சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம்

  • திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
  • உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்”
  • அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர்.
  • பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
  • ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
  • வயல்வெளிகளில் பயிர்களைத் தாகும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்று, விவசாயிகளுக்கு உதவுகின்றன.
  • நம் நாட்டில் ஏறத்தாழ 2400 வகை பறவைகள் உள்ளன.
  • பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
      • தேனை குடித்து வாழும் பறவைகள்
      • பழத்தை உண்டு வாழும் பறவைகள்
      • பூச்சியை தின்று வாழும் பறவைகள்
      • வேட்டையாடி உண்ணும் பறவைகள்
      • இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
  • பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
  • சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்:
  • மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
  • நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்:
  • கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
  • மலைகளில் வாழும் சில பறவைகள்:
  • இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
  • தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply