TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 08/08/2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 08 AUGUST 2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 08 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

சயீத் தல்வார் 2021 போர்பயிற்சி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய கடற்படை மற்றும் ஐக்கிய அரபு அமீரிக நாட்டு கடற்படை இரண்டும் இணைந்து, அபுதாபி கடல் பகுதியில் “சயீத் தல்வார் 2021” என்ற பெயரில் கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சியை மேற்கொண்டன / Indian Navy and UAE Navy conducted the bilateral naval exercise ‘Zayed Talwar 2021’ on August 07, 2021 off the coast of Abu Dhabi
  • ‘சயீத் தல்வார் 2021’ கடற்படை பயிற்சியின் முக்கிய நோக்கம் இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்துவதாகும்.
  • இந்திய கடற்படை ஐஎன்எஸ் கொச்சியுடன், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்.கே 42 பி ஹெலிகாப்டர்களுடன், பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டது

வெள்ளையனே வெளியேறு தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு தினம் (அல்லது ஆகஸ்ட் கிரந்தி தினம்) கடைபிடிக்கப்படுகிறது / Every year, the Quit India Day (or August Kranti Day or Bharat Chodo Andolan) is observed on 8 August to commemorate the anniversary of Quit India Movement, launched by Father of Nation, Mohandas Karamchand Gandhi,
  • இந்த ஆண்டு 79-வது ஆண்டு வெள்ளையனே வெளியேறு தினம் கொண்டாடப்பட்டது
  • 1942 ஆகஸ்ட் 8 அன்று, பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்க முடிவு செய்யப்பட்டது
  • பாரத் சோடோ அந்தோலன் என்றும் ஆகஸ்ட் கிராந்தி இயக்கம் என்றும் அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கம், காந்தியின் “செய் அல்லது செத்து மடி” முழக்கத்தின் பயனாக வீறுகொண்டு துவங்கியது

சரளா தக்ரல், இந்தியாவின் முதல் பெண் விமானி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சரளா தக்ரல், இந்தியைவ்ன் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெற்றவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதியை, கவுரவப்படுத்தும் விதமாக கூகுல் நிறுவனம் அவரை சிறப்பித்து டூடுல் வெளியிட்டது
  • இவர் 1936 ஆம் ஆண்டு தன்னுடைய 21 வது வயதில் விமான லைசன்ஸ் பெற்றவர் ஆவார்.
  • இவர், 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தவர். இவர் பிறந்து 107 ஆண்டுகளை முன்னிட்டு சிறப்பிக்கும் விதமாக கூகுல் நிறுவனம் டூடுலை வெளியிட்டது

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது / Karnataka has become the first state in the country to issue an order to implement the new Education policy.
  • உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை 2018 இல் 26.8 சதவீதத்தில் இருந்து 2035 க்குள் 50 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக 2 பெண் அதிகாரிகளை நியமித்த இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை(ITBP):

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • முதல் முறையாக 2 பெண் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை(ITBP).
  • பிரகிருதி மற்றும் தீக்ஷா ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஐடிபிபி பட்டாலியன்களில் கம்பெனி கமாண்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

உபி அரசாங்கம் ககோரி காண்டின் பெயரை மாற்றியது:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உத்தரபிரதேச அரசு ‘ககோரி கண்ட்’ என்பதை ‘ககோரி ரயில் நடவடிக்கை’ என மறுபெயரிட்டுள்ளது / Uttar Pradesh government has renamed the ‘Kakori Kand’ to ‘Kakori Train action’.
  • உத்தரபிரதேச அரசு ‘ககோரி கண்ட்’ என்பதை ‘ககோரி ரயில் நடவடிக்கை’ என மறுபெயரிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் ‘சவரி சவுரா மஹோத்ஸவ்’ திட்டத்தின் கீழ் 2021 ஆகஸ்ட் 9 ஆம் தேதி ‘ககோரி ரயில் நடவடிக்கையின்’ ஆண்டு விழாவை உபி அரசு கொண்டாடியது.

முதல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசனை நிலை கூட்டம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • முதல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசனை நிலை கூட்டம், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது / The first Deputy NSA level meeting took place in Colombo
  • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (Colombo Security Conclave) கீழ் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை கலந்து கொண்டன.
  • பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளும் பார்வையாளர்களாக பங்கேற்றன.

ரவீந்திரநாத் தாகூரின் 80 வது நினைவு தினம்:

  • ரவீந்திரநாத் தாகூரின் 80 வது நினைவு தினம் 8 ஆகஸ்ட் 2021 அன்று மேற்கு வங்கத்தில் அனுசரிக்கப்பட்டது / The 80th death anniversary of Rabindranath Tagore was observed in West Bengal on 8 August
  • ரவீந்திரநாத் தாகூர் ஒரு வங்காள பன்முக எழுத்தாளர் – கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இசையமைப்பாளர், தத்துவவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஓவியர்.
  • 1921 இல் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
  • 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாதார் ஆவார்.

சர்வதேச பூனை தினம்: ஆகஸ்ட் 8:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச பூனை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது / International Cat Day is observed every year on 8 August
  • சர்வதேச விலங்கு நல நிதியம் (International Fund for Animal Welfare) 2002 இல் இந்த நாளைத் தொடங்கியது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “பூனைகளுக்கு ஆர்வமாக இருங்கள்- பூனைகளுக்கும் அவற்றின் மனிதர்களுக்கும் பயிற்சி” (Be Cat Curious- Training for Cats and their Humans”).
  • சர்வதேச பூனை தினத்தின் அதிகாரப்பூர்வ “பாதுகாவலர்” அமைப்பு, சர்வதேச பூனை பராமரிப்பு (International Cat Care) ஆகும்.

ஊசி இல்லா கோவிட்-19 தடுப்பூசி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக அவசரநிலை பயன்பாட்டிற்காக 6-வது தடுப்பூசியாக, மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் ஊசி இல்லாத கோவிட் -19 தடுப்பூசி ‘ZyCoV-D’ யை அங்கீகரிக்க உள்ளது / India is to get its sixth Covid-19 vaccine soon as drug firm Zydus Cadila’s needle-free Covid-19 vaccine called ‘ZyCoV-D’ is all set to get emergency use authorisation (EUA) approval.
  • தற்போது, கோவிட்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மாடர்னாவின் தடுப்பூசி மற்றும் ஜே & ஜே இன் ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகிய ஐந்து தடுப்பூசிகளை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.

ப்ரூனல் பதக்கம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பூட்டானில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட மங்டெச்சு நீர் மின் திட்டத்திற்கு, லண்டனில் உள்ள சிவில் இன்ஜினியர்கள் நிறுவனம் (ICE) ப்ரூனல் பதக்க விருதை வழங்கியுள்ளது / Bhutan’s India-assisted Mangdechhu Hydroelectric Project was conferred with the Brunel Medal awarded by the London-based Institution of Civil Engineers (ICE).
  • வர்த்தகத்திற்குள் சிவில் இன்ஜினியரிங்கில் சிறந்து விளங்குவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது மற்றும் இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 2.4 மில்லியன் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்.

லடக்கின் பென்சிலுங்க்பா பனிப்பாறை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • லடாக் பகுதியில் உள்ள ஜன்ச்கார் என்னுமிடத்தில் உள்ள லடக்கின் பென்சிலுங்க்பா பனிப்பாறை, வேகமாக உருகி வருகிறது. வெப்பநிலையில் அதிகரிப்பு மற்றும் குளிர்காலத்தில் குறைவான மழைப்பொழிவு காரணமாக இந்நிகழ்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது / Pensilungpa Glacier is retreating due to an increase in the temperature and a decrease in precipitation during winters.
  • ஜன்ஸ்கர் மலைத்தொடர் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும், இது ஜன்ஸ்கரை லடக்கிலிருந்து பிரிக்கிறது.

miSHERLOCK சாதனம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • எம்ஐடி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் உமிழ்நீர் மாதிரியிலிருந்து SARS-CoV-2 ஐ ஒரு மணிநேரத்தில் கண்டறியக்கூடிய சிறிய டேபிள் டாப் சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கு “miSHERLOCK” எனப் பெயரிடப்பட்டுள்ளது / Engineers at MIT and Harvard University have designed a small tabletop device that can detect SARS-CoV-2 from a saliva sample in about an hour.
  • இது பிசிஆர் சோதனைகள் போல துல்லியமானது ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது SHERLOCK அடிப்படையில் செயல்படும் சாதனம் ஆகும்.

 ‘மணனியா சமன் லால்’:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு, புதுடெல்லியின் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘மணனியா சாமன் லால்’ அவர்களை கவுரவிக்கும் விதமாக “அஞ்சல் வில்லை” வெளியிடப்பட்டது / Shri Venkaiah Naidu, Vice President of India released Commemorative Postage Stamp on ‘Mananiya Chaman Lal’ at a public function
  • புகழ்பெற்ற சமூக சேவகர் மற்றும் சங்க பிரச்சாரகரான மணனியா சாமன் லாலின் வாழ்க்கை மற்றும் பணியை இந்த நினைவு தபால் தலை கவுரவிக்கிறது மார்ச் 25, 1920 அன்று சியால்கோட்டில் (இப்போது பாகிஸ்தானில்) பிறந்த மணனியா சமன் லால், சிறு வயதிலிருந்தே மக்கள் நலனுக்காக உழைப்பதில் ஆர்வம் காட்டினார்.

“ரயில் மடட்” – இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வு:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இதுவரை ரயில்வேயால் அறிமுகம் செய்யப்பட உதவி மைய எண்களை எல்லாம் ஒருங்கிணைந்து புதிய உதவிமைய எண்ணாக “139” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகத்தின் புதிய ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வாக “ரயில் மடட்” சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது / Indian Railways launched an integrated one-stop solution – Rail Madad’ in which the national transporter has merged a number of existing helplines that were used for various purposes into one.
  • முன்பு பல்வேறு நோக்கங்களுக்காக ரயில்வேயில் இருந்த பல ஹெல்ப்லைன்கள் ஒரு ஹெல்ப்லைனில் இணைக்கப்பட்டுள்ளன, அதாவது 139 அனைத்து விசாரணை தேவைகளுக்கும் புகார் செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம். 139 ஹெல்ப்லைன் வசதி 12 மொழிகளில் 24 மணி நேரமும் கிடைக்கிறது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் அடிப்படையிலான ரயில் சேவை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் அடிப்படையிலான ரயில் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது / The country’s first hydrogen fuel train is preparing to run on the Sonipat-Jind section of Haryana
  • இந்திய ரயில்வேயில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில், ஹரியானாவின் சோனிபட்-ஜிந்த் பிரிவில் இயக்க தயாராகிறது. இந்த ரயிலை ஒட்டுமொத்த 89 கிமீ நீளமுள்ள சோனேபட்-ஜிந்த் பிரிவில் இயக்க வடக்கு ரயில்வேயால் டெண்டர் கோரப்பட்டுள்ளது

2 வது கோவிட் – 19 கண்டுபிடிப்பு அறிக்கை 2021:

  • 2 வது கோவிட் -19 கண்டுபிடிப்பு அறிக்கை 2021 படி, உலகளாவிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு தரவரிசையில் இந்தியா 32-வது இடத்தை பிடித்துள்ளது / India fell six spots to the 32nd place in the global coronavirus innovation rankings for countries, as per a report prepared by StartupBlink in association with Health Innovation Exchange, UNAIDS.
  • சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில் இந்தியா 26-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 6 இடங்கள் பின்தள்ளி 32-வது இடத்தை பிடித்துள்ளது
  • முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள் = அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் கனடா
  • இப்பட்டியலில் இடம்பிடித்த 2 இந்திய நகரங்கள் = 49-வது இடத்தில பெங்களூருவும், 55-வது இடத்தில புது தில்லியும் உள்ளன
  • முதல் 3 இடங்கள் பிடித்த நகரங்கள் = சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா), நியுயார்க் (அமெரிக்கா), மாஸ்கோ (ரஷ்யா)
  • தொற்றுநோயை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வுகளின் அடிப்படையில் உலகின் முதல் 40 இடங்களையும் 100 நகரங்களையும் இந்த அறிக்கை வெளியிட்டது

 

Leave a Reply