TNPSC TAMIL CURRENT AFFAIRS – 05/08/2021

TNPSC TAMIL CURRENT AFFAIRS – 05/08/2021

       TNPSC TAMIL CURRENT AFFAIRS – 05/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

மெய்நிகர் உண்மைக்கான நாட்டின் முதல் கூட்டமைப்பு:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம், மெய்நிகர் உண்மைக்கான நாட்டின் முதல் (country’s first Consortium for Virtual Reality ) கூட்டமைப்பை “VR/AR/MR இன்ஜினியரிங் மிஷன் இந்தியாவில் கூட்டமைப்பு” (CAVE) என்ற பெயரில் உருவாக்கி உள்ளது
  • Consortium for VR/AR/MR Engineering Mission in India’ (CAVE)
    • VR = VIRTUAL REALITY
    • AR = AUGUMENTED REALITY
    • MR = MIXED REALITY
  • கல்வி, தொழிற்சாலைகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் குழுக்கள் போன்ற கூட்டமைப்பினை ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒருங்கிணைக்கிறது
  • மெய்நிகர் ரியாலிட்டி, ஆக்மென்ட் ரியாலிட்டி, கலப்பு ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) மற்றும் ஹாப்டிக்ஸ் ஆகியவற்றில் புதிய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்க உறுப்பினர்களுக்கு உதவுவதே இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்ட பசுமை சாம்பியன் விருது:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் உள்ள சித்கரா பல்கலைக்கழகம், இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற கல்வி கவுன்சில் (எம்ஜிஎன்சிஆர்இ) 2020-21 கல்வியாண்டிற்கான பாட்டியாலா மாவட்டத்திற்கான ‘மாவட்ட பசுமை சாம்பியன்’ விருதினை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது / Chitkara University, Patiala, has been recognised as the ‘District Green Champion’
  • இந்த விருது, தங்கள் வளாகங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து, ‘ஸ்வச் பாரத்’ இயக்கத்தினை தீவிரமாக பின்பற்றி தூய்மையினை ஏற்படுத்தும் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது.

யாஸ் புயல்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை பாதித்த “யாஸ் புயல்” பாதிப்புகளை மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.
  • ‘யாஸ்’ புயலுக்குப் பிறகு, மத்திய அரசு கூடுதல் நிதி உதவியாக ரூ. ஒடிசாவுக்கு 500 கோடி, ரூ. மேற்கு வங்கத்திற்கு 300 கோடி மற்றும் ரூ. ஜார்க்கண்டிற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இராணுவ கண்காட்சி 2022 (DefExpo-2022):

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இராணுவ கண்காட்சி 2022 (DefExpo-2022) வருகின்ற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 தேதி முதல் 13 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது / DefExpo-2022 scheduled to be held in Gujarat’s Gandhinagar in March
  • 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கண்காட்சி, இறுதியாக 2020 ஆம் ஆண்டு, உத்திரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்றது
  • இந்திய நாட்டை வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக உலகிற்கு அறிவிக்க ஏதுவாக இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

முதல் ஜி-20 கலாசார அமைச்சர்கள் கூட்டம்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • முதல் ஜி-20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டம், இத்தாலியின் ரோம் நகரில் ஜூலை 29 மற்றும் 3௦ ஆம் தேதிகளில் நடைபெற்றது / The first G20 Culture Ministers’ Meeting will be held in Rome on 29 and 30 July, an unprecedented and historic choice by the Italian G20 Presidency
  • இக்கூட்டம் இத்தாலியின் தலைமையில் நடைபெற்றது. கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது; கலாச்சாரத்தின் மூலம் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தல்; பயிற்சி மற்றும் கல்வி மூலம் திறனை உருவாக்குதல்; டிஜிட்டல் மாற்றம் மற்றும் கலாச்சாரத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது
  • இக்கூட்டத்தில் “ஜி 20 கலாச்சார அமைச்சர்களின் ரோம் பிரகடனம்” (rome declaration of the g20 culture ministers) வெளியிடப்பட்டது

டிஜிட்டல் வங்கியில் புதுமைக்கான விருது:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • டிஜிட்டல் வங்கி முறைகளில் புதுமைகளை புகுத்தியதற்கான “2021 ஆம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் வங்கி புதுமைக்கான” விருது “டி.பி.எஸ் வங்கிக்கு” வழங்கப்பட்டது / DBS has been honoured as the global winner for Most Innovative in Digital Banking by Financial Times publication, The Banker, in its 2021 Innovation in Digital Banking Awards.
  • பாதுகாப்பான அணுகல் மற்றும் தொலைதூர வேலை தீர்வுக்காக சைபர் பாதுகாப்பு பிரிவு ஆகிவற்றிற்காக “ஆசிய பசிபிக் விருதினையும்” வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

கூகுளின் புதிய பிழை கண்டறியும் தளம்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • கூகுல் நிறுவனம் சார்பில், அந்நிறுவ இணையதளங்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து கூறும் போட்டிகளை நடத்தப்பட உள்ளது / Google launches new bug bounty platform
  • பிழைகளை கண்டறிந்து கூறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்
  • இதற்காக கூகுல் நிறுவனம் சார்பில் https://bughunters.google.com/ என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது

உயிரி மருத்துவ கழிவு எரியும் கருவி:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • உயிரி மருத்துவ கழிவு எரியும் கருவி, பீகார் மாநிலத்தின் பக்சார் நகரில் திறக்கப்பட்டது / A decentralized biomedical waste incinerator was inaugurated at Buxar Municipality, Bihar
  • கணேஷ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கருவி, கடந்த ஆண்டு நடைபெற்ற “உயிரி மருத்துவ கழிவு நீக்க புதுமை சவால்” நிகழ்வில் வெற்றிபெற்ற கருவியாகும்.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • 105 வருட பழமையான இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI – Zoological Survey of India) இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை த்ரிதி பானர்ஜி பெற்றுள்ளார் / Dhriti Banerjee has become the first woman to be appointed as Director of the 105-year-old Zoological Survey of India (ZSI).
  • அவர் 2012 முதல் ZSI இன் டிஜிட்டல் வரிசை தகவல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.

சர்வதேச சூரியக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5-வது நாடு:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • ஜெர்மனி சர்வதேச சூரிய கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5 வது நாடு ஆகும் / Germany becomes 5th country to sign International Solar Alliance Framework Agreement
  • இக்கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்டது.
  • இக்கூட்டமைப்பில் கையெழுத்திட்ட முதல் நாடு = டென்மார்க்

INDRA 2021 கூட்டுப் பயிற்சி:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இந்தோ – ரஷ்யா கூட்டு பயிற்சி பயிற்சி 2021 ஆகஸ்ட் 4, 2021 அன்று ரஷ்யாவின் வோல்கோகிராட் பிரட்பாய் மலைத்தொடரில் தொடங்கியது / The Indo – Russia joint training Exercise INDRA 2021 commenced at Prudboy Ranges, Volgograd in Russia on 4 August
  • INDRA 2021 உடற்பயிற்சி இந்திய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

இந்தியாவின் முதல் இதய செயலிழப்பு உயிரி வங்கி:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இந்தியாவின் முதல் இதய செயலிழப்பு உயிரி வங்கி, கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது / For the first in the country, a heart failure biobank would be soon inaugurated at Sree Chitra Tirunal Institute of Medical Sciences.
  • இரத்தம், சீரம், திறந்த இதய அறுவை சிகிச்சையின் போது பெறப்பட்ட திசு மாதிரிகள் மற்றும் புற இரத்த மோனோநியூக்ளியர் செல்கள் (பிபிஎம்சி) மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இதய செயலிழப்பு நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மரபணு டிஎன்ஏ ஆகியவை உயிரி மாதிரிகளில் சேமித்து வைக்கும் வசதி உள்ளது.

டோக்ரி எழுத்தாளர் பத்மா சச்சதேவ் காலமானார்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • பத்மஸ்ரீ விருது பெற்ற டோக்ரி மொழியின் பிரபல எழுத்தாளரான “பத்மா சச்சதேவ்” காலமானார் / Dogri writer Padma Sachdev passes away
  • டோக்ரி மொழியின் முதல் நவீன பெண் கவிஞர் இவராவார் (She was the first modern woman poet of the Dogri language). இவரின் கவிதை தொகுப்பு நூலிற்கு 1971 ஆம் ஆண்டு “சாகித்ய அகாதெமி விருது” வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

CBIC அமைப்பின் புதிய இணக்க தகவல் போர்ட்டல்:

  • CBIC எனப்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துக்கான மத்திய வாரியத்தின் (The Central Board for Indirect Taxes & Customs (CBIC) ) “புதிய இணக்க தகவல் போர்ட்டல்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது / CBIC launches Compliance Information Portal
  • இதற்கான இணையத்தளம் = https://cip.icegate.gov.in/CIP/#/home
  • இது அனைத்து சுங்க நடைமுறைகள் மற்றும் கிட்டத்தட்ட 12,000 சுங்கக் கட்டண பொருட்களுக்கான ஒழுங்குமுறை இணக்கம் பற்றிய தகவல்களுக்கு இலவச அணுகலை வழங்கும்.

பேராசிரியர் சி.ஆர்.ராவ் நூற்றாண்டு தங்கப் பதக்கம்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • பேராசிரியர் சி.ஆர்.ராவ் நூற்றாண்டு தங்கப் பதக்கம் (Centenary Gold Medal (CGM)) இரண்டு புகழ்பெற்ற இந்திய அறிஞர்களுக்கு – டாக்டர் ஜெகதீஷ் பகவதி மற்றும் டாக்டர் சி ரங்கராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது
  • டாக்டர் பகவதி கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம், சட்டம் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியர் மற்றும் இந்திய பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ராஜ் மையத்தின் இயக்குநர் ஆவார்.
  • டாக்டர் ரங்கராஜன் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி (RBI) கவர்னர் ஆவார்.

இந்தியாவில் முதல் முறையாக லட்சத்தீவில் தண்ணீர் வில்லாக்கள்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இலட்சத்தீவுகளில், மாலைதீவுகள் பாணியில் தண்ணீர் வில்லாக்கள் அமைக்கப்பட உள்ளன / Maldives style water villas to be set up in Lakshadweep
  • இவ்வகை வில்லாக்கள் அமைக்கப்படுவது, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும் / This project is first of its kind in India
  • சுமார் 800 கோடி ரூபாயில் இத்திட்டத்தின் கீழ், சூரிய சக்தியில் இயங்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வில்லா மூலம் உலகத்தரம் வாய்ந்த வசதி வழங்கப்படும்.

உலகின் மிக உயரமான மோட்டார் சாலை:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் சார்பில், கிழக்கு லடாக்கின் உம்லிங்லா கணவாயில் 19,300 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான மோட்டார் சாலை அமைக்கப்பட்டுள்ளது / Border Roads Organisation (BRO) has constructed and black-topped the highest motorable road in the world at 19,300 ft at Umlingla Pass in Eastern Ladakh, creating a record in high-altitude road construction
  • இதுவே உலகின் மிக உயரமான இடத்தில அமைக்கப்பட்டுள்ள மோட்டார் சாலையாகும். இது உம்லிங்லா பாஸ் வழியாக 52 கிமீ நீளத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களை தேடி மருத்துவம் திட்டம்:

TNPSC TAMIL CURRENT AFFAIRS

  • இந்தியாவிலேயே முதல் முறையாக “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை தமிழா முதலமைச்சர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தின் சாமனப்பள்ளி கிராமத்தில் துவக்கி வைத்தார் / The Chief Minister of Tamil Nadu MK Stalin on August 5, 2021, launched the ‘Makkalai Thedi Maruthuvam’ (healthcare services at people’s doorstep) scheme in Krishnagiri, Tamil Nadu
  • கிராமத்தில் உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீட்டிற்கே சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளி சிறுமி:

  • உலகின் மிகச்சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவழியை சேர்ந்த நடாஷா பெரியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது
  • 11 வயதான நடாஷா பெரி, அமெரிக்காவில் நடத்தப்படும் “சாட்” மற்றும் “ஆக்ட்” ஆகிய தேர்வுகளில், அவரின் திறமையை கண்டு இம்முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

காதி ஆணையம் தயாரித்த காகிதத்திற்கு காப்புரிமை:

  • நெகிழியால் (பிளாஸ்டிக்) இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட நெகிழி கலந்த, கையால் செய்யப்பட காகிதம் காப்புரிமையை பெற்றுள்ளது
  • பைகள், காகித உரைகள், கோப்பு உரைகள் உள்ளிட்ட பொருள்களையும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நெகிழி கலந்த, கையால் செய்யப்பட காகிகததின் மூலம் உருவாக்கி உள்ளது.

அயோத்தி இராமர் கோவில் 2023 ல் துவக்கப்பட உள்ளது:

  • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில், பக்தர்களின் வழிபாட்டிற்காக 2023 aaஆம் ஆண்டே திறக்கப்பட உள்ளது.
  • முழு கோவிலின் வேலையும் 2025 ஆம் ஆண்டே முடிவு பெறும்.

முதல் முறையாக முப்படை வீரர்களுக்கு இடையேயான “போர் விளையாட்டு பயிற்சி” நிகழச்சி:

  • நாட்டிலேயே முதல் முறையாக, முப்படை வீரர்கள் கலந்துக் கொண்ட போர் விளையாட்டு பயிற்சி நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெற்றது / for the first time a table-top war-gaming exercise was held on July 22 in which all scenarios including a collusive threat of a two-front war from China and Pakistan were war-gamed, according to a defence official
  • பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் இடையே இந்தியாவிற்கு போர் ஏற்படுவது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டு, வீரர்கள் போர் விளையாட்டினை விளையாடினர்.

நாட்டின் முதல் ஹைபர்-ஸ்கேல் தகவல் மையம்:

  • 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் நாட்டின் முதல் ஹைப்பர்-ஸ்கேல் தகவல் மையத்தினை உருவாக்க, “ரேக்பேங் தகவல் மையம்” மற்றும் “ரிநிவ் ஆற்றல்” நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது / ReNew Power has signed an MoU with RackBank Datacenters to power the country’s first hyper-scale data centre with 100% renewable energy
  • RackBank என்பது ஒரு தரவு மைய தளமாகும், இது அர்ப்பணிக்கப்பட்ட சேவையகங்கள், நிர்வகிக்கப்பட்ட சேவையகங்கள் மற்றும் கூட்டு சேவைகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.

தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்:

  • தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது / National Bones and Joint Day is observed on 4 August every year. It creates awareness about the need to keep bones healthy
  • எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை இது உருவாக்குகிறது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்

 

Leave a Reply