TNPSC TAMIL CURRENT AFFAIRS – 07 AUGUST 2021
TNPSC TAMIL CURRENT AFFAIRS – 07 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஹைதராபாத்தில் அமேசானின் புதிய சிறப்பு பூர்த்தி மையம்:
- அமேசான் தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் ஒரு புதிய சிறப்பு பூர்த்தி மையத்தை (FC) தொடங்குவதாக அறிவித்துள்ளது / Amazon has announced the launch of a new specialized Fulfilment Centre (FC) in Hyderabad, Telangana
- இப்புதிய பூர்த்தி மையம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், சுமார் 35000 வந்கிகர்களின் சரக்கு பொருட்கள் சேமித்து வைக்க இயலும். இது அமேசானின் 5-வது பூர்த்தி மையமாகும்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு பதவி நீட்டிப்பு:
- தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள “ரேகா சர்மா” அவர்களுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது / The Women and Child Welfare Ministry have informed that Rekha Sharma has been nominated as Chairperson of the National Commission for Women (NCW) for another term of three years.
- அவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியில் தொடருவார். தேசிய மகளிர் ஆணையம் என்பது அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பாகும், இது பெண்களைப் பாதிக்கும் அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும்.
வீச்சு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கம்:
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் (IEEE – Institute of Electrical and Electronics Engineers) அமைப்பின் சார்பில் 2-வது வீச்சு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கம் (International Conference on Range Technology (ICORT-2021), மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது
- இக்கருத்தரங்கை, டி.ஆர்.டி.ஓவின் சந்திப்பூர் “ஒருங்கிணைந்த சோதனை வீசு”, ஆய்வகம் செற்பாடு செய்திருந்தது / The conference was organized by Integrated Test Range (ITR) Chandipur, a laboratory of DRDO.
ஒரு வருடத்தில் 8700 சதுர கிலோமீட்டர் அமேசான் காடுகள் அழிப்பு:
- ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஒரு வருட காலத்தில், அமேசான் மழைக்காடுகளில் 8712 சதுர கிலோமீட்டர் (3364 mail) பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது பிரேசிலின் நகரமான பியோர்டோ ரிகொவின் அளவிற்கு சமமாகும். / A total of 8,712 square kilometers (3,364 square miles) of forest cover — an area nearly the size of Puerto Rico — was destroyed from August 2020 to July 2021
- இது அமேசான் அழிக்கப்பட்டதிலேயே மிகவும் அதிகபட்ச நிகழ்வாகும்.
அந்தமான் தீவுகளில் ரேடார் ஆய்வு:
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மேற்பரப்பு நிலப்பரப்பை வரைபடமாக்க இந்தியா வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது / India plans to conduct airborne radar surveys to map the surface topography of the Andaman & Nicobar Islands.
- இந்த வரைபடத்தை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) மற்றும் தேசிய தொலை உணர்திறன் மையம் மூலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- இது மேற்பரப்பு நிலப்பரப்பின் வான்வழி லிடார் நிலப்பரப்பு மேப்பிங் (ALTM – Airborne LiDAR Terrain Mapping) மூலம் செய்யப்படும்.
8000 பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி கேந்திர மையங்கள் திறப்பு:
- மத்திய அரசின் சார்பில் திறக்கப்படும் “மக்கள் நல மருந்தகங்கள்” எனப்படும் “பாரதிய ஜன் ஔஷாதி கேந்திர மையங்கள்”, இதுவரை சுமார் 8000 மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இத்திட்டத்தின் நோக்கம் மார்ச் 2025 -க்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சுமார் 10,500 ஜனசாதி மையங்களைத் திறப்பதாகும்.
ரஷ்யாவின் “போலார் எக்ஸ்பிரெஸ்”:
- ரஷ்யா தனது முதல் கடலுக்கு அடியில் இணையதளத்திற்கான பைபர்-ஆப்டிக் கேபிள் பொருத்தும் பணியை அண்டார்டிக்காவில் துவக்கி உள்ளது / Russia has started laying its first undersea fibre optic communications cable through the Arctic as part of a state-run project to bring high-speed internet to its remote hydrocarbon-rich north.
- “போலார் எக்ஸ்ப்ரஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 1265௦ கிலோமீட்டர் நீளத்திற்கு, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் இருந்து அண்டார்டிக்காவின் மேற்கு பகுதி வரை பதியப்பட உள்ளது. இப்பகுதியில் மிக அதிக அளவில் ஹைட்ரோகார்பன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
PM-DAKSH போர்டல் மற்றும் மொபைல் செயலி:
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் அவர்கள், “PM-DAKSH போர்டல் மற்றும் மொபைல் செயலி” ஆகியவற்றை துவக்கி வைத்தார்
- இதன் முக்கிய நோக்கம் = பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் சஃபாய் கரம்சாரி ஆகிய பிரிவு மக்களுக்கு “திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் பயிற்சி” அளித்தல் ஆகும் / It will make the skill development schemes accessible to the target groups of backward classes, Scheduled Castes, and safai karamcharis.
- The Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi (PMDAKSH) Yojana
தேசிய கைத்தறி தினம்:
- நாடு முழுவதும் “தேசிய கைத்தறி தினம்”” ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / National Handloom Day is celebrated every year on 7
- இந்த நாள் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் சென்னையில் அறிவிக்கப்பட்டது. கல்கத்தா டவுன் ஹாலில் 1905 ஆகஸ்ட் 7 அன்று நடந்த சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது.
- இயக்கத்தின் முக்கிய நோக்கம் உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதாகும்
- இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டில் 3 இடங்களில் “கைத்தறி கைவினை கிராமங்கள்” அமைக்கப்பட்டன.
- கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம்
- அஸ்ஸாமில் மோபாரா கிராமம்
- ஸ்ரீநகரில் கனிஹாமா என்னுமிடம்
ஜி 20 ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டம்:
- ஜி 20 நாடுகளின் ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டம், இத்தாலி நாட்டின் தலைமையில் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது / Minister of State for Education, Subhas Sarkar, participated in G20 Research Ministers’ meeting
- இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய கல்வி அமைச்சர் கலந்துக் கொண்டார். குழுவின் G20 கல்வி அமைச்சர்கள் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் G20 நாடுகளிடையே டிஜிட்டல் இடத்தை பகிர்ந்து கொள்வது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அபனிந்திரநாத் தாகூர்:
- அபனிந்திரநாத் தாகூரின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் ஆண்டு கொண்டாட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது / A year-long celebration marking 150 years of Abanindranath Tagore will start soon, with a host of online workshops and talks paying tributes to the leading light of the Bengal School of Art.
- அவர் 7 ஆகஸ்ட் 1871 இல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் ரவீந்திரநாத் தாகூரின் மருமகன் ஆவார்.
- அவர் இந்திய நவீன கலையின் மிகச்சிறந்த சின்னங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் ஓரியண்டல் ஆர்ட்டின் இந்திய சங்கத்தை நிறுவி, இந்தியக் கலையில் ‘சுதேசி’ என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தார்.
இ-கார்களை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம்:
- இ-கார்களை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம் என்ற சிறப்பை, தமிழகத்தின் வா.உ.சிதம்பரனார் துறைமுகம் பெற்றுள்ளது.
- தூத்துக்குடி துறைமுகம் எனப்பட்ட வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தமிழ்நாட்டின் 2 வது பெரிய துறைமுகம் மற்றும் இந்தியாவின் 3 வது பெரிய கொள்கலன் முனையமாகும்.
- இது ஒரு செயற்கை துறைமுகமாகும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா:
- நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 87.58 மீ தூர எறிதலுடன் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றைப் படைத்தார்.
- 22 வயதான அவர் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கத்தை வென்ற முதல் இந்திய தடகள வீரர் மற்றும் இரண்டாவது இந்தியர் ஆனார்.
- 2008 ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் தங்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 06, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 05, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 04, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 03, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 02, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – AUGUST 01, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 31, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 30, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 29, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 28, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 27, 2021
- TNPSC TAMIL CURRENT AFFAIRS – JULY 26, 2021