9TH TAMIL நாச்சியார் திருமொழி
9TH TAMIL நாச்சியார் திருமொழி
- பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.
- இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது.
- இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது.
- இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது.
- ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர்.
- அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தரும் கவிதைகளை படைத்தவர் = ஆண்டாள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- தீபம் = விளக்கு
- சதிர் = நடனம்
- தாமம் = மாலை
இலக்கணக்குறிப்பு
- முத்துடைத்தாமம் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
பாடலின் பொருள்
- மது என்ற அரக்கனை அழித்தவன் = கண்ணன்
ஆண்டாள் ஆசிரியர் குறிப்பு
- திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர்.
- அவருள் ஆண்டாள் மட்டுமே பெண்.
- இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பெற்றார்.
- இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
- ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
- இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
- நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
- நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 143.
- நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.
- புறநானூறு
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை