9TH TAMIL சிறுபஞ்சமூலம்
9TH TAMIL சிறுபஞ்சமூலம்
- மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே.
- காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன.
- அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான் |
- “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிறுபஞ்சமூலம்.
- “மூவாது மூத்தவர், நூல் வல்லார்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிறுபஞ்சமூலம்.
- “பூவாது காய்க்கும் மரம் உள” என்னும் சிறுபஞ்சமூலம் பாடலில் பயின்று வரும் அணி = உவமை அணி.
அருஞ்சொற்பொருள்
- மூவாது = முதுமை அடையாமல்
- நாறுவ = முளைப்ப
- தாவா = கெடாதிருத்தல்
இலக்கணக்குறிப்பு
- அறிவார், வல்லார் = வினையாலணையும் பெயர்கள்
- விதையாமை, உரையாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
- தாவா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
சிறுபஞ்சமூலம் நூல் குறிப்பு
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
- அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
- அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
- ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
- அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
- இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
- அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன.
காரியாசான் ஆசிரியர் குறிப்பு
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
- காரி என்பது இயற்பெயர்.
- ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
சாதனைக்கு வயது தடையன்று
- 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
- 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
- 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
- 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
- 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை