சமணமதம்

சமணமதம்
- சமணமதத்தை முதன் முதலில் துவக்கியவர் = ரிஷபதேவர்.
- ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷப தேவர்.
- தீர்த்தங்கர் என்ற சொல் எந்தப் பிரிவைச் சார்ந்தது? – சமணம்
- அனேகாந்தவாத கோட்பாட்டுடன் எந்த மதம் தொடர்புடையது? – சமணம்
- ஜைன மதத்தில், கர்மனின் அழிவு (தனிப்பட்ட ஆத்மாக்களுடன் தன்னைப் பிணைத்து, அவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு உடல் பொருள்) என அறியப்படுகிறது? – நிர்ஜாரா
- சமண மதத்தில் சம்வர் என்பதன் பொருள்? ஆன்ம உணர்வில் ஜட கர்மங்களை நிறுத்துதல்
- மூன்று ரத்தினங்கள் / திரிரத்னா (சரியான அறிவு, சரியான நம்பிக்கை மற்றும் சரியான செயல்) தொடர்புடைய மதம் எது? – சமணம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- அஜீவிகா இந்திய தத்துவப் பள்ளியை நிறுவியவர் யார்? – மக்கலி கோசாலா (கிமு 5 ஆம் நூற்றாண்டு)
- அனுவ்ரதா என்ற கருத்தை முன்வைத்த சமயம்? சமணம்
- எந்த மதத்தில் யாப்பானியா பிரிவு இருந்தது? – சமணம்
- ஆரம்பகால சமண இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன? – அர்த்தமகதி (ஜெயின் பிராகிருதம்)
- பார்சவநாதருடன் தொடர்புடைய ஜெயின் புனித இடம் எது? சம்மத் ஷிகர் (ஜார்கண்ட்)
- ஜைன மதத்தின் முதல் பிரிவிற்குப் பிறகு ஸ்வேதாம்பர பிரிவை நிறுவியவர் யார்? – ஸ்தூலபத்ரா (ஸ்தலபாஹு)
- எந்த மதம் சியாத்வாத் கோட்பாட்டுடன் தொடர்புடையது? – சமணம்.
- 19வது தீர்த்தங்கரான “மல்லிநாதர்” ஒரு பெண் தீர்த்தங்கரர் ஆவார். சமண மதத்தின் ஒரே பெண் தீர்த்தங்கரர் = மல்லிநாதர்.
- 22வது தீர்த்தங்கரர் = “நேமிநாதர்” (அரிஸ்டாநேமி) பகவான் கிருஷ்ணரின் உறவினர் என்பர்.
- 23 வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர். இவர் வாரணாசியின் அரசர் அஸ்வசேனருக்கும் ராணி வாமாவுக்கும் பிறந்தவர்.
- கர்நாடகாவில் உள்ள நவகிரக ஜெயின் கோயிலில் பார்ஸ்வநாதரின் மிக உயரமான சிலை உள்ளது.
- ஜைன மதத்தின் இறுதி தீர்த்தங்கரர் = வர்த்தமன மகாவீரர் (24 வது தீர்த்தங்கரர்)
- சமண (ஜைன) மதத்திற்கும், புத்த மதத்திற்கும் இடையே தொடர்புள்ள இடம் = கௌசாம்பி (உத்திரப் பிரதேசம்)
- 16 மகாஜனபதங்கள் பற்றி கூறும் சமண இலக்கியம் = பகவதிசூத்திரம்
- பராபர் குகையினை ஏற்படுத்திய பிரிவு = அஜீவிகா
- ஜைன இலக்கியம் “கல்பசூத்திரத்தை” உருவாக்கியவர் = பத்திரபாகு
- ஜைன மதத்தில் சிலை வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் = ஓடிசாவின் ஹதிகும்பா கல்வெட்டு
- சமண சமயத்தின் கடவுள் = அருக தேவன்
- சமண சமயத்தை நாடு முழுவதும் பரப்பிய பெருமை கொண்டவர் = பார்சவநாதர்
- விஷ்ணு புராணத்திலும், பாகவத புராணத்திலும் சமண சமயத்தின் முதல் குருவான ரிஷபதேவரை, விஷ்ணு பகவானின் அவதாரம் எனப் போற்றப்படுகிறது.
- ரிஷபதேவர், இந்தியாவின் முதல் சக்கிரவர்த்தி எனப்படும் பரத மன்னரின் தந்தை ஆவார்.
- ரிஷபதேவ் என்ற பெயர் முதலில் ஸ்ரீமத் பகவத்தில் (ரிக்வேதம்) விவரிக்கப்பட்டது. அவர் அட்டாவே அல்லது கைலாஷ் மலையில் இறந்தார்.
- ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள 2 தீர்த்தங்கர்கள் = ரிஷபதேவர் (ஆதிபகவன்) மற்றும் நேமிநாதர் (அரிஷ்டநேமி)
- சமண சமயத்தின் 5 கொள்கைகள் = அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமை), அபரிகிருகம் (உடைமை இல்லாமை), பிரமச்சரியம்
- முதல் நான்கு கொள்கையை வழங்கியவர் = பார்சவநாதர்.
- பிரமச்சரியம் கொள்கையை வழங்கியவர் = மகாவீரர்.
- மகாவீரரின் இறப்பிற்கு பின்னர் சமண சமயம் 2 ஆக பிரிந்தது (சந்திரகுப்த மவுரியர் காலத்தில்). பத்திரபாகு தலைமையில் திகம்பரர் என்ற பிரிவும், ஸ்தூலபத்திரர் தலைமையில் ஸ்வேதம்பரர் என்ற பிரிவும் துவங்கின.
- ஸ்வேதம்பரர்கள் = பார்சவநாதரின் கொள்கையை கடைபிடிப்போர். வெள்ளை ஆடை அணிபவர்கள்.
- திகம்பரர்கள் = மகாவீரரை பின்பற்றியோர். ஆடையை துறந்தவர்கள்.
- ஜெயின் புனித இலக்கியம்: அர்ஷா அல்லது அர்த்த மாகதி எனப்படும் பத்ரிகா வடிவத்தில் எழுதப்பட்டது, இவை 12 அங்கங்கள், 12 உபங்காக்கள், 10 பிரகிர்ணங்கள், 6 சேடசூத்திரங்கள் மற்றும் 4 முல்சூத்திரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- சமண சமையத்தில் வேளாண்மை தொழில் செய்வதை பாவம் என்றனர்.
- மகாவீரரும், மவுரிய அரசன் பிம்பிசாரரும் உறவினர் முறை உடையவர்கள் ஆவர்.
- மகாவீரரின் சீடர இருந்து, பிறகு பிரிந்து சென்று “அஜீவிகா” அமைப்பை ஏற்படுத்தியவர் = மக்கலி கோசலா.

24 தீர்த்தங்கர்கள்
24 தீர்த்தங்கர்கள்
| வ. எண் | பெயர் | சின்னம் |
|---|---|---|
| 1 | ரிஷபதேவர் (ஆதிநாதர்) | காளை |
| 2 | அஜிதநாதர் | யானை |
| 3 | சம்பவநாதர் | குதிரை |
| 4 | அபிநந்தநாதர் | குரங்கு |
| 5 | சுமதிநாதர் | கோட்டான் |
| 6 | பத்மபிரபா | தாமரை |
| 7 | சுபர்சுவநாதர் | சுவசுத்திக்கா |
| 8 | சந்திரபிரபா | சந்திரன் |
| 9 | புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) | முதலை |
| 10 | சீதளநாதர் (சித்தி பட்டராகர்) | கற்பக மரம் |
| 11 | சிரேயன்சுவநாதர் | காண்டாமிருகம் |
| 12 | வசுபூஜ்ஜியர் | எருமை |
| 13 | விமலநாதர் | பன்றி |
| 14 | அனந்தநாதர் (அனந்தஜித் பட்டராகர்) | முள்ளம் பன்றி |
| 15 | தருமநாதர் | வஜ்ஜிராயுதம் |
| 16 | சாந்திநாதர் | மான் |
| 17 | குந்துநாதர் | ஆடு |
| 18 | அரநாதர் | மீன் |
| 19 | மல்லிநாதர் | கலசம் |
| 20 | முனீஸ்வரநாதர் | ஆமை |
| 21 | நமிநாதர் | நீலத் தாமரை |
| 22 | நேமிநாதர் (அரிஷ்டநேமி) | சங்கு |
| 23 | பார்சவநாதர் | பாம்பு |
| 24 | மகாவீரர் | சிங்கம் |

சமண மாநாடு
| மாநாடு | வருடம் | இடம் | தலைமை | மன்னர் | நிகழ்வு |
|---|---|---|---|---|---|
| முதல் மாநாடு | கி.மு 3௦௦ | பாடலிபுத்திரம் | ஸ்தூலபத்திரர் | சந்திரகுப்த மௌரியர் | 14 பூர்வங்களுக்கு பதிலாக 12 அங்கங்கள் உருவாக்கப்பட்டன |
| இரண்டாவது மாநாடு | கி.பி.512 | வல்லாபி | தேவர்தகினி க்ஷ்மாஸ்ரமணா | 12 அங்கங்கள் மற்றும் 12 பூர்வங்கள் உருவாக்கப்பட்டன |
- வேதங்கள்
- வேத காலம்
- Indus Valley Civilization
- சிந்து சமவெளி நாகரீகம்
- The Stone Age
- கற்காலம்
- Famous Indian Rulers and their Inscriptions
- இந்திய வரலாற்றில் முக்கிய கல்வெட்டுகள்
- சமணமதம்
- சமணமதம்
- சமணமதம்
- சமணமதம்
- சமணமதம்