சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு

பழமொழி நானூறு

சொற்பொருள்:

 • ஆற்றவும் = நிறைவாக
 • தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும்
 • ஆறு = வழி, நதி, ஓர் எண்
 • உணா = உணவு
 • அரையன் = அரசன்

 

பிரித்து எழுதுக:

 • நாற்றிசை = நான்கு + திசை
 • ஆற்றுணா = ஆறு + உணா

நூல் குறிப்பு:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • நானூறு பாடல்களை கொண்டது.
 • ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
 • “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்.

ஆசிரியர் குறிப்பு:

 • இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
 • முன்றுறை என்பது ஊர்பெயர்.
 • அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
 • முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment

Your email address will not be published.