புனைகதை இலக்கியம்

புனைகதை இலக்கியம்

புனைகதை இலக்கியம்
புனைகதை இலக்கியம்

புனைகதை இலக்கியம்

  • தமிழ் உரைநடை இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே இருந்து வந்துள்ளன. பாட்டிடை வைத்த குறிப்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரை வகை என உரைநடை சார்ந்த எண்ணங்களைத் தமிழிலக்கிய வரலாற்றின் காலந்தோறும் கண்டுகொள்ள முடிகிறது.
  • எனினும், மேலை இலக்கியங்களின் தொடர்புக்குப் பின்தான் தமிழில் முழுமையான உரைநடை இலக்கியங்கள் தோன்றியுள்ளன.

தமிழ்ப் புதினங்களின் தோற்றம்

  • தமிழின் முதல் புதினம் = 1879 இல் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
  • தமிழின் தொடக்கால புதினங்கள்
    • ராஜம் அய்யர் எழுதிய = கமலாம்பாள் சரித்திரம் (1896)
    • அ.மாதவையா எழுதிய = பத்மாவதி சரித்திரம் (1898)
  • தமிழில் சமூக சீர்திருத்த புதினங்களுக்கு தொடக்க புள்ளியாக அமைந்த புதினம் = அ.மாதவையா எழுதிய “முத்து மீனாட்சி” என்னும் புதினம் ஆகும்.
  • பெண்களுக்கான புதினங்களை எழுதியவர் = வை.மு.கோதைநாயகி அம்மாள்

கல்கி

  • தமிழிப் புதின இலக்கிய வளர்ச்சியில் பெரியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் = கல்கி
  • அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றைத் தம் படைப்புகளில் இணைத்துக் கொண்டார்.
  • நாட்டு விடுதலை உணர்வை மையமாகக் கொண்ட தியாகபூமி, அலை ஓசை, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு ஆகியன கல்கியின் சமூகப் புதினங்களில் குறிப்பிடத்தக்கவை.

பாரதியின் பங்களிப்பு

  • தமிழ்ப் புதின வகைக்கான பாரதியாரின் பங்களிப்பாக அவரின் சந்திரிகையின் கதை (1920) அமைகிறது. முற்றுப்பெறாமலேயே முதல்பாகத்துடன் முடிந்துவிடுகிற இப்புதினம் பாரதியின் இறுதிக்கால நூலாக அறியப்படுகிறது.

வரலாற்று புதினங்கள்

  • வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் புதினங்கள் வரலாற்றுப் புதினங்கள் ஆகும்.
    • கல்கி = பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்
    • சாண்டில்யன் = ராஜதிலகம்
    • கருணாநிதி = ரோமாபுரிப் பாண்டியன்
    • கண்ணதாசன் = சேரமான் காதலி

இலட்சியவாதப் புதினங்கள்

  • சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் இலட்சியவாதத்தையும் முதன்மையாகக் கொண்டு இலட்சியவாதப் புதினங்கள் எழுதப்பட்டன.
  • காந்திய இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி தமிழில் புதினங்கள் எழுதிய முன்னோடி காசி. வேங்கடரமணி ஆவார்.
    • காசி வேங்கடரமணி புதினங்கள் = தேச பக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன்
  • இவ்வகைப் புதினங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவராக மு.வரதராசனாரும் அறியப்படுகிறார்.
    • மு.வ புதினங்கள் = அகல் விளக்கு, கள்ளோ ? காவியமோ?, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள்
  • சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது (1975) பெற்ற அகிலன் புதினங்கள் இலட்சியவாதத்தைப் பேசின.
  • இலட்சியவாதிகளான நாயக, நாயகிகளின் சித்திரிப்புகளை நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் காணலாம்.

நவீனப் புதினங்கள்

  • புதினத்திற்கான மரபார்ந்த கட்டமைப்புகளைத் தகர்த்து, இயல்புவாதம் பேசுவன நவீனப் புதினங்கள்.
  • நடைமுறை வாழ்வில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அக மற்றும் புற வாழ்வுச் சிக்கல்களை இயல்பான மொழியில் இப்புதினங்கள் பேசுகின்றன.
  • இவ்வகைப் புதினங்கள் மக்களின் வாழிடங்களைப் பின்னணியாகக் கொண்டு எதார்த்தத் தன்மையோடு படைக்கப்பட்டவை.
  • இயல்பான சித்திரிப்புகளின் மூலம் கிராமத்து வாழ்க்கையைக் கூறும் புதினங்களைத் தந்தவர் ஆர்.ஷண்முகசுந்தரம்.
    • ஆர். ஷண்முகசுந்தரம் புதினங்கள் = நாகம்மாள், பூவும் பிஞ்சும், அழியாக் கோலங்கள்
  • உளவியல் அடிப்படையிலான மனவோட்டங்களை எம். வி.வெங்கட்ராமின் புனைவுகள் பேசுகின்றன.

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

கடித இலக்கியம்

கலைகள்

 

 

உரைநடை

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

சமுதாயத்தொண்டு

பிற ஆசிரியர்கள்

சிறுகதை

Leave a Reply