TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 29, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 29, 2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 29, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 29, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

சர்வதேச புலிகள் தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
சர்வதேச புலிகள் தினம்
  • 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவின் “செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சிமாநாட்டில்” (Saint Petersburg Tiger Summit), பல நாடுகள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு, உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புலிகளின் இயற்கை வாழ்விடத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தன.
  • மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.
  • சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) உலகம் முழுவதும் ஜூலை 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு (THEME) = Their Survival is in our hands

லண்டனில் உலகளாவிய கல்வி உச்சி மாநாடு:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
லண்டனில் உலகளாவிய கல்வி உச்சி மாநாடு
  • கென்யா மற்றும் ஐக்கிய இராச்சியம் இணைந்து உலகளாவிய கல்வி உச்சிமாநாட்டை லண்டன் நகரில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கல்விக்கான உலகளாவிய கூட்டுறவுக்காக (GPE) திரட்டும் நோக்கத்துடன் நடத்துகிறது / Kenya and United Kingdom are co hosting a Global Education Summit in the city of London with the objective to raise 5 billion USD for the Global Partnership for Education (GPE)
  • 90 பிரதேசங்கள் மற்றும் நாடுகளில் பொது கல்விக்கு இந்த உலகளாவிய கல்வி மாநாடு நிதியளிக்கிறது.

2023 சர்வதேச திணை ஆண்டு:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
சர்வதேச திணை ஆண்டு 2023
  • ஐக்கிய நாடுகள் சபை (UNO) 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக (International Year of Millets) அறிவித்துள்ளது.
  • யு.என். பொதுச் சபை சமீபத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இது இந்தியாவால் நிதியுதவி செய்யப்பட்டு 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் 2023 ஐ சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்புரா புலிகள் காப்பகம் NatWest Group Earth Heroes விருதை வென்றது:

  • சத்புரா புலிகள் காப்பகம் NatWest Group Earth Heroes விருதை வென்றது. சிறந்தாஹ் நிர்வாகத்திற்கான புவி பாதுகாவல் விருது, சத்புரா புலிகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது / Satpura Tiger Reserve of the state has been awarded the NatWest Group Earth Heroes Award in the Earth Guardian category for best management
  • ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகம் 2,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் இது டெக்கான் உயிர்-புவியியல் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்

புவி ஓவர்சூட் தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
புவி ஓவர்சூட் தினம்
  • இந்த ஆண்டு புவி ஓவர்சூட் தினம் (Earth Overshoot Day), ஜூலை 29 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.
  • புவி ஓவர்சூட் தினம் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் சேவைகளுக்கான மனிதகுலத்தின் தேவை பூமி அதில் மீண்டும் உருவாக்கக்கூடியதை விட அதிகமாக இருக்கும் தேதியை எர்த் ஓவர்ஷூட் தினம் குறிக்கிறது / Earth Overshoot Day marks the date when humanity’s demand for ecological resources and services in a given year exceeds what Earth can regenerate in that
  • பூமி நமக்கு அருளும் வளங்களில் அளவுக்கு அதிகமாக நாம் பயன்படுத்துவதையே எர்த் ஓவர் சூட் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் இவ்வளவுதான் இயற்கையின் வளங்களை உபயோகிக்கலாம் என்ற நியதி இருக்கிறது. ஆனால், மனிதகுலம் அந்த வளத்தை தீர்த்த தேதியை எர்த் ஓவர்ஷூட் நாள் எனக் கூறுகிறோம்

தேசிய அந்துப்பூச்சி (விட்டில் பூச்சி) வாரம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
தேசிய அந்துப்பூச்சி (விட்டில் பூச்சி) வாரம்
  • ஜூலை மாதத்தின் கடைசி வாரம் உலகம் முழுவதும் “தேசிய அந்துப்பூச்சி (விட்டில் பூச்சி) வாரம்” (National Moth Week) கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த வருடம் தேசிய அந்துப்பூச்சி வாரம், ஜூலை 17 முதல் 25 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • தேசிய அந்துப்பூச்சி வாரம் (NMW) என்பது அந்துப்பூச்சிகளின் மக்கள்தொகையைப் படிப்பதற்கும் பதிவு செய்வதற்கும் உலகளாவிய குடிமக்கள் அறிவியல் திட்டமாகும்.
  • இது பட்டம்பூச்சிகளுடன் தொடர்புடையது ஆகும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் உணவு பதப்படுத்தும் நிறுவனம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் (IIFPT) தஞ்சாவூர்
  • தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா, 2021 ஐ (National Institutes of Food Technology, Entrepreneurship and Management Bill, 2021) பாராளுமன்றம் நிறைவேற்றியது. இந்த மசோதா லோக்சபாவால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, முன்னதாக இந்த ஆண்டு மார்ச் 15 அன்று ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்டது.
  • தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) குண்டலி (ஹரியானா) மற்றும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் (IIFPT) தஞ்சாவூர் (தமிழ்நாடு) உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக (INI – Institute of National Importance) மாறியது.

அலாஸ்காவில் பெறும் நிலநடுக்கம்:

  • ஜூலை 28, 2021 அன்று அலாஸ்கன் தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • அமெரிக்க புவியியல் சர்வே படி, அது அலாஸ்காவின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நட்சத்திர மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
உலகின் மிகப்பெரிய நட்சத்திர மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு
  • உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்லிற்கு “தற்செயல் மாணிக்கக்கல்” எனப் பெயரிடப்பட்டுள்ளது / The newly found rock is named the ‘Serendipity Sapphire’.
  • இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் இது கிடைத்துள்ளது / The world’s largest star sapphire cluster has been found by accident in a backyard in Sri Lanka
  • மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டாலர் மதிப்புடையது. இதன் எடை 510 கிலோகிராம் (5 மில்லியன் காரட்) ஆகும்.

இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனம் – ஆகாசா ஏர்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனம் – ஆகாசா ஏர்
  • இந்தியாவின் கோடீஸ்வர பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது சொந்த குறைந்த விலை விமான சேவையை “ஆகாசா ஏர்” என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளார் / India’s billionaire investor Rakesh Jhunjhunwala has announced to launch his own ultra-low-cost airline called Akasa Air.
  • 40 சதவீத உரிமை மற்றும் 35 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில், ஜுன்ஜுன்வாலா, 4 ஆண்டுகளுக்குள் 70 விமானங்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

india cycles4change challenge:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
india cycles4change challenge
  • ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் ஒருபகுதியாக, india cycles4change challenge என்ற பெயரில் புதிய இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
  • இதன் நோக்கம், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையின் (2006) கீழ் கற்பிக்கப்பட்ட போக்குவரத்து முறையாக நகரங்களை சைக்கிள் ஓட்டுவதற்கு ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்தியா சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல் முறையாக ஏற்றுமதியாகும் நாகாலாந்தின் “ராஜா மிளகாய்”:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
நாகாலாந்தின் “ராஜா மிளகாய்”
  • வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து புவியியல் குறியீடுகள் (GI) பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கமாக, நாகாலாந்தில் இருந்து ராஜா மிளகாய் என குறிப்பிடப்படும் ‘ராஜா மிர்ச்சா’ சரக்கு முதல் முறையாக விமானம் மூலம் கவுகாத்தி வழியாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இது 2008 இல் புவிசார் குறியீடு (GI) சான்றிதழ் பெற்றது

உள்நாட்டு காலநிலை மாதிரி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL
உள்நாட்டு காலநிலை மாதிரி
  • நாட்டில் பருவமழை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கணிக்கும் ஒரு உள்நாட்டு காலநிலை மாதிரியை இந்திய அரசு உருவாக்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் (சுதந்திரப் பொறுப்பு) புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
  • இம்மதிரியின் பெயர் = பூமி அமைப்பு மாதிரி (அல்லது) ஐஐடிஎம்-இஎஸ்எம் (IITM-ESM)
  • IITM-ESM = Indian Institute of Tropical Meteorology (IITM) – Earth System Model
  • Indian Institute of Tropical Meteorology (IITM) = Pune, Maharashtra

நீர் மற்றும் உணவில் ஆர்சனிக் மாசுபடுவதைக் 15 நிமிடங்களில் கண்டறியும் சென்சார்:

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியதாவது, மொஹாலியை தளமாகக் கொண்ட தேசிய வேளாண்-உணவு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டின் (Mohali-based National Agri-Food Biotechnology Institute) விஞ்ஞானி 15 நிமிடங்களுக்குள் நீர் மற்றும் உணவில் ஆர்சனிக் மாசுபடுவதைக் கண்டறிய தீவிர உணர்திறன் மற்றும் பயன்படுத்த எளிதான சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
  • இதனை கண்டுபிடித்தவர் = டாக்டர் வானீஷ் குமார்

பாதுகாப்பு சிறப்பிற்கான கண்டுபிடிப்புகள் (iDEX):

  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு உற்பத்தித் துறை ‘பாதுகாப்பு சிறப்பிற்கான கண்டுபிடிப்புகள் (iDEX – Innovations for Defence Excellence (iDEX))’ என்ற பெயரில் ஒரு மத்தியத் துறை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது
  • IDEX இன் Support for Prototype and Research Kickstart (SPARK) க்கான மானியங்களைப் பெற, சில தகுதி அளவுகோல்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் பீப்-இந்தியாவின் முதல் உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பு:

  • கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நாட்டின் முதல் செலவு குறைந்த உள்நாட்டு வயர்லெஸ் உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பு “கோவிட் பீப்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது
  • COVID BEEP = ‘Continuous Oxygenation & Vital Information Detection Biomed ECIL ESIC Pod’
  • ECIL = Atomic Energy and Electronics Corporation of India Ltd. (ECIL)

பிம்ஸ்டெக் மாநாடு:

  • இந்த 2௦21 ஆம் ஆண்டிற்கான பிம்ஸ்டெக் மாநாடு, வருகின்ற டிசம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது
  • BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
  • இக்கூட்டமைப்பில் தற்போது 7 நாடுகள் உள்ளன = இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து மற்றும் இலங்கை.

 

Leave a Reply