TNPSC TAMIL CURRENT AFFAIRS – 07 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஹைதராபாத்தில் அமேசானின் புதிய சிறப்பு பூர்த்தி மையம்:
அமேசான் தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் ஒரு புதிய சிறப்பு பூர்த்தி மையத்தை (FC) தொடங்குவதாக அறிவித்துள்ளது / Amazon has announced the launch of a new specialized Fulfilment Centre (FC) in Hyderabad, Telangana
இப்புதிய பூர்த்தி மையம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், சுமார் 35000 வந்கிகர்களின் சரக்கு பொருட்கள் சேமித்து வைக்க இயலும். இது அமேசானின் 5-வது பூர்த்தி மையமாகும்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு பதவி நீட்டிப்பு:
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள “ரேகா சர்மா” அவர்களுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது / The Women and Child Welfare Ministry have informed that Rekha Sharma has been nominated as Chairperson of the National Commission for Women (NCW) for another term of three years.
அவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியில் தொடருவார். தேசிய மகளிர் ஆணையம் என்பது அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பாகும், இது பெண்களைப் பாதிக்கும் அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும்.
வீச்சு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கம்:
மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் (IEEE – Institute of Electrical and Electronics Engineers) அமைப்பின் சார்பில் 2-வது வீச்சு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கம் (International Conference on Range Technology (ICORT-2021), மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது
இக்கருத்தரங்கை, டி.ஆர்.டி.ஓவின் சந்திப்பூர் “ஒருங்கிணைந்த சோதனை வீசு”, ஆய்வகம் செற்பாடு செய்திருந்தது / The conference was organized by Integrated Test Range (ITR) Chandipur, a laboratory of DRDO.
ஒரு வருடத்தில் 8700 சதுர கிலோமீட்டர் அமேசான் காடுகள் அழிப்பு:
ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஒரு வருட காலத்தில், அமேசான் மழைக்காடுகளில் 8712 சதுர கிலோமீட்டர் (3364 mail) பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது பிரேசிலின் நகரமான பியோர்டோ ரிகொவின் அளவிற்கு சமமாகும். / A total of 8,712 square kilometers (3,364 square miles) of forest cover — an area nearly the size of Puerto Rico — was destroyed from August 2020 to July 2021
இது அமேசான் அழிக்கப்பட்டதிலேயே மிகவும் அதிகபட்ச நிகழ்வாகும்.
அந்தமான் தீவுகளில் ரேடார் ஆய்வு:
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மேற்பரப்பு நிலப்பரப்பை வரைபடமாக்க இந்தியா வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது / India plans to conduct airborne radar surveys to map the surface topography of the Andaman & Nicobar Islands.
இந்த வரைபடத்தை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) மற்றும் தேசிய தொலை உணர்திறன் மையம் மூலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இது மேற்பரப்பு நிலப்பரப்பின் வான்வழி லிடார் நிலப்பரப்பு மேப்பிங் (ALTM – Airborne LiDAR Terrain Mapping) மூலம் செய்யப்படும்.
8000 பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி கேந்திர மையங்கள் திறப்பு:
மத்திய அரசின் சார்பில் திறக்கப்படும் “மக்கள் நல மருந்தகங்கள்” எனப்படும் “பாரதிய ஜன் ஔஷாதி கேந்திர மையங்கள்”, இதுவரை சுமார் 8000 மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் மார்ச் 2025 -க்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சுமார் 10,500 ஜனசாதி மையங்களைத் திறப்பதாகும்.
ரஷ்யாவின் “போலார் எக்ஸ்பிரெஸ்”:
ரஷ்யா தனது முதல் கடலுக்கு அடியில் இணையதளத்திற்கான பைபர்-ஆப்டிக் கேபிள் பொருத்தும் பணியை அண்டார்டிக்காவில் துவக்கி உள்ளது / Russia has started laying its first undersea fibre optic communications cable through the Arctic as part of a state-run project to bring high-speed internet to its remote hydrocarbon-rich north.
“போலார் எக்ஸ்ப்ரஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 1265௦ கிலோமீட்டர் நீளத்திற்கு, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் இருந்து அண்டார்டிக்காவின் மேற்கு பகுதி வரை பதியப்பட உள்ளது. இப்பகுதியில் மிக அதிக அளவில் ஹைட்ரோகார்பன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
PM-DAKSH போர்டல் மற்றும் மொபைல் செயலி:
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் அவர்கள், “PM-DAKSH போர்டல் மற்றும் மொபைல் செயலி” ஆகியவற்றை துவக்கி வைத்தார்
இதன் முக்கிய நோக்கம் = பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் சஃபாய் கரம்சாரி ஆகிய பிரிவு மக்களுக்கு “திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் பயிற்சி” அளித்தல் ஆகும் / It will make the skill development schemes accessible to the target groups of backward classes, Scheduled Castes, and safai karamcharis.
The Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi (PMDAKSH) Yojana
தேசிய கைத்தறி தினம்:
நாடு முழுவதும் “தேசிய கைத்தறி தினம்”” ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / National Handloom Day is celebrated every year on 7
இந்த நாள் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் சென்னையில் அறிவிக்கப்பட்டது. கல்கத்தா டவுன் ஹாலில் 1905 ஆகஸ்ட் 7 அன்று நடந்த சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது.
இயக்கத்தின் முக்கிய நோக்கம் உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதாகும்
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டில் 3 இடங்களில் “கைத்தறி கைவினை கிராமங்கள்” அமைக்கப்பட்டன.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம்
அஸ்ஸாமில் மோபாரா கிராமம்
ஸ்ரீநகரில் கனிஹாமா என்னுமிடம்
ஜி 20 ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டம்:
ஜி 20 நாடுகளின் ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டம், இத்தாலி நாட்டின் தலைமையில் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது / Minister of State for Education, Subhas Sarkar, participated in G20 Research Ministers’ meeting
இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய கல்வி அமைச்சர் கலந்துக் கொண்டார். குழுவின் G20 கல்வி அமைச்சர்கள் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் G20 நாடுகளிடையே டிஜிட்டல் இடத்தை பகிர்ந்து கொள்வது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அபனிந்திரநாத் தாகூர்:
அபனிந்திரநாத் தாகூரின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் ஆண்டு கொண்டாட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது / A year-long celebration marking 150 years of Abanindranath Tagore will start soon, with a host of online workshops and talks paying tributes to the leading light of the Bengal School of Art.
அவர் 7 ஆகஸ்ட் 1871 இல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் ரவீந்திரநாத் தாகூரின் மருமகன் ஆவார்.
அவர் இந்திய நவீன கலையின் மிகச்சிறந்த சின்னங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் ஓரியண்டல் ஆர்ட்டின் இந்திய சங்கத்தை நிறுவி, இந்தியக் கலையில் ‘சுதேசி’ என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தார்.
இ-கார்களை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம்:
இ-கார்களை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம் என்ற சிறப்பை, தமிழகத்தின் வா.உ.சிதம்பரனார் துறைமுகம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் எனப்பட்ட வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தமிழ்நாட்டின் 2 வது பெரிய துறைமுகம் மற்றும் இந்தியாவின் 3 வது பெரிய கொள்கலன் முனையமாகும்.
இது ஒரு செயற்கை துறைமுகமாகும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா:
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 87.58 மீ தூர எறிதலுடன் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றைப் படைத்தார்.
22 வயதான அவர் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கத்தை வென்ற முதல் இந்திய தடகள வீரர் மற்றும் இரண்டாவது இந்தியர் ஆனார்.
2008 ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் தங்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.