DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 03/08/2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 03/08/2021

       DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 03/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மும்பை ஐ.ஐ.டியுடன் ஒப்பந்தம் செய்த இந்தியன் வங்கி:

  • ஸ்டார்ட் அப் மற்றும் நடுத்தர, குரு மற்றும் சிறு நிறுவங்களுக்கு (எம்எஸ்எம்இ) பிரத்யேக கடன் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக பம்பாய் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அமைப்பின் ஒரு அங்கமான புதுமை மற்றும் தொழில்முனைவோர் சங்கத்துடன் (SINE) இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக அல்லது இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக வங்கி 50 கோடி ரூபாய் வரை கடன்களை வழங்கும்.

Biotech-PRIDE வழிகாட்டுதல்கள்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் “Biotech-PRIDE (தரவு பரிமாற்றம் மூலம் ஆராய்ச்சி மற்றும் புதுமை மேம்படுத்துதல்) வழிகாட்டுதல்களை” வெளியிட்டுள்ளது.
  • PRIDE = Promotion of Research and Innovation through Data Exchange
  • உயிரி தொழில்நுட்பத்தில், “தரவு பரிமாற்றம் மூலம் ஆராய்ச்சி மற்றும் புதுமை மேம்படுத்துதல்” வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது. இதன் நோக்கமானது வழிகாட்டுதல்கள் உயிரியல் அறிவு, தகவல் மற்றும் தரவின் பகிர்வு மற்றும் பரிமாற்றத்தை எளிதாக்கவும் செயல்படுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் வழிகாட்டும் கொள்கையை வழங்குவது ஆகும்.

நீலச் சுதந்திர நடவடிக்கை:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மாற்றுத்திறனாளிகளை கொண்ட “CLAW” என்ற சிறப்பு படை வீரர்களை குழுவினை உருவாக்கி, அவர்களின் மூலம் சியாச்சின் மலையினை ஏறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • CLAW = CONQUER LAND AIR WATER
  • மாற்றுத்திறனாளிகளை கொண்டு மலை ஏறும் இம்முயற்சி, ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இது “நீலச் சுதந்திர நடவடிக்கை”யின் ஒரு பகுதியாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது / This expedition is being undertaken as part of ‘Operation Blue Freedom’.

CONCACAF தங்க கால்பந்து கோப்பை:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 16 வது CONCACAF தங்க கால்பந்து கோப்பைக்காண (CONCACAF Gold Cup) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், அமேரிக்க அணி, நட்பு சாம்பியனான மெக்சிகோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • CONCACAF தங்க கால்பந்து கோப்பையை அமேரிக்க வெல்வது இது 7-வது முறையாகும்.

ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆங்கல ஒற்றையர் டெனிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் ஜெர்மன் வீரர் இவராவார் / He became the first German man to win singles Olympic gold.

100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் இந்திய நகரம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் இந்திய நகரம் என்ற சிறப்பை, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரம் பெற்றுள்ளது / Bhubaneswar has become the first Indian city to achieve 100 per cent COVID-19
  • புவனேஸ்வர் மாநகராட்சி (பிஎம்சி) கோவிட் -19 க்கு எதிராக ஒரு பெரிய தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் “சிம் பைண்டிங்” அம்சம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) பல்வேறு டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக ‘சிம் பைண்டிங்’ எனப்படும் அம்சத்தை அதன் YONO மற்றும் YONO Lite செயலிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது / SBI launches ‘SIM Binding’ feature for YONO
  • புதிய சிம் பைண்டிங் அம்சத்தின் கீழ், யோனோ மற்றும் யோனோ லைட் செயலிகள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் உள்ள சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.

முதல் இடம் பிடித்த ஹரியானா காவல்துறை:

  • குற்றவியல் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பில் (சிசிடிஎன்எஸ்) 100% மதிப்பெண்களை பெற்று சிறப்பாக செயல்பட்டு, நாட்டிலேயே ஹரியானா மாநில காவல்துறை முதல் திதி பிடித்துள்ளது / Haryana secured first position in crime and criminal tracking network system (CCTNS) with 100 per cent marks in the country
  • ஹரியானா காவல்துறை 100 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் முறையாக இந்த முறையின் கீழ் நாட்டில் முதலிடத்தையும், குஜராத் 99.9 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஹிமாச்சல் பிரதேசம் 99.6 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலையின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தவளையினம் – Minervarya Pentali:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் புதிய தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு “Minervarya Pentali” எனப் பெயரிட்டுள்ளனர் / The newly-discovered species, named Minervarya Pentali, named a newly-discovered frog species after former vice chancellor and renowned plant geneticist Prof. Deepak Pental.
  • டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு முன்னாள் துணைவேந்தரும் புகழ்பெற்ற தாவர மரபியலாளருமான பேராசிரியர் தீபக் பென்டல் பெயரிட்டுள்ளனர்.
  • மினெர்வர்யா தவளைகளில் இந்த இனம் அறியப்பட்ட மிகச்சிறிய இனமாகும்.

அவ்தார்சிங் பாசினின் “நேரு, திபத் மற்றும் சீனா” புத்தகம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • “நேரு, திபத் மற்றும் சீனா” என்ற பெயரில் புத்தகத்தை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், பிரபல எழுத்தாளாரான “அவ்தார்சிங் பாசின்”.
  • இந்திய சுதந்திரத்தில் இருந்து 1962 ஆம் ஆண்டு இந்திய-சீனா போர் வரையிலான காலங்களில் இந்தியா மற்றும் சீனா உறவுகளை பற்றி கூறப்பட்டுள்ளது.

இந்திய பாரா ஒலிம்பிக் அணிக்கான பாடல்:

  • இந்தியா பாரா ஒலிம்பிக் அணிக்கான பாடலை, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் டெல்லியில் வெளியிட்டார்.
  • இப்பாடலை இசையமைத்து, பாடியவர் = சஞ்சீவ் சிங்
  • இப்பாடல், “Kar First State Kamaal Tu” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் புதிய குறுங்கோள்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • எர்த்ஸ்கை என்ற நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், பூமிக்கு மிக அருகில், வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிகப்பெரிய “குறுங்கோள்” வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அது பூமியைத் தாக்காது. 2016 AJ193 என பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் சூரியின் பாதையில் சென்று விடும் எனக் கூறப்பட்டுள்ளது.

19 வகையான கொரோனா நோய்களுக்கு எதிராக கோவேக்சின் சிறப்பாக செயல்படுகிறது:

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தனது ஆய்வில் கோவாக்ஸின் தடுப்பூசி டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் கோவிட் -19 இன் பி .1.617.3 வகைகளுக்கு எதிராக பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது / COVAXIN effective against Delta, Delta Plus, B.617.3 COVID-19 variants, says ICMR study
  • மருத்துவ பரிசோதனையில் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவிகித பாதுகாப்பு அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்க்கரைத் தொழிற்சாலைகளுக்கான உரிமங்களை நீக்கியது மத்திய அரசு:

  • மத்திய அரசு, சர்க்கரை தொழிலுக்கு அரசு உரிமம் நீக்கம் செய்துள்ளது. அதிகப்படியான கரும்பை பெட்ரோல் கலந்த எத்தனாலுக்கு மாற்றுவதற்கு சர்க்கரை ஆலைகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார் / The Government has de-licensed the sugar industry
  • இதன் மூலம் நாட்டில் புதிய சர்க்கரை ஆலைகள் துவக்குவதை அரசு ஊக்குவிக்க ஏதுவாக இம்முடிவை அரசு எடுத்துள்ளது.

1,000 கேலோ இந்தியா மையங்கள்:

  • நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்களை மத்திய அரசு நிறுவவுள்ளது.
  • இதில் 360 மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இம்மையங்களில் சிறப்பு திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு 6.28 லட்சம் வரை நிதிஉதவி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் தேதி, “பராக்கிரம தினமாக” (வீரத்தின் நாள்) அறிவித்தது மத்திய அரசு:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அரசு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதியை “பராக்கிரம் தினமாக” (வீரத்தின் நாள்) கொண்டாட அறிவித்துள்ளது / The Narendra Modi government on Monday announced to commemorate Netaji Subhas Chandra Bose’s 125th birth anniversary on January 23 as Parakram Diwas (day of valour)
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவுக்கு நேதாஜியின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்த கொல்கத்தா சென்றார். அங்கு `பராக்கிரம் திவாஸ் ‘கொண்டாட்டத்தின் தொடக்க விழாவுக்கும் பிரதமர் தலைமை வகித்தார்.
  • மேலும் அந்தமானில் உள்ள “ரோஸ் தீவுகளுக்கு”, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ட்வீப்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் (SPOCS):

  • மத்திய கலாசார அமைச்சகத்தால், “அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் (SPOCS – The Scheme for Promotion of Culture of Science) செயல்படுத்தப்பட உள்ளது
  • குறிக்கோள்: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அறிவியல் நகரங்கள் மற்றும் அறிவியல் மையங்களை அமைப்பதற்காக நிதி வழங்குதல்

2023 ஆம் ஆண்டு “தாலிஸ்மான் சாப்ரே” போர் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் இந்தியா:

  • பயிற்சி டலிஸ்மேன் சேபர் என்பது ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான இருவருட, பன்னாட்டு இராணுவப் பயிற்சி நிகழ்ச்சியாகும் / Exercise Talisman Sabre is a biennial, multinational military exercise led by Australia and the United States
  • இப்பயிற்சியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு இந்தியாவும் கலந்துக் கொள்ள உள்ளது.

ஆப்ரிக்க வம்சாவழி மக்களுக்கானா நிரந்தர மன்றம்:

  • ஐ.நா. பொதுச் சபை (UNGA) ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் நிரந்தர மன்றத்தை நிறுவுவதற்கான தீர்மானத்தை அங்கீகரித்துள்ளது / UN General Assembly (UNGA) has approved a resolution to establish a Permanent Forum of People of African Descent.
  • இந்த நிரந்தர மக்கள் மன்றம் இனவாதம், இனவெறி, இன பாகுபாடு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்வதில் நிபுணர் ஆலோசனைகளை வழங்கும்.
  • இத்தீர்மானத்தை 193 நாடுகள் அங்கீகரித்துள்ளது.

இந்திய மற்றும் சீன இராணுவம் இடையே ஹாட்லைன் நிறுவப்பட்டுள்ளது:

  • இந்திய ராணுவம், சீனாவின் பிஎல்ஏ இராணுவம் இடையே சிக்கிமில் புதிய ஹாட்லைன் அமைக்கப்பட்டது / New hotline set up in Sikkim between Indian Army, China’s PLA
  • இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் கொங்கரா லா என்னுமிடத்திலும், சீனாவின் திபத் பகுதியில் உள்ள கம்பா சோங் பகுதியிலும், இரு நாடுகள் சார்பில் ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

பார்ச்சூன் குளோபல் 500 பட்டியல்:

  • பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
    1. 1-வது இடம் = அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்
    2. 2-வது இடம் = சீனாவின் ஸ்டேட் கிரிட்
    3. 3-வது இடம் = அமெரிக்காவின் அமேசான் நிறுவனம்
    4. 155-வது இடம் = இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம்
    5. 205-வது இடம் = இந்தியாவின் பாரத் ஸ்டேட் வங்கி
    6. 212-வது இடம் = இந்தியாவின் இந்தியன் ஆயில் நிறுவனம்

துபாய் மற்றும் குவைத்தில் நடைபெற உள்ள நீட் தேர்வு:

  • மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை வளைகுடா நாடுகலானா துபாய் மற்றும் குவைத்தில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது / The Ministry of Education has announced new centres for the Gulf region in Dubai and Kuwait to conduct the National Eligibility cum Entrance Test smoothly
  • வளைகுடா நாடுகளில் பல இந்திய குடும்பங்கள் வசிக்கின்றன, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

தேசிய கீதத்தை பாடி, பதிவேற்றம் செய்ய வேண்டுகோள்:

  • மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில், நாடு மக்கள் தேசிய கீதத்தை பாடி, அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
  • இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் = https://rashtragaan.in/
  • தேசிய கீதத்தின் தொகுப்பு ஆகஸ்ட் 2021 இல் நேரடியாக காண்பிக்கப்படும்.

 

Leave a Reply