8TH TAMIL தமிழர் மருத்துவம்
8TH TAMIL தமிழர் மருத்துவம்
- “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர்.
- அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.
- தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.
- தமிழர்கள் மரபு சார்ந்த மருத்துவ முறையை பின்பற்றி வாழ்ந்தனர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மருத்துவத்தில் பழந்தமிழர்கள்
- மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் “யோகம்” முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.
தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம்
- நிறைந்த பண்பாடுகளும், தத்துவங்களும் அடங்கிய நிலம், தமிழரது நிலம்.
- தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
- நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை தெளிவாக விளக்கினர்.
- தமிழர் மருத்துவமானது நாட்டு வைத்தியமாகவும், பாட்டி வைத்தியமாகவும், மரபு சார்ந்த வைத்தியமாகவும் சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போனதற்கு காரணம்
- தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போனதற்கு காரணங்கள் = நம் மீது நிகழ்ந்த படையெடுப்புகள், சமண, பௌத்த மத கலப்பு, ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட அறிவியல் மாற்றம்.
- இறுதியில் சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும், நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.
- இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறியது.
வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே
- “வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் சித்தர்கள்.
- வேர், தழை ஆகியவற்றால் குணம் அடையாத போது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும், பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மருந்து என்பது உணவின் நீட்சியே
- தமிழர் மருத்துவத்தில் “மருந்து என்பது உணவின் நீட்சியாகவே இருக்கிறது”.
தமிழர் மருத்துவத்தின் சிறப்பு
- தனித்துவமான பார்வை.
- சூழலுக்கு இசைந்த மருத்துவம்.
- சுற்றுச்சூழலை சிதைக்காது.
- மிக முக்கியமான சிறப்பு = நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான வாழ்வியலையும் சொல்லுகிறது.
- “நோய்நாடி நோய் முதல்நாடி” என்றவர் = திருவள்ளுவர்.
- சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்விற்காக செலவிடும் நேரமாகும்.
நோய் பெருக காரணம்
- இயற்கையை விட்டு விலகியது.
- மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம்.
- உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் மூலம் உருவாகும் உணவு.
தற்போது நடைமுறையில் உள்ள சில மருத்துவ முறைகள்
- சித்த மருத்துவம்
- ஆயுர்வேத மருத்துவம்
- யுனானி மருத்துவம்
- அலோபதி மருத்துவம்.
8TH TAMIL