பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

  • பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும்.
  • பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன.
  • அவ்வகையில் உருவான இலக்கிய வகைகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் என வழங்கலாயின.
  • பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் தொண்ணூற்றாறு எனக்கூறி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
  • கோவை, உலா, தூது, கலம்பம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அந்தாதி முதலியவை சிற்றிலக்கியங்களுள் சிறப்பானவைகளாகக் கருதப்பெறுகின்றன.
  • இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலானோரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நோக்கிலேயே சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றுள்ளன.
  • காலந்தோறும் தமிழ்த்தாய் புதுப்புது அணிகளைப் புனைந்து வந்திருக்கிறாள் என்பதற்குச் சான்றுகளாய்ச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன.

வீரமாமுனிவர் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்கள்

  • சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் இவை.
  • இவற்றுள் கூறப்படாத சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
    1. சாதகம்
    2. பிள்ளைத்தமிழ்
    3. பரணி
    4. கலம்பகம்
    5. அகப்பொருள் கோவை
    6. ஐந்திணைச் செய்யுள்
    7. வருக்கக் கோவை
    8. மும்மணிக்கோவை
    9. அங்கமாலை
    10. அட்டமங்கலம்
    11. அநுராகமாலை
    12. இரட்டைமணி மாலை
    13. இணைமணிமாலை
    14. நவமணி மாலை
    15. நான்மணி மாலை
    16. நாமமாலை
    17. பலசந்த மாலை
    18. கலம்பகமாலை
    19. மணிமாலை
    20. புகழ்ச்சி மாலை
    21. பெருமகிழ்ச்சிமாலை
    22. வருத்தமாலை
    23. மெய்கீர்த்தி மாலை
    24. காப்புமாலை
    25. வேனில்மாலை
    26. வசந்த மாலை
    27. தாரகை மாலை
    28. உற்பவ மாலை
    29. தானைமாலை
    30. மும்மணிமாலை
    31. தண்டக மாலை
    32. வீரவெட்சிமாலை
    33. வெற்றிக்கரந்தை மஞ்சரி
    34. போர்க்கெழு வஞ்சி
    35. வரலாற்று வஞ்சி
    36. செருக்கள வஞ்சி
    37. காஞ்சி மாலை
    38. நொச்சி மாலை
    39. உழிஞைமாலை
    40. தும்பை மாலை
    41. வாகைமாலை
    42. வதோரணமஞ்சரி
    43. எண்செய்யுள்
    44. தொகைநிலைச் செய்யுள்
    45. ஒலியல் அந்தாதி
    46. பதிற்றந்தாதி
    47. நூற்றந்தாதி
    48. உலா
    49. உலாமடல்
    50. வளமடல்
    51. ஒருபா ஒருபஃது
    52. இருபா இருபஃது
    53. ஆற்றுப்படை
    54. கண்படை நிலை
    55. துயிலெடை நிலை
    56. பெயரின்னிசை
    57. ஊரின்னிசை
    58. பெயர் நேரிசை
    59. ஊர் நேரிசை
    60. ஊர் வெண்பா
    61. விளக்க நிலை
    62. புறநிலை
    63. கடைநிலை
    64. கையறுநிலை
    65. தசாங்கப்பத்து
    66. தசாங்கத் தயல்
    67. அரசன் விருத்தம்
    68. நயனப்பத்து
    69. பயோதரப் பத்து
    70. பாதாதி கேசம்
    71. கேசாதி பாதம்
    72. அலங்காரப் பஞ்சகம்
    73. கைக்கிளை
    74. மங்கல வள்ளை
    75. தூது
    76. நாற்பது
    77. குழமகன்
    78. தாண்டகம்
    79. பதிகம்
    80. சதகம்
    81. செவியறிவுறூஉ
    82. வாயுறை வாழ்த்து
    83. புறநிலை வாழ்த்து
    84. பவனிக்காதல்
    85. குறத்திப்பாட்டு
    86. உழத்திப்பாட்டு
    87. ஊசல்
    88. எழுகூற்றிருக்கை
    89. கடிகை வெண்பா
    90. சின்னப்பூ
    91. விருத்த விலக்கணம்
    92. முதுகாஞ்சி
    93. இயன்மொழி வாழ்த்து
    94. பெருமங்கலம்
    95. பெருங்காப்பியம்
    96. சிறுகாப்பியம்

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *