சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல்

பிறப்பும் வளர்ப்பும்:

 • இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.
 • பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.
 • இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
 • ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை.

கல்வி:

 • கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது, அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.

பொதுத்தொண்டில் நாட்டம்:

 • 32 சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
 • சமபந்தி முறைக்கு ஊக்கம் அளித்தார்.
 • குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.

சாதியை பற்றி:

 • “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைதானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுக்குமில்லை, ஆன்மீகத்திற்கும் இல்லை.

நேதாஜி:

 • முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.

வாய்பூட்டு சட்டம்:

 • விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு சட்டம் போட்டது.

தேசியம் காத்த செம்மல்:

 • முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.

அரசியல் வாழ்க்கை:

 • முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).
 • தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.

சிறந்த பண்பாளர்:

 • “தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.
 • “வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.

பாராட்டு பெயர்கள்:

 • வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.

மனிதனின் மனநிலை:

 • “பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி கூறியுள்ளார்.
 • மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.

மறைவு:

 • 55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.

சிறப்பு:

 • முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
 • நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
 • முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment

Your email address will not be published.