9TH TAMIL இராவண காவியம்
9TH TAMIL இராவண காவியம்
- பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை; அடர்ந்து வளர்ந்த பசுமரங்கள்; நீர் நிறைந்த நதிக்கரைகள்;
- பச்சை போர்த்திய புல்வெளிகள்; துள்ளித் திரியும் மானினங்கள்;
- மயில்கள், குயில்கள், கிளிகள் பறந்து திரியும் பறவைகளென இத்தகு அழகிய சூழலைக் கண்டு மனம் மகிழ்ந்ததுண்டா?
- அழகைச் சுவைத்தால் மனம் புத்துணர்வு பெறும்; எண்ணம் வளமை பெறும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாடல் பொருள்
குறிஞ்சி |
|
|
|
முல்லை |
|
|
|
பாலை |
|
|
|
மருதம் |
|
|
|
நெய்தல் |
|
|
அருஞ்சொற்பொருள்
- மைவனம் = மலைநெல்
- முருகியம் = குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை = பூக்களை உடைய கிளை
- சிறை = இறகு
- சாந்தம் = சந்தனம்
- பூவை = நாகணவாய்ப் பறவை
- பொலம் = அழகு
- கடறு = காடு
- முக்குழல் = கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
- பொலி = தானியக்குவியல்
- உழை = ஒரு வகை மான்.
- வாய்வெரீஇ = சோர்வால் வாய் குழறுதல்
- குருளை = குட்டி
- இனைந்து = துன்புறுதல்
- உயங்குதல் = வருந்துதல்
- படிக்குஉற = நிலத்தில் விழ
- கோடு = கொம்பு
- கல் = மலை
- முருகு = தேன், மணம், அழகு
- மல்லல் = வளம்
- செறு = வயல்
- கரிக்குருத்து = யானைத்தந்தம்
- போர் = வைக்கோற்போர்
- புரைதப = குற்றமின்றி.
- தும்பி = ஒருவகை வண்டு
- துவரை = பவளம்
- மரை = தாமரை மலர்
- விசும்பு = வானம்
- மதியம் = நிலவு
இலக்கணக்குறிப்பு
- பைங்கிளி = பண்புத்தொகை
- பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும் = எண்ணும்மைகள்.
- இன்னிளங்குருளை = பண்புத்தொகை
- அதிர்குரல் = வினைத்தொகை
- மன்னிய = பெயரெச்சம்
- வெரீஇ = சொல்லிசை அளபெடை
- கடிகமழ் = உரிச்சொற்றொடர்
- மலர்க்கண்ணி = மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை;
- எருத்துக்கோடு = ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரைபொரு = இரண்டாம் வேற்றுமைத் தொகை
- மரைமுகம் = உவமைத்தொகை
- கருமுகில் = பண்புத்தொகை
- வருமலை = வினைத்தொகை
இராவண காவியம் நூல் குறிப்பு
- இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
- “தனித்தமிழ்ப் பெருங்காப்பியம்” எனப்படும் நூல் = இராவண காவியம்.
- இராவண காவியம் நூலில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = 5.
- இராவண காவியம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3100.
- இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
- இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
- தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
- இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.
இராவண காவியம் நூல் பற்றி அறிஞர் அண்ணா
- “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா.
புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு
- இராவண காவியம் நூலின் ஆசிரியர் = புலவர் குழந்தை.
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
- யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
கோர்வை/கோவை
- கோ என்பது வேர்ச்சொல்.
- கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
- எ.கா;
- ஆசாரக்கோவை,
- ஊசியில் நூலைக் கோத்தான்.
- புறநானூறு
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை