TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 25/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 25/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
100 பில்லியன் சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் 4-வது நிறுவனம் – இன்போசிஸ்
- இந்தியாவில் 100 பில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நான்காவது நிறுவனம் என்ற சிறப்பை, இன்போசிஸ் எட்டியுள்ளது
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (140 பில்லியன் டாலர்), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (எம்-கேப் $ 115 பில்லியன்) மற்றும் எச்டிஎப்சி வங்கி (எம்-கேப் $ 1 பில்லியன்) ஆகியவை 100 சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் மூன்று நிறுவனங்கள் ஆகும்
உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில், இந்தியா 2-வது இடம்
- குஷ்மேன் & வேக்ஃபீல்டின் 2021 உலகளாவிய உற்பத்தி இடர் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இக்குறியீட்டில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது
- இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து, அமெரிக்காவை திறம்பட முறியடித்து உலகின் இரண்டாவது விரும்பத்தக்க உற்பத்தி இடமாக மாறியுள்ளது.
- இக்குறியீட்டில், முதல் இடத்தில சீனா உள்ளது
உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் 2021
- பொருளாதார புலனாய்வு பிரிவு நிறுவனம் சார்பில், உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் 2021 வெளியிட்டுள்ளது
- இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள நகரங்கள் = கோபன்ஹேகன் (டென்மார்க்), டொராண்டோ (கனடா), சிங்கப்பூர்
- இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள 2 இந்திய நகரங்கள் = புது தில்லி (48-வது இடம்), மும்பை (50-வது இடம்)
மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய இணை செயலாளர்
- சமிபத்தில் மத்திய காபினெட் அமைச்சகம் விஸ்தரிப்பு செய்யும் பொழுது, புதிதாக “கூட்டுறவு அமைச்சகம்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார்
- கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய இணை செயலாளராக, அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்காணிப்பு சக்கரம் – ஐன் துபாய்
- உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்காணிப்பு சக்கரம், “ஐன் துபாய்” என்ற பெயரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் திறக்கப்பட்டுள்ளது
- பார்வையாளர்களை துபாயின் அழகிய வானத்தின் அழகிய காட்சியை அனுபவிப்பதற்காக 250 மீட்டர் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
- இது துபாய் மெரினாவுக்கு அருகிலுள்ள ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ளது.
கடல்சார் கூட்டுப் பயிற்சி
- இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இணைந்து, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் “கடல்சார் கூட்டுப் பயிற்சி” மேற்கொண்டன
- இந்தியாவின் சார்பில் ஐஎன்எஸ் ரன்விஜய் மற்றும் ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இதில் கலந்துக் கொண்டன.
ஆபரேசன் தேவி சக்தி – ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு
- ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் மீட்டு வரும் பணிகளுக்கான நடவடிக்கைக்கு “ஆபரேஷன் தேவி சக்தி” என்று இந்திய வெளியுறவுத்துறை பெயர் சூட்டியுள்ளது.
- இதுவரை இந்திய நாட்டை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட குடிமக்களை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் கடலோரப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி 28 ஆண்டுகளில் அரிப்பைச் சந்தித்துள்ளன
- மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் (என்சிசிஆர்) சமீபத்திய தொழில்நுட்ப அறிக்கையின்படி, கடந்த 28 ஆண்டுகளில் இந்தியாவின் கடலோரப் பகுதியில் 32 சதவிகிதம் கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளன
- ஆனால் 27% கடல் பகுதிகள் விரிவடைந்து உள்ளன.
- மிக அதிகளவு கடற்பரப்பு பாதிப்பிற்கு உள்ளாகிய மாநிலங்கள் = மேற்கு வங்கம் (60%), புதுச்சேரி (56%); கேரளா (41%); தமிழ்நாடு (41%)
- கடற்பரப்பு விரிவடைந்துள்ள மாநிலங்கள் = ஒடிசா கடற்கரை 51 சதவீதம் விரிவடைந்துள்ளது. ஆந்திரா (48%) கர்நாடகா (26%); மேற்கு வங்கம் (25%); தமிழ்நாடு (22%)
- நாட்டின் கடற்கரை 6,631.53 கிலோமீட்டர் நீளம்: 2,135.65 கிலோமீட்டர்கள் பல்வேறு அளவிலான அரிப்புக்கு உள்ளாகி உள்ளன மற்றும் 1,760.06 கிமீ இந்த காலகட்டத்தில் விரிவடைந்தது. கடற்கரையின் 2,700 கிமீ மாற்றம் இன்றி நிலையாக உள்ளது
- நாட்டின் 98 கடலோரப் பகுதிகள் கடல் அரிப்பை எதிர்கொண்டுள்ளன. மிக அதிகமாக தமிழகத்தில் கடல் அரிப்புக்கு ஆளாகக்கூடிய 26 கடலோரப் பகுதிகள் உள்ளன
என்.எஸ். விசுவநாதன் குழு – நகர்ப்புற கூட்டுறவு வங்கி கட்டமைப்பு
- மத்திய ரிசர்வ் வங்கி, நகர்புற கூட்டுறவு வங்கிகளின் கட்டமைப்பை பற்றி ஆராய்ந்து மேம்படுத்தும் நடவடிக்கை கோரி, என்.எஸ்.விஸ்வநாதன் தலைமையில் குழுவினை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது
- இக்குழு நாண்டு அடுக்கு முறையை பரிந்துரை செய்துள்ளது
- அடுக்கு-1- ரூ.100 கோடி வரை வைப்புத்தொகையுடன்
- அடுக்கு-2 100 முதல் 1000 கோடி வரை வைப்புத்தொகையுடன்
- அடுக்கு-3 1000 கோடி முதல் 10000 வரை வைப்புத்தொகை
- அடுக்கு-4 10000 கோடிக்கு மேல் வைப்புத்தொகை
நிலையான வளர்ச்சி தாக்கம் உச்சி மாநாடு 2021
- உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர நிலையான வளர்ச்சி தாக்கம் உச்சி மாநாடு 2021 செப்டம்பர் 20-23 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற உள்ளது
- இந்த ஆண்டின் உச்சி மாநாட்டின் கரு = சமமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான மீட்பை வடிவமைத்தல் / haping an Equitable, Inclusive and Sustainable Recovery
- அரசாங்கம், வணிகம் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுக்கும் இது வரவேற்பை அளிக்கும்
மிஷன் சாகர்
- இந்திய கடற்படை கப்பலான ஐராவத் மருத்துவ பொருட்களை வழங்குவதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு எடுத்து செல்லும் பயண திட்டத்திற்கு “மிஷன் சாகர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது
- இந்தோனேசிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவில் இருந்து 10 கொள்கலன்களை கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜினை, ஏற்றிக்கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கப்பல், ஜகார்த்தா நகருக்கு சென்றது
ஹவானா நோய்
- ஹவானா நோய் முதன் முதலில் கியூபாவில் தங்கி இருந்த அமெரிக்க அரசு பிரதிநிதிகள் இடம் உருவானது
- அவர்கள் ஒரு விசித்திரமான அறிகுறிகளை அனுபவித்தனர். சில அதிகாரிகள் அதை ஒழுங்கற்ற சுகாதார சம்பவங்கள் என்றும் சிலர் தாக்குதல்கள் என்றும் அழைத்தனர்.
- நோய்க்குறியுடன் தொடர்புடைய அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றல், சோர்வு, பதட்டம், குமட்டல், அறிவாற்றல் சிரமங்கள் மற்றும் மாறுபட்ட தீவிரத்தின் நினைவாற்றல் இழப்பு ஆகியவை அடங்கும்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளம் – இ-ஷார்ம் போர்ட்டல்
- தொழிலாளர் அமைச்சகம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளத்தை (NDUW) அல்லது இ-ஷார்ம் போர்ட்டலை தொடங்க உள்ளது.
- இந்த போர்டல் இந்தியாவில் மில்லியன் கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வர உதவும்.
- ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் 500 மில்லியன் ஊழியர்களில் 92% அமைப்புசாரா. அவர்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் பிற சமூகப் பாதுகாப்பை இழக்கிறார்கள்.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 19, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 18, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 17, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL– AUGUST 16, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL– AUGUST 15, 2021