9TH TAMIL இராவண காவியம்

9TH TAMIL இராவண காவியம்

9TH TAMIL இராவண காவியம்
9TH TAMIL இராவண காவியம்

9TH TAMIL இராவண காவியம்

  • பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை; அடர்ந்து வளர்ந்த பசுமரங்கள்; நீர் நிறைந்த நதிக்கரைகள்;
  • பச்சை போர்த்திய புல்வெளிகள்; துள்ளித் திரியும் மானினங்கள்;
  • மயில்கள், குயில்கள், கிளிகள் பறந்து திரியும் பறவைகளென இத்தகு அழகிய சூழலைக் கண்டு மனம் மகிழ்ந்ததுண்டா?
  • அழகைச் சுவைத்தால் மனம் புத்துணர்வு பெறும்; எண்ணம் வளமை பெறும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாடல் பொருள்

9TH TAMIL இராவண காவியம்
9TH TAMIL இராவண காவியம்
 

 

குறிஞ்சி

  • அழகிய மயிலானது சிறகை விரித்து ஆடுவதை, குரங்குகள் மிரட்சியுடன் பார்க்கும்.
  • நெருப்பில் இடப்பட்ட சந்தானம், அகில் குச்சிகள் + உலையிட்ட மலை நெல்லரிசி சோற்றின் மணம் + காந்தள் மலரின் மணம் = சேர்ந்து மலை முழுவதும் மணம் பரவி உள்ளது.
 

 

 

முல்லை

  • நாகணவாய் பறவை + குயில் + அழகான வண்டுகள் = பாவிசைத்து பாடின.
  • முல்லை நில மக்களான ஆயர், முக்கனியும், தேனையும் சேகரித்து கொண்டு, “முக்குழல்” இசையால் மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.
  • முக்கனி = மா, பலா, வாழை
  • முக்குழல் = கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்.
  • முதிரை + சாமை + கேழ்வரகு + மணி + குதிரைவாலி நெல் = ஆகியவற்றை முல்லை நில மக்கள் கதிரடித்து மலை போல குவித்து வைத்துள்ளனர்.
  • “பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்” நிலப்பகுதி = முல்லை.
  • கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையை கேட்டு மான்கள் அஞ்சி ஓடின.
 

 

 

 

பாலை

  • பாலை நில வெயிலை தாங்க இயலாமல் “செந்நாய்க்குட்டி” வாய் உலர்ந்து குழறியது.
  • எங்கும் நிழல் இல்லாததால், இதனை கண்ட தாய் நாய், வெயிலினை தான் தாங்கிக் கொண்டு, தன் நிழலில் குட்டியை இளைப்பாறச் செய்தது.
  • சிறுவர்கள் “மராமலர்களை” மாலையாக அணிந்திருந்தனர்.
  • எருதின் கொம்பு போன்றிருந்த “பாலைக்காயை”, கோலினால் அடித்து விளையாடினர்.
  • அவ்வோசையை கேட்ட பருந்துகள் அஞ்சி பறந்து ஓடின.
 

 

மருதம்

  • மருத நிலத்தில் காட்டாறு வெள்ளத்தை தாங்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும்.
  • மருத நில வயலில் காஞ்சி, வஞ்சி, மலர்கள் பூத்தி நிற்கும்.
  • தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து சிறுவர்கள் விளையாடினர்.
  • தென்னை இளநீர் காய்களை பறித்து, அதனை காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.
 

 

நெய்தல்

  • மலையளவுக்குப் பவளங்களையும், ஒளி முத்துக்களையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டு வந்து குவிப்பர்.
  • தும்பியானாது பெண்களின் முகத்தை தாமரை மலர் என கருதி செல்லும்.
  • இது முழுநிலவை தொடர்ந்து செல்லும் கரு மேகங்கள் போல இருக்கும்.

அருஞ்சொற்பொருள்

  • மைவனம் = மலைநெல்
  • முருகியம் = குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை = பூக்களை உடைய கிளை
  • சிறை = இறகு
  • சாந்தம் = சந்தனம்
  • பூவை = நாகணவாய்ப் பறவை
  • பொலம் = அழகு
  • கடறு = காடு
  • முக்குழல் = கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
  • பொலி = தானியக்குவியல்
  • உழை = ஒரு வகை மான்.
  • வாய்வெரீஇ = சோர்வால் வாய் குழறுதல்
  • குருளை = குட்டி
  • இனைந்து = துன்புறுதல்
  • உயங்குதல் = வருந்துதல்
  • படிக்குஉற = நிலத்தில் விழ
  • கோடு = கொம்பு
  • கல் = மலை
  • முருகு = தேன், மணம், அழகு
  • மல்லல் = வளம்
  • செறு = வயல்
  • கரிக்குருத்து = யானைத்தந்தம்
  • போர் = வைக்கோற்போர்
  • புரைதப = குற்றமின்றி.
  • தும்பி = ஒருவகை வண்டு
  • துவரை = பவளம்
  • மரை = தாமரை மலர்
  • விசும்பு = வானம்
  • மதியம் = நிலவு

இலக்கணக்குறிப்பு

  • பைங்கிளி = பண்புத்தொகை
  • பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும் = எண்ணும்மைகள்.
  • இன்னிளங்குருளை = பண்புத்தொகை
  • அதிர்குரல் = வினைத்தொகை
  • மன்னிய = பெயரெச்சம்
  • வெரீஇ = சொல்லிசை அளபெடை
  • கடிகமழ் = உரிச்சொற்றொடர்
  • மலர்க்கண்ணி = மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை;
  • எருத்துக்கோடு = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கரைபொரு = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மரைமுகம் = உவமைத்தொகை
  • கருமுகில் = பண்புத்தொகை
  • வருமலை = வினைத்தொகை

இராவண காவியம் நூல் குறிப்பு

9TH TAMIL இராவண காவியம்
9TH TAMIL இராவண காவியம்
  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • “தனித்தமிழ்ப் பெருங்காப்பியம்” எனப்படும் நூல் = இராவண காவியம்.
  • இராவண காவியம் நூலில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = 5.
  • இராவண காவியம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3100.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
  • தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
  • இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

இராவண காவியம் நூல் பற்றி அறிஞர் அண்ணா

9TH TAMIL இராவண காவியம்
9TH TAMIL இராவண காவியம்
  • “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா.

புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு

  • இராவண காவியம் நூலின் ஆசிரியர் = புலவர் குழந்தை.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

கோர்வை/கோவை

  • கோ என்பது வேர்ச்சொல்.
  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா;
    • ஆசாரக்கோவை,
    • ஊசியில் நூலைக் கோத்தான்.

 

 

Leave a Reply