TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2021
       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 27, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • பிரபல பழம்பெரும் திரைப்பட நடிகையான ஜெயந்தி எனப்படும் “அபிநய சாரதா ஜெயந்தி”, பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 76.
  • வயதுமூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார். இவர் 7 முறை கர்நாடக பிலிம் ஃபேர் விருதை பெற்றுள்ளார்.

தீ பிடிக்காத ரயில் பெட்டிகளை உருவாக்கியுள்ளது ரயில்வே:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • பஞ்சாப் மாநிலம் காபர்துலாவில் உள்ள “ரயில் கோச் தொழிற்சாலை”, எளிதில் தீப்பிடிக்காத ரயில் பெட்டிகளை உருவாக்கி உள்ளது / The Rail Coach Factory (RCF) Kapurthala in an attempt to reduce the number of incidents of fire breaking out in railway coaches has developed new fire-retardant coaches.
  • தீ தடுக்கும் பொருட்களை கொண்டு பெட்டிகள் உருவாக்கப்பட்ட போதிலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக, தீயணைப்பான் போன்ற பொருட்களும் பெட்டியில் இடம் பெற்றிருக்கும்.

தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் 1௦௦% பள்ளிகளில் குழாய் நீர்:

  • நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 66 சதவீத பள்ளிகளுக்கும், 60 சதவீத அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய் நீர் வழங்கப்பட்டு வருகிறது / The tap water supply has reached to 66 percent of schools and 60 percent anganwadi centres in villages across the country.
  • ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் நீர் வழங்கல் செய்யப்பட்டுள்ளது / The provision of tap water supply has been made in all schools and anganwadi centres in nine states and one Union Territories.
  • 9 மாநிலங்கள் = ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு
  • 1 யூனியன் பிரதேசம் = அந்தமான் நிகோபார் தீவுகள்

குழந்தைகள், பெண்களை பாதுகாக்க ‘சிறப்பு 40’ அணி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மைனர் சிறுமிகளை பாலியல் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் காவல்துறை 40 பேர் கொண்ட பெண்கள் அணியை ‘சிறப்பு 40’ அமைத்துள்ளது / The Indore police in Madhya Pradesh has set up a 40-member women squad ‘Special 40’ to protect minor girls from sex offenders and curb crimes against women
  • இது காவல்துறையினருக்கான தகவல்களைச் சேகரிக்கும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக திருவிழாக்கள், கண்காட்சிகள் மற்றும் பிற கூட்டங்களிலும் ஈடுபடுத்தப்படும்.

யுனஸ்கோ பாரம்பரிய பட்டியல்:

  • யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக இடம் பிடித்தவை,
    1. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள “ருத்ரேஸ்வரா ஆலயம் (ராமப்பா ஆலயம்) ஆகும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள யுனஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.
      • இதனை காகதிய மன்னனான கணபதி தேவனின் படைத் தளபதி ரேச்சர்லா ருத்ரா ரெட்டி என்பவர் நிர்மாணித்தார். இக்கோவிலின் சிலை வடிவமைப்பாளர் ஆன ராமப்பா என்பவரால், இக்கோவிலை ராமப்பா கோவில் என்றும் அழைப்பர்.
    2. குஜராத் மாநிலத்தில் உள்ள ஹரப்பா நாகரீக எச்சமான “தோலாவிரா”, இந்தியாவின் 40-வது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    3. ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள Paseo del Prado என்னுமிடம்.
    4. ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள The Buen Retiro Park Retiro Park or simply El Retiro என்னுமிடம்
    5. ஈரான் நாட்டின் புகழ்பெற்ற The Trans-Iranian Railway ஆகும்.

ஐக்கிய நாடுகள் பொது அவையின் புதிய தலைவர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஐக்கிய நாடுகள் பொது அவையின் புதிய தலைவரான, மொரிசியசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான, “அப்துல்லா சாகித்”, தனது முதல் பயணமாக இந்தியா வந்துள்ளார்
  • 76-வது ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவராவார்.

ரஷ்யாவில் இந்திய போர்க்கப்பல் “ஐ.என்.எஸ் தபார்”:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ரஷ்யாவின் 325 வது கடற்படை தின விழாவில், இந்திய கடற்படையின் முதன்மை அட்மிரல் “கரம்பிர் சிங்” கலந்துக் கொண்டார்
  • ரஷ்ய கடற்படை தினத்தில், இந்தியாவின் சார்பில் “ஐ.என்.எஸ் தபார்” போர்க்கப்பல் கலந்துக்கொண்டது
  • மேலும் இந்தியா மற்றும் ரஷ்ய கடற்படைகள் இணைந்து விரைவில் “இந்த்ரா” (EXERCISE INDRA, NAVAL EXRCISE BETWEEN INDIA AND RUSSIA) போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்சிப் 2௦21:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஹங்கேரி நாட்டின் புடாஸ்பட் நகரில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன்சிப் 2௦21 போட்டிகளில் இந்தியா,
    • 5 தங்கம்
    • 1 வெள்ளி
    • 7 வெண்கலம்
  • மொத்தம் 13 பதங்கங்களை வென்றுள்ளது.

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பிற்கான சர்வதேச தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பிற்கான சர்வதேச தினம், உலகம் முழுவதும் ஜூலை 26 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது / UNESCO also celebrates International Day for the Conservation of the Mangrove Ecosystem on July 26
  • சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றின் நிலையான மேலாண்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நோக்கமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினத்தை “உலக சதுப்புநில தினமாகவும்” கூறுவர்.

யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த “தோலாவிரா”:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவின் 40 வது இடமாக, ஹரப்பா நாகரீக இடமான, குஜராத்தின் தோலாவிரா இடம்பிடித்துள்ளது.
  • இதன் மூலம் குஜராத்தில் மட்டும் உலக பாரம்பரிய சின்னங்கள் மொத்தம் 4 ஆக உயர்ந்துள்ளது.
  • இவ்விடம் குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ளது.
  • எட்டு பெரிய ஹரப்பன் தளங்களில் இது 5-வது பெரிய நகரமாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட ஹரப்பன் தளங்களில் இந்த நகரம் ஐந்தாவது பெரியது ஆகும்.
  • தோலவீரா 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு, இந்தியாவின் ஆரம்பகால நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் முழுப் பாதையையும் இது கண்டதாகக் கூறப்படுகிறது.
  • தோலவீரா தளம் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஜே.பி.ஜோஷி அவர்களால் 1967-68ல் கண்டுபிடிக்கப்பட்டது

கட்லாஸ் எக்ஸ்பிரஸ் கடற்சார் போர் பயிற்சி 2௦21:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய கடற்படைக் கப்பல் தல்வார் கடற்சார் போர் பயிற்சி “கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2021” இல் பங்கேற்கிறது, இது 20 ஜூலை 2021 முதல் 2021 ஆகஸ்ட் 06 வரை ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நடத்தப்படுகிறது / Indian Naval Ship Talwar is participating in Exercise Cutlass Express 2021, being conducted from 26 July 2021 to 06 August 2021 along the East Coast of Africa.
  • இப்பயிற்சி கென்யா நாட்டின் மாம்போசா என்னுமிடத்தில் நடைபெற உள்ளது. இதில் 13 நாடுகள் கலந்துக் கொள்ள உள்ளன.
  • கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் தேசிய மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் வருடாந்திர கடல்சார் பயிற்சியாகும்.

24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை பெறும் இந்தியாவின் முதல் நகரம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • 24×7 எந்நேரமும், எந்நாளும் சுத்தமான மற்றும் வடிகட்டப்பட்ட குழாய் குடிநீர் விநியோகத்தைப் பெறும் முதல் இந்திய நகரமாக பூரி உருவெடுத்துள்ளது / Puri becomes 1st Indian city to get 24×7 clean and filtered piped drinking water supply
  • சுற்று-கடிகாரக் குழாய்களைப் பெற்ற முதல் இந்திய நகரம் இதுவாகும் / becoming the first Indian city to get round-the-clock piped
  • “சுஜல் இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது

மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் 83-வது உதய தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுத போலீஸ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தனது 83 வது உதய தினத்தை கொண்டாடியது. 27 ஜூலை 1939 ஆம் ஆண்டு இப்படை உருவாக்கப்பட்டது. / India’s largest Central Armed Police Force, the Central Reserve Police Force (CRPF) is observing its ‘83rd Raising Day
  • தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநிறுத்துவதில் சக்தியின் மகத்தான மற்றும் இணையற்ற பங்களிப்பை இந்நாள் குறிக்கிறது.
  • இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி படைகளின் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களின் முதல், “உயிர் வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மையம்”:

  • வடகிழக்கு மாநிலங்களின் முதல், “உயிர் வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மையம்”, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாபம்பரே மாவட்டத்தின் “கிமின்” என்னுமிடத்தில் துவங்கப்பட்டுள்ளது / North East India’s First “centre for bio resources and sustainable development”
  • நவீன உயிரியலின் கருவிகளைப் பயன்படுத்தி, உயிரி ஆதாரங்களின் நிலையான வளர்ச்சிக்கான பணிக்காக அருணாச்சல பிரதேசத்தில் அதிநவீன உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி வசதிகளை அமைத்தல் இதன் நோக்கமாகும்.

பெண்கள் பாதுகாப்பிற்கான புதிய ஹெல்ப்லைன் எண் 7827170170:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 24×7 ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தினார்
  • இதற்கான ஹெல்ப்லைன் எண் 7827170170 ஆகும்.

 

 

 

Leave a Reply