நாடகவியல்

நாடகவியல்

நாடகவியல்
நாடகவியல்

நாடகவியல்

  • தமிழ்மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு.
  • சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன்ற சொற்கள் கிடைக்கின்றன.
  • ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நாடகத்தின் தோற்ற வரலாறு

  • தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன்ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க நிகழ்த்தப்பட்ட நடனங்களும் கூத்துகளும் நாளடைவில் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்தன.
  • அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறியமுடிகிறது.
  • பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் நாடகக்கலை வளர உறுதுணையாக இருந்தனர்.
  • கலைஞர்களுக்குப் பரிசுகளும், பட்டங்களும், நிலங்களும் கொடுத்து ஊக்குவித்த குறிப்புகளை அவர்களின் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
  • பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமைகள் தோன்றின.

நவீன நாடகத்தின் தோற்றம்

  • இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆட்சி மற்றும் கல்விமுறைகளால் ஒவ்வொரு துறையிலும் நவீனத்தன்மை புகுந்தது. நாடகக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
  • ஐரோப்பிய, பார்சிய, மராத்திய அரங்கியலை உள்வாங்கிய நாடக நிகழ்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தன.
  • அதன்பின் தமிழ் நாடகக் கலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
  • நாடகங்களின் அமைப்பு, மேடை அலங்காரம், உத்திகள், ஒப்பனைகள், நாடகம் நடக்கும் கால அளவு போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் நாள்தோறும் காணும் நிகழ்ச்சியாக நாடகக்கலை மாறியது.
  • நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்தவர்களாகச் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற் கலைஞர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
  • சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலைநாட்டு உத்திகளையும் இணைத்துப் புதிய போக்கினை உருவாக்கித் தந்தார். தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துகளைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தார்.
  • 1891 ஆம் ஆண்டு சுகுண விலாச சபையை நிறுவிய பம்மல் சம்பந்தனார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேடைகளில் பல புதுமைகளைக் கையாண்டார்.
  • பரிதிமாற்கலைஞரின் நாடகவியல் என்னும் நூல் நாடகக்கலைக்கு இலக்கணம் வகுத்தது.
  • ஆங்கிலேயரை வெளியேற்றும் நோக்கோடு பரப்புரை நாடகங்களும் அரங்கேறின. பிறகு திராவிட இயக்க நாடகங்களும் சபா நாடகங்களும் வளர்ச்சி பெற்றன.

தமிழின் முதல் மௌன நாடகம்

  • 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக “அமைதி” என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம், பாரதிதாசனால் எழுதப்பட்டது. இது 16 காட்சிகளை கொண்டது.

நாடக அமைப்புகள்

  • அகில இந்திய அளவில் ‘பாரதீய நாட்டியகஸ்’ என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது.
  • இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதெமியும் நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப் பள்ளியும் உருவாக்கப்பட்டன.
  • இதனையடுத்து உலக நாடகக் கழகமும் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்புகள் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

நவீன நாடகத்தின் நோக்கம்

  • தொடக்க நிலையில் நவீன நாடகம், தெரு நாடகம் (Street Play) என்ற நிலையிலேயே மக்களிடம் அறிமுகமாகியது. எனவே எளிய அரங்கு என்ற பெயராலேயே இது சுட்டப்பட்டது.
  • நவீன நாடகக் கலைஞர்கள் மக்கள் முன் தங்கள் நாடகங்களை நடத்திக் காட்ட மேடையமைப்பையோ, அரங்கேற்ற உத்திமுறைகளையோ பயன்படுத்தவில்லை.
  • நவீன நாடகம், மரபுமுறை நாடகக் கூறுகளான அங்கம், களம் போன்றவற்றிற்கு முதன்மை தராமல் கருத்துகளை மட்டுமே முதன்மைப்படுத்தியது.
  • பொருட்செலவைத் தவிர்த்து, எந்த இடத்திலும் நாடகத்தை நிகழ்த்தலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியது. மக்களைக் கற்பனை உலகிற்குக் கொண்டு செல்லாமல் சமூகச் சிக்கல்களை அந்தந்தச் சூழ்நிலையிலேயே மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே நவீன நாடகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
  • நவீன நாடகம், பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்து அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றத்தை முதன்மைப்படுத்தியது. பாத்திரங்கள், பார்வையாளரின் இடையில் சென்று நடிப்பதும் உண்டு.
  • மக்கள், நாடகத்தை நோக்கி வந்த நிலையை மாற்றி, நாடகம் மக்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
  • நவீன நாடகம் புதுமையும் புரட்சிகரமான உணர்வும் கொண்டவர்களாலும், மக்கள் நலம்காக்க எண்ணியவர்களாலும் உருவாக்கப்பட்டது.

தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலம்

  • சிறுபத்திரிகைகளில் எழுதிய சிறுகதை ஆசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறையைச் சார்ந்த பேராசிரியர்கள், பொதுவுடைமைக் கருத்துகளின் பால் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் முதலானோர் நவீன நாடகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
  • இதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபதாண்டுகள், தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தன.
  • நவீன நாடக ஆசிரியர்கள் படிப்பதற்காக நாடகங்களை எழுதவில்லை. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்ற வகையில் எழுதினர். வாசகர்களுக்கு என்று எழுதாமல் பார்வையாளர்களுக்காக எழுதினார்.
  • எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த நாடகப் பயிற்சிப் பட்டறைகள், நாடகக் குழுக்களின் தோற்றம், நாடக விழாக்கள் போன்றவை நவீன நாடகத்திற்கு உந்து சக்தியாக அமைந்தன.
  • 1980-களின் காலகட்டத்தில் நாடகம் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதில் கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன்ற சிறுபத்திரிகைகள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன.
  • கணையாழியிலும் அவ்வப்போது நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளும் விமரிசனக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன.
  • சிறுபத்திரிகைகளின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நவீன நாடகக் குழுக்கள் உருவாயின.
  • கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம், பரீஷா, வீதி போன்றன 1980 களில் தொடங்கப்பெற்ற நவீன நாடகக் குழுக்கள்.
  • 1990 ஜூலையில் ரெங்கராஜனால் நாடகத்திற்கெனத் தொடங்கப் பெற்ற “நாடகவெளி” என்னும் இதழ் பத்து ஆண்டுகளில் நாற்பது இதழ்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தழுவல் நாடகங்கள்

  • நாடகக் குழுக்கள் தோன்றிய அளவிற்கு நவீன நாடக எழுத்தாளர்கள் தமிழில் இல்லை எனலாம்.
  • இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஞான.ராஜசேகரன், ஜெயந்தன், ஞாநி போன்றோர் எழுதிய சில நாடகங்களே முதலில் இருந்தன.
  • எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின.
  • பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
  • மு. ராமசாமி மேடையேற்றிய ‘துர்க்கிர அவலம்’, சே. இராமானுஜத்தின் ‘கறுப்புத் தெய்வத்தைத் தேடி’ போன்றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.
நாடகவியல்
நாடகவியல்

நவீன நாடக ஆசிரியர்களும் நாடகங்களும்

நாடக ஆசிரியர்கள்நாடகங்கள்
ந.முத்துசாமிகாலம் காலமாக, நாற்காலிக்காரர், அப்பாவும் பிள்ளையும், இங்கிலாந்து, சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், விறகுவெட்டிகள், வண்டிச்சோடை, நற்றுனணயப்பன் அல்லது கடவுள்
இந்திரா பார்த்தசாரதிஇராமாநுஜர், இறுதி ஆட்டம், கொங்கைத்தீ, ஔரங்கசீப், நந்தன் கதை, பசி, மழை, காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம், தர்மம், போர்வை போர்த்திய உடல்கள்
சே. இராமானுஜம்புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிகள், சஞ்சயன் காட்சி தருகிறான், அக்கினிக்குஞ்சு, கேகயன் மடந்தை, வெறியாட்டம், செம்பவளக்காளி, மௌனக்குறம்
மு.இராமசாமிதுர்க்கிர அவலம், சாபம்!விமோசனம்?, புரட்சிக்கவி, ஆபுத்திரன்
பிரபஞ்சன்முட்டை, அகல்யா
ஜெயந்தன்மனுசா மனுசா, நினைக்கப்படும்
ஞான ராஜசேகரன்வயிறு, மரபு, பாடலிபுத்திரம்
பிரளயன்உபகதை, நவீன மத்தவிலாசப் பிரகடனம் அல்லது காஞ்சித் தலைவி
எம்.டி.முத்து குமாரசாமிசைபீரிய நாரைகள் இனி இங்கு வரப் போவதில்லை, குதிரைக்காரன் கதை.
இன்குலாப்ஔவை, மணிமேகலை
எஸ்.எம்.ஏ. ராம்சுயதர்மம், மூடிய அறை, மணிமேகலையின் கண்ணீர், எப்போ வருவாரோ.
கே.ஏ.குணசேகரன்பலிஆடுகள், சத்திய சோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, அறிகுறி, பாறையைப் பிளந்து கொண்டு, கனவுலகவாசி, தொட்டில் தொடங்கி.
ரமேஷ் – பிரேம்ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல்
எஸ்.ராமகிருஷ்ணன்உருளும் பாறைகள், தனித்திருக்கப்பட்டவர்கள், சூரியனின் அறுபட்ட சிறகுகள், அரவான்.
அ. ராமசாமிஒத்திகை, மூட தேசத்து முட்டாள் ராஜா, தொடரும் ஒத்திகைகள், 10 குறு நாடகங்கள்
வ. ஆறுமுகம்கருஞ்சுழி, ஊசி, தூங்கிகள்
முருகபூபதிசரித்திரத்தின் அதீத ம்யூசியம், கண்ணாடியுள் அலைவுறும் பிம்பங்கள், வனத்தாதி, தேகவயல், ரகசிய நிழல்கள், தனித்திருக்கப்பட்டவர்கள், கூந்தல் நகரம், செம்மூதாய்.

 

 

 

 

Leave a Reply