின் / எழுதுங்கள் = பன்மை

வியங்கோள் வினைமுற்று

  • வியங்கோள் வினைமுற்று எதனை பொருள்களில் வரும் = நான்கு
  • “வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல்” ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று “வியங்கோள் வினைமுற்று” எனப்படும்.
  • வியங்கோள் வினைமுற்று “இரு திணைகள், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும்” காட்டும்
  • விகுதி பெற்றே வரும் வினைமுற்று = வியங்கோள் வினைமுற்று
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள் = க, இய, இயர், அல்

ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று வேறுபாடுகள்

8TH TAMIL வினைமுற்று
8TH TAMIL வினைமுற்று

முன்னிலையில் வரும்

இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை

கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

விகுதி பெற்றே வரும்.

 

 

8TH TAMIL

 

Leave a Reply