TNPSC DAILY CURRENT AFFAIRS – 06/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஹிரோஷிமா தினம்:
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி “ஹிரோஷிமா தினம்” கடைபிடிக்கப்படுகிறது / August 6 is observed as Hiroshima Day around the world
இந்த ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 76 வது ஆண்டு தினமாகும்.
1945 இல் இந்த நாளில், அமெரிக்கா முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட அணு குண்டை ஹிரோஷிமா நகரில் வீசியது, மக்கள்தொகையில் 39 சதவிகிதத்தை அழித்தது.
ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது பெயர் மாற்றம்:
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் / As Prime Minister Narendra Modi announced that the Rajiv Gandhi Khel Ratna Award – the highest sporting honour in India – has been renamed after hockey legend Dhyan Chand, social media users welcomed the move, saying sporting awards should be named after sportspersons and not politicians.
1956 ஆம் ஆண்டு, மேஜர் தயான்சந்த் அவர்களுக்கு பதம பூசன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திய அரசும் அவரது பிறந்த நாளை ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது.
பவளத்தை சேதப்படும் சன்ஸ்கிரீன்களை தடை செய்த தாய்லாந்து:
தாய்லாந்து அனைத்து கடல் தேசிய பூங்காக்களிலிருந்தும் பவளத்தை சேதப்படுத்தும் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன்களை தடை செய்துள்ளது / Thailand bans coral-damaging sunscreens
தாய்லாந்து அனைத்து கடல் தேசிய பூங்காக்களிலிருந்தும் பவளத்தை சேதப்படுத்தும் ரசாயனங்கள் அடங்கிய சன்ஸ்கிரீன்களை தடை செய்துள்ளது
ஹங்கேரி நாட்டின் நல்ல உற்பத்திப் பயிற்சி சான்றிதழ் பெற்ற கோவேக்சின்:
பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் ஹங்கேரியில் உள்ள தேசிய மருந்து மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்திடமிருந்து நல்ல உற்பத்திப் பயிற்சி (Good Manufacturing Practice (GMP)) சான்றிதழைப் பெற்றுள்ளது.
GMP இன் சான்றிதழ் இப்போது EudraGMDP தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது ஐரோப்பிய சமூகத்தின் உற்பத்தி அங்கீகாரங்கள் மற்றும் நல்ல உற்பத்தி நடைமுறையின் சான்றிதழ்களின் தரவுத்தளமாகும்.
வேலையின்மை காரணமாக அதிகரித்துள்ள தற்கொலை:
தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளின்படி, வேலையின்மை காரணமாக பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்குகள் 2016 முதல் 2019 வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019 இல் நாட்டில் வேலையின்மை காரணமாக 2,851 பேர் தற்கொலை செய்து கொண்டதாக என்சிஆர்பி பதிவுகள் கூறுகின்றன.
2019 ஆம் ஆண்டில் வேலையின்மை காரணமாக கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் (553) பதிவு செய்யப்பட்டன, மகாராஷ்டிரா (452) மற்றும் தமிழ்நாடு (251) ஆகும்.
பிரதமரை சந்தித்த ஆஸ்திரேலிய சிறப்பு தூதர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே “சுதந்திர வர்த்தகம்” ஏற்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டின் சிறப்பு தூதர், பிரதமர் சந்தித்து பேசினார் / Prime Minister Narendra Modi met with Former Australian Prime Minister Tony Abbott
ஆஸ்திரேலிய நாட்டின் சிறப்பு தூதராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமரான “டோனி அபாட்” இந்தியா வந்திருந்தார்.
உணவு டெலிவரிக்கு மின்-சைக்கிள் பயன்படுத்தும் ஸ்விக்கி:
உணவு விநியோக தளமான ஸ்விக்கி ஹைதராபாத்தில் ஹீரோ லெக்ட்ரோ சரக்கு நிறுவனத்துடன் இணைந்து மின்சார சைக்கிள்கள் (இ-சைக்கிள்) அறிமுகப்படுத்துகிறது / Food delivery platform Swiggy is launching electric-cycles (E-cycles) in association with the Hero Lectro Cargo (HLC) in Hyderabad
இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறை படுத்தப்படுகிறது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகஸ்ட் 12 அன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது / Indian Space Research Organisation (ISRO) is all set to launch an Earth Observation Satellite on August Satellite will be launched from the Satish Dhawan Space Centre at Sriharikota
EOS-03 எனப் பெயரிடப்பட்ட செயற்கைக்கோளினை, GSLV-F10 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது ஜிஎஸ்எல்வியின் 14 வது விமானமாகும்.
TRIFED இன் 34 துவக்க தினம்:
ஆகஸ்ட் 06, 2021 அன்று, இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) அதன் 34 வது நிறுவன தினத்தை கொண்டாடியது.
Tribal Cooperative Marketing Federation of India (TRIFED)
பழங்குடி தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் மற்றும் மரமல்லாத வன உற்பத்தி (NTFP) ஆகியவற்றுக்கான சந்தைப்படுத்தல் மூலம் பழங்குடி வளர்ச்சியை ஊக்குவிக்க TRIFED நிறுவப்பட்டது.
லடாக்கில் “பாணி மாஹ்” (தண்ணீர் மாதம்) பிரச்சாரம் துவக்கம்:
லடாக்கில் ஜல் ஜீவன் இயக்கத்தினை வேகப்படுத்தவும், சுத்தமான நீரின் முக்கியத்துவத்தை கிராம சமூகங்களுக்கு தெரிவிக்கவும், லடாக் அரசின் சார்பில் “பாணி மாஹ்” (தண்ணீர் மாதம்” என்ற பெயரில் பிரசார இயக்கம் துவக்கப்பட்டுள்ளது
பிளாக் மற்றும் பஞ்சாயத்து அளவில் ‘பானி மாஹ்’ இரண்டு கட்டங்களாக இயங்கும்.
வாட்ஸ்அப் வங்கி முறையில் 1 மில்லியன் கணக்கர்களை சேர்த்த ஆக்சிஸ் வங்கி:
தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி அதன் வாட்ஸ்அப் பேங்கிங் சேனலில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் சேர்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது / WhatsApp banking Private sector lender Axis Bank has crossed the milestone of over one million customers on its WhatsApp banking channel
இவ்வங்கியின் இந்த வாட்ஸ்அப் வங்கி முறையினை, சராசரியாக நாளொன்றுக்கு 13000 பேருக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.