முற்போக்குப் புதினங்கள்

முற்போக்குப் புதினங்கள்

முற்போக்குப் புதினங்கள்

  • பொதுவுடைமைச் சமூக விடுதலை நோக்கத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட படைப்பு முற்போக்கு இலக்கியம் என்றழைக்கப்படுகிறது.
  • பொதுவுடைமைப் பேசும் ரஷ்ய இலக்கியங்கள் போன்ற மேலைநாட்டு இலக்கியங்களின் வருகையால் தமிழிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றின.
  • இப்பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களை முற்போக்குப் புதினங்கள் எனலாம்.
  • தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் = தொ.மு.சி.ரகுநாதன்.
    • தொ.மு.சி.ரகுநாதன் = பஞ்சும் பசியும் என்ற புதினம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வைப் பற்றிப் பேசுகிறது.
  • ஜெயகாந்தன் புதினங்கள் = ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், சுந்தரகாண்டம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற புதினங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

வட்டார வழக்கு புதினங்கள்

  • வட்டாரப் புதினம் என்பது, குறிப்பிட்ட ஒரு பகுதியைக் களமாகக்கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும்.
  • இப்புதினங்கள், தாம் எழுதப்படும் வட்டாரத்தின் மொழியிலேயே அமைந்திருப்பது சிறப்பு.
  • வட்டாரப் புதினங்கள் தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
  • கொங்கு வட்டாரம், கரிசல் வட்டாரம், நாஞ்சில் வட்டாரம், நெல்லை வட்டாரம், முகவை வட்டாரம், மதுரை வட்டாரம், தஞ்சை வட்டாரம் எனத் தமிழக வட்டாரங்களை வகைப்படுத்தலாம்.
  • வட்டாரப் புதினம் எழுதும் வழக்கை தோற்றுவித்தவர் = ஆர். சண்முக சுந்தரம்.
    • ஆர். சண்முக சுந்தரம் புதினங்கள் = நாகம்மாள், அறுவடை,
    • கி.ராஜநாராயணன் புதினம் = கோபல்ல கிராமம்
    • பெருமாள் முருகனின் ஏறுவெயில்
    • சோலை சுந்தர பெருமாளின் செந்நெல்
    • சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை

விளிம்புநிலை வாழ்வியல் புதினங்கள்

  • வாழ்க்கை அனுபவங்கள் தந்த நேரடியான வலிகளையும் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவற்றிலிருந்து மீளத்துடிக்கும் உணர்வுகளையும் பதிவு செய்பவை விளிம்புநிலை வாழ்வியல் படைப்புகள்.
  • விளிம்புநிலை மாந்தர்களின் உரிமைகளைப் பேசும் புதினங்கள் தமிழில் பெருவாரியாகத் தோன்றியுள்ளன.
    • பாமா = கருக்கு, சங்கதி, வன்மம், கோவேறு கழுதைகள், செடல், ஆறுமுகம், எங்கதெ, செல்லாத பணம்.
    • பாமா அவர்களின் முதல் படைப்பு = கோவேறு கழுதைகள்
    • சிவகாமியின் ஆனந்தாயி, பழையன கழிதலும்
    • சோ.தர்மனின் கூகை, தூர்வை
    • ஸ்ரீதர கணேசனின் உப்புவயல்
    • அழகியபெரியவனின் தகப்பன் கொடி போன்ற புதினங்கள் விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவன.

பெரும் வாசகப் பரப்பு – பொழுதுபோக்கு

  • தமிழில் வேடிக்கை, விளையாட்டு, குற்றம், மர்மம், காதல் ஆகியவை கலந்த வாசிப்புச் சுவைமிக்க படைப்புகள் பெருமளவில் விற்பனையான இதழ்களில் வெளிவந்தன.
  • இவ்வகைப் படைப்புகளைத் தந்ததில் புகழ்பெற்றவராக சுஜாதா விளங்குகிறார். சுஜாதாவின் புனைவு நடை மிக நவீனமானது.
    • சுஜாதா புதினங்கள் = என் இனிய இயந்திரா, மீண்டும் ஜூனோ, கரையெல்லாம் செண்பகப்பூ, கனவுத் தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம்.
  • மனச்சலனங்களையும் உறவுச் சிக்கல்களையும் மையமாகக் கொண்ட படைப்புகளை எழுதியவர் பாலகுமாரன்.
    • பாலகுமாரன் புதினங்கள் = ராஜராஜசோழனைப் பற்றி இவர் எழுதிய உடையார் என்னும் வரலாற்றுப் புதினம் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரும் வாசகப்பரப்பு – இலக்கியத்தன்மை

  • விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ரப்பர், ஏழாம் உலகம், கொற்றவை போன்ற படைப்புகளின் மூலம் புதின இலக்கியத்தின் பன்முகத் தன்மையை வெளிக்கொணர்ந்தவர் ஜெயமோகன்.
  • மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ‘உபபாண்டவம்’, மதுரை மாவட்ட குற்றப்பரம்பரைப் பற்றிப் பேசும் ‘நெடுங்குருதி’ போன்றவை எஸ். ராமகிருஷ்ணனின் முக்கியமான புதினங்கள். இவரது சஞ்சாரம் புதினம் 2018ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
  • பெருமாள் முருகனின் நிழல் முற்றம், கூளமாதாரி,மாதொருபாகன் ஆகிய படைப்புகள் முக்கியமானவை.
  • இவர்களோடு பாவண்ணன், தமிழவன், ஜோ டி குரூஸ் போன்றோரின் படைப்புகள் இலக்கியத்தன்மை வாய்ந்த பெரும் வாசகப்பரப்பினைக் கொண்டவை.

பின்நவீனத்துவ புதினங்கள்

  • கோணங்கியின் பாழி, பிதிரா போன்றவை புதின இலக்கியத்தின் நவீன போக்குகளுக்காக அறியப்பட்டவை.
  • சாரு நிவேதிதாவின் எக்ஸ்டென்ஸியலிசமும் பேன்சி பனியனும், ஜீரோ டிகிரி ஆகிய படைப்புகள் இத்தன்மை வாய்ந்தவை.
  • பிரேம்,ரமேஷ் எழுதிய எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் போன்ற புதினங்கள் பின்நவீனத்துவ சொல்முறையைக் கொண்டவை.
  • எம்.யுவன் எழுதிய குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம் எழுதிய ஆகிய புதினங்களில் பின்நவீனத்துவ நுட்பங்களைக் காணலாம்.
  • எம்.ஜி.சுரேஷ் புதினங்களும் பின்நவீனத்துவ வரிசையில் சேரும்.
முற்போக்குப் புதினங்கள்
முற்போக்குப் புதினங்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினங்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினங்கள்

வ.எண்

ஆண்டு நூல்

ஆசிரியர்

1

1956 அலை ஓசை கல்கி
2 1961 அகல் விளக்கு

மு.வரதராசனார்

3

1963 வேங்கையின் மைந்தன் அகிலன்
4 1971 சமுதாய வீதி

நா. பார்த்தசாரதி

5

1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
6 1973 வேருக்கு நீர்

ராஜம் கிருஷ்ணன்

7

1977 குருதிப் புனல் இந்திரா பார்த்தசாரதி
8 1980 சேரமான் காதலி

கண்ணதாசன்

9

1984 ஒரு காவிரியைப் போல லக்ஷ்மி
10 1990 வேரில் பழுத்த பலா

சு. சமுத்திரம்

11

1991 கோபல்லபுரத்து மக்கள் கி, இராஜநாராயணன்
12 1992 குற்றால குறவஞ்சி

கோவி. மணிசேகரன்

13

1993 காதுகள் எம்.வி. வெங்கட்ராம்
14 1994 புதிய தரிசனங்கள்

பொன்னீலன்

15

1995 வானம் வசப்படும் பிரபஞ்சன்
16 1997 சாய்வு நாற்காலி

தோப்பில் முகமது மீரான்

17

1998 விசாரணைக் கமிசன் சா. கந்தசாமி
18 2001 சுதந்திர தாகம்

சி.சு. செல்லப்பா

19

2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து
20 2005 கல்மரம்

ஜி. திலகவதி (தமிழக காவல்துறையின் முதல் பெண் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்)

21

2007 இலையுதிர் காலம் நீல பத்மநாபன்
22 2011 காவல் கோட்டம்

சு. வெங்கடேசன்

23

2012 தோல் டி. செல்வராஜ்
24 2013 கொற்கை

ஜோ டி குரூஸ்

25

2014 அஞ்ஞாடி பூமணி
26 2015 இலக்கியச் சுவடுகள்

ஆ. மாதவன்

27

2018 சஞ்சாரம் எஸ். ராமகிருஷ்ணன்
28 2019 சூல்

சோ. தர்மன்

29

2020 செல்லாத பணம்

இமையம்

புதினங்கள்

  • ‘நாவெலா என்னும் இத்தாலிய மொழிச் சொல்லிருந்து, ‘நாவல்’ என்னும் ஆங்கிலச்சொல் பிறந்தது.
  • இச்சொல் புதுமை என்னும் பொருளுடையது. இதனால், நாவலைப் புதினம் என்றழைத்தனர்.
  • உண்மை நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கூறியதுடன், கற்பனை மாந்தரையும் நிகழ்ச்சிகளையும் படைத்துப் புனைந்து கூறியமையால் புதினம், புனைகதை என்னும் பெயரும் பெற்றது.
  • தற்காலத்தில் கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடை மூலம் தருகின்ற சிறந்ததொரு கலைவடிவமாகப் புதினம் திகழ்கிறது.

குறும்புதினங்கள்

  • சிறுகதையின் போக்கிலிருந்து சற்று மாறுபட்டவை.
  • இதன் கதைப்பின்னல் நீண்ட வரலாறு போல் அமையாமல் சிறுகதை போல் அமைந்திருக்கும்.
  • இவ்வகைப் புதினங்கள், புதினங்களாகவும் இல்லாமல் சிறுகதைகள் போலவும் இல்லாமல் அமையும் ஒருவகை புனைகதை இலக்கியம் என பிரெஞ்சு திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • புதினத்திலிருந்து அளவால் சுருங்கியதாக இருந்தாலும் இது புதினத்தின் ஒரு பிரிவாகும்.
  • புதின இலக்கியங்களிலிருந்து குறும்புதினங்கள் வேறுபடுவதற்கு அடிப்படைக் காரணமாகக் கதைக்கரு வெளிப்படுத்தும் முறை அமைகின்றது.
  • கதை, நிகழ்ச்சியை நோக்கி அமைந்தால் அதனைக் குறும்புதினம் என்றும், நிகழ்ச்சிக்கு அப்பால் கதைக்கரு அமைந்தால் அதனைப் புதினம் என்றும் கூறலாம். எனவே, சிறுகதையிலிருந்து மாற்றம் பெற்ற புனைகதை வடிவமே குறும்புதின இலக்கியம்.

 

 

 

Leave a Reply