SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- இலக்கியங்களில் மேலாண் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலான் கருத்துகளையும் நிருவாக நெறிகளையும் நாம் உணரலாம்.
- நாட்டின் முன்னேற்றம் மேலாண் சிந்தனையில் தொடங்குகிறது
நேர மேலாண்மை
- மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
- திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று கூறுகிறார்
மடியின்மை
- ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு “மடியின்மை” என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவனையை தருகிறார்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் |
- புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடும் பொழுது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்.
பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு கக்கும் உயர் கொள்கை கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே |
வேளாண் மேலாண்மை
- கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்கிறார் கம்பர்.
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் இனிதுஅரசு செய்கின்றான் – (பாலகாண்டம் – 179) |
- மனமே ஒரு வேளாண்மைக்கு உட்பட்ட மேலாண்மை உடையது ஆகும்.
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் கலைக்கட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைன்கூழ் சிறுகாலைச் செய் – (அறநெறிச்சாரம் – 16) |
கடலுக்கான வேறு பெயர்கள்
- அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆழி, ஈண்டுநீர், உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்
சிலப்பதிகாரம்
- உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது
பட்டினப்பாலை
- பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றிய குறிப்பு உள்ளது.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் – பட்டினப்பாலை |
- காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வழியே வேறு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் வந்த பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும் மாறி பெய்யும் பருவம் போல நீரினின்றும் நிலத்து ஏற்றவும் நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் அளந்து அறியாப் பல பண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டி” – (பட்டினப்பாலை – 126-132) |
ஸ்ட்ரேபோ
- சங்க இலக்கியங்களின் வாயிலாக முசிறி துறைமுகமாக, யவனர்களின் கப்பல்கள் நிறுத்தப்படும் இடமாக இருந்ததை அறிய முடிகிறது.
- ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்
புறநானூறு
- புறநானூற்றில் 56ஆம் பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.
பதிற்றுப்பத்து
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாகக் கட்டுப்படுத்தினான், பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.
நிதி மேலாண்மை
- ‘டைமன்’ என்பவர் பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம் ஆகும்
ஒளவையாரின் நல்வழி
- ஔவையார் நல்வழியில் நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு – நல்வழி |
ஹிராக்ளிடஸ்
- 126 ஒற்றை வரிகளில் எழுதிய ‘துளிகள்’ (fragments) என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர்.
- ‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று அவர் சொன்ன கோட்பாடு வாழ்வுக்கும் பொருந்தும், வர்த்தகத்திற்கும் பொருந்தும்
- அவர் ‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று குறிப்பிடுகிறார்
வெ இறையன்பு
- இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை ‘ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்
- இவரின் நூல்கள் = தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா.
- இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது
- SAMACHEER KALVI 12TH TAMIL வை.மு.கோதைநாயகி
- SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
- SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்
- SAMACHEER KALVI 12TH TAMIL மெய்ப்பாட்டியல்
- SAMACHEER KALVI 12TH TAMIL சிலப்பதிகாரம்
- SAMACHEER KALVI 12TH TAMIL கவிதைகள்
- SAMACHEER KALVI 12TH TAMIL திரைமொழி
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை