9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Table of Contents

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

  • இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.
  • இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.
  • விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்தவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு போற்றத்தக்கது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இந்திய தேசிய இராணுவம்

  • இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேய படைகள் ஜப்பானிடம் சரணடைந்த இடம் = மலேயா.
  • இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேய படைகள் ஜப்பானிடம் சரணடைந்த நாள் = 1942 பிப்ரவரி 15.
  • சரணடைந்த ஆங்கிலேய படையில் இந்தியர்களும் இருந்தனர்.
  • சரணடைந்த இந்தியர்களை கொண்டு, ஜப்பானியர்கள் “மோகன்சிங்” என்பவர் தலைமையில் “இந்திய தேசிய இராணுவம்” (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்.
  • ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் = மோகன்சிங்.
  • யாருடைய தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது = மோகன்சிங்.
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

இந்திய தேசிய இராணுவத்தில் ஒற்றர்படை

  • அக்காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மலேயா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்காகச் சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்.
  • இந்திய தேசிய இராணுவத்தில் பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
  • அதில் ஒன்றுதான் ஒற்றர்படை.

ஒற்றர் படையில் தமிழர்கள்

  • ஒற்றர் படையில் இருந்த வீரர்களை, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தைப் பற்றி ஒற்றறிய நீர்மூழ்கிக்கப்பல் மூலம் கேரளாவிற்கும் குஜராத்திற்கும் அனுப்பினர்.
  • சிலரைத் தரைவழியில், பர்மாக் காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினர்.
  • இந்திய இராணுவம் அவர்களைக் கைது செய்து சென்னைச் சிறைக்கு அனுப்பியது; பலருக்கு மரண தண்டனை அளித்தது.
  • ஒற்றறிய தரை வழியாக எவ்வழியில் வந்தனர் = பர்மா காடுகள் வழியாக.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற தினம் = 1943 ஜூலை 9 ஆம் தினம்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்க எங்கிருந்து எங்கு வந்தார்? = ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்க எத்தனை நாள் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து வந்தார்? = 91 நாள்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்க ஜெர்மனியில் இருந்து எப்படி வந்தார் = நீர்மூழ்கி கப்பலில் 91 நாள் பயணம் செய்து சிங்கப்பூர் வந்தடைந்தார்.

டெல்லி நோக்கி செல்லுங்கள்

  • “டெல்லி நோக்கி செல்லுங்கள்” என்று கூறியவர் = நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • “டெல்லி சலோ” என்று முழங்கியவர் = நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

பசும்பொன் முத்துராமலிங்கனார்

  • நேதாஜி தலைமையிலான படைக்கு தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.
  • “நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்” என்று கூறியவர் = பசும்பொன் முத்துராமலிங்கனார்
  • “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்று கூறியவர் = நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்

  • இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர் = தில்லான்.
  • இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
  • “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று கூறியவர் = இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான்.

ஜான்சிராணி பெண்கள் படை

  • இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த பெண்கள் படையின் பெயர் = ஜான்சிராணி பெண்கள் படை.
  • ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர் = டாக்டர் லட்சுமி.
  • இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த பெண்கள் படையின் தலைவர் = டாக்டர் லட்சுமி.
  • “ஜானகி, இராஜாமணி”போன்ற தமிழ் பெண்மணிகள் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தினர்.
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

நேதாஜியின் தற்காலிக அரசில் தமிழர்கள்

  • நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் = கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்.

கேப்டன் தாசன்

  • சிறந்த வீரர்களை உருவாக்க எத்தனை பேரை நேதாஜி, ஜப்பானுக்கு அனுப்பினார் = 45 பேர்.
  • சிறந்த வீரர்களை உருவாக்க 45 பேரை தேர்வு செய்து நேதாஜி எங்கு அனுப்பினார் = ஜப்பானின் டோக்கியோ நகருக்கு.
  • இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவர்.
  • இதில் குறிப்பிடத்தக்கவர் = கேப்டன் தாசன் ஆவார்.
  • இவர் சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டின் தூதராக பணியாற்றினார்.
  • நேதாஜியின் படையில் இருந்து, சுதந்திரத்திற்கு பிறகு செசல்ஸ் நாட்டின் தூதராக பணியாற்றியவர் = கேப்டன் தாசன்.

பர்மா வழியாக இந்தியா

  • நேதாஜியின் படை, ஆங்கிலேயரை எதிர்க்க பர்மா வழியாக இந்தியா வர திட்டமிட்டிருந்தது.
  • இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தோடு சேர்ந்து, ஆங்கிலேயரோடு போரிடப் பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிட்டது.

தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது

  • தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.
  • ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று சர்ச்சில் கூறினார்.
  • ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர் = இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.

தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்

  • அதற்கு நேதாஜி “இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” என்று பதில் கூறினார்.
  • “இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” என்று கூறியவர் = நேதாஜி.
  • “இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” என்று நேதாஜி யாருக்கு கூறினார் = இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.

மூவண்ணக் கொடி ஏற்றுதல்

  • இந்திய தேசிய இராணுவம் 1944ஆம் ஆண்டு மார்ச் 18அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.
  • இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேயரை வென்று மூவண்ணக் கொடியை ஏற்றிய தினம் = 1944ஆம் ஆண்டு மார்ச் 18
  • இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேயரை வென்று எங்கு மூவண்ணக் கொடியை ஏற்றியது = மணிப்பூர்ப் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற இடத்தில்.
  • ஆனால், அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும் சேர்ந்து போரிட்டதால் இந்த வெற்றி நிலைபெற்று நீடிக்கவில்லை.
  • இப்போரில் ஒரு இலட்சம் இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர்.

சென்னை சிறையில் தூக்கு

  • இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள், 1943 – 45ஆம் ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1944ஆம் ஆண்டு பதினெட்டே வயதான இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முதல்நாள் இரவு, “நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்று கூறினார்.
  • மரணதண்டனை பெற்ற அப்துல்காதர் பின்வருமாறு கூறினார். “வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்”.
  • “நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறியவர் = அப்துல் காதர்.

இந்திய தேசிய இராணுவத்தின் வான்படைப் பிரிவு

  • இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • அந்த 45பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் “டோக்கியோ கேடட்ஸ்”.
  • இம்பீரியல் மிலிட்டரி அகாடமி இருந்த இடம் = ஜப்பான்.
  • நேதாஜியால் தேர்வு செய்யப்பட 45 பேர் கொண்ட படையின் பெயர் = டோக்கியோ கேடட்ஸ்.
  • போர்ச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது.
  • பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து, சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று, பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் “கியூசு” தீவை அடைந்தனர்.

நேதாஜியின் பொன் மொழிகள்

  • “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பது தான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்” என்று கூறியவர் = நேதாஜி.
  • “மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்” என்று கூறியவர் = நேதாஜி.
  • “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்” என்று கூறியவர் = நேதாஜி.
  • “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குறறமாகும்” என்று கூறியவர் = நேதாஜி
  • “எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்” என்று கூறியவர் = நேதாஜி
  • “இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்” என்று கூறியவர் = நேதாஜி
  • “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா?” என்று கேட்டவர் = நேதாஜி.
  • “துன்பமும் தியாகமும் தான் விடுதலை, சுதந்திரத்திற்கான விலை” என்று கூறியவர் = நேதாஜி.

இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு

  • பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர்.
  • இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன.
  • “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலின் ஆசிரியர் = பேராசிரியர் மா.சு. அண்ணாமலை.

 

Leave a Reply