பட்டயச் சட்டம் 1853
பட்டயச் சட்டம் 1853
- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி பட்டயச் சட்டம் இதுவாகும்.
- இது அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு அடிக்கோலிய சட்டமாகும்
பட்டயச் சட்டம் 1853 – தேவை
- 1833ம் வருட சட்டப்படி கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட 2௦ வருட கால சாசனம் 1853ல் முடிவடையவே, சாசனத்தை மேலும் 2௦ ஆண்டுகளுக்கு நீட்டிக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
- நடைமுறையில் உள்ள இரட்டை நிர்வாக முறையை ஒழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது
பட்டயச் சட்டம் 1853 – சிறப்பபு இயல்புகள்
-
சாசனம் நீட்டிக்கப்படவில்லை:
- இச்சட்டத்தின் படி கம்பெனியின் சாசனம் மேலும் 2௦ நீட்டிக்க கோரப்பட்டது. அனால் சாசனம் நீட்டிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றம் விரும்பும் வரை இங்கிலாந்து அரசரின் சார்பாக இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளை கம்பெனி ஆட்சி செய்துக் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டது
-
இயக்குனர் குழுவின அதிகாரம் குறைப்பு:
- கம்பெனி இயக்குனர்களின் அதிகாரம் குறைக்கப்பத்து. இயக்குனர்களின் எண்ணிக்கை 24-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
-
சட்டமன்ற நடவடிக்கை:
- இச்சட்டம் முதன் முறையாக தலைமை ஆளுநர் அரசாங்க நடவடிக்கைகளை “சட்டமன்ற நடவடிக்கைகள்” (Legislative functions) எனவும், “ஆட்சித்துறை நடவடிக்கைகள்” (Executive functions) எனவும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
- சட்டமன்றக் குழுவிற்கு கூடுதலாக 6 பேர் நியமிக்கப்பட்டனர்
-
இந்திய மத்திய சட்ட மன்றம்:
- கவர்னர் ஜெனரலின் சட்டமன்ற கவில் குழு இனி “இந்திய மத்திய சட்ட மன்றக் குழு” (Indian Central Legislative Council) என அழைக்கப்படும். இந்த கவுன்சில் குழு இங்கிலாந்து பாராளுமன்றம் போலவே விதிகளின் படி, ஒரு சிறிய பாரளுமன்றமாக (Mini Parliament) செயல்படும்.
-
- இந்த மைய சட்டமன்றத்தின் தொடக்கம், இந்திய அரசியலமைப்பில் முதல் முதலாக புகுத்தப்பட்டது
-
திறந்தவெளி போட்டித்தேர்வு முறை:
- சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு திறந்தவெளி போட்டித் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. இது இந்தியர்களும் பங்குபெறும் வகையில் கொண்டுவரப்பட்டது.
- இதன்படி உயர் சிவில் சர்விஸ் எனவும், கீழ்நிலை சிவில் சர்விஸ் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டது.
-
மறுப்பாணை அதிகாரம்:
- சபையில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு மசோதாவும் கவர்னர் ஜெனரலின் கையெழுத்து பெற்ற பின்னரே சட்டமாகும். இயற்றப்பட்ட மசோதாக்களை தள்ளுபடி செய்யும் “மறுப்பாணை அதிகாரம்” (Veto Power) கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது
-
புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம்:
- புதிய மாநிலங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள மாநிலங்களின் எல்லைகளில் மாற்றம் செய்யவும் கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
- ஆனால் இந்த மாற்றங்கள் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெற வேண்டும்
-
வங்காளத்திற்கு தனியாக கவர்னர் நியமனம்:
- இதுவரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலே வங்காளத்தின் கவர்ணருமாக செயல்பட்டு வந்தார். பல நிர்வாக குழப்பங்கள் காரணமாக வந்காளத்திற்கு தனி ஆளுநரும், பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரு துணை கவர்னரும் நியமனம் செய்யப்பட்டனர்
-
மாகாண பிரதிநிதிகள்:
- முதன் முறையாக தலைமை ஆளுநர் இந்திய மத்திய சட்ட மன்றத்தில் (Indian Legislative Council) சென்னை, பம்பாய், வங்காளம் மற்றும் ஆக்ரா ஆகிய நான்கு மாகாணத்திற்கு மாகாண பிரதிநிதிகளை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது (Local Representation in Provinces)
பட்டயச் சட்டம் 1853 – குறிப்பு
- இச்சட்டத்தின் பயனாக 1854ம் ஆண்டு “இந்திய சிவில் சர்விஸ் குழு” (Committee on the Civil Service) எனப்படும் “மெக்காலே குழு” (Macaulay Committee) அமைக்கப்பட்டது.
- மத்திய சட்டமன்ற சபை உறுப்பினர்களின் ஆண்டு சம்பளம் 5௦௦ பவுண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது
- கம்பெனி அதன் வர்த்த உரிமையை இழந்தது. ஆட்சி அதிகாரங்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றம் கைப்பற்றியது.
- ஆனால் இச்சட்டம் இந்தியர்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. இந்திய ஆட்சி முறையில் காணப்பட்ட “இரட்டை ஆட்சி முறை” ஒழிக்கப்படவில்லை.
சட்டத்தின் முடிவு
- இந்த 1853 பட்டயச் சட்டம் 5 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்தது.
- 1857ம் ஆண்டு இந்தியப் பெருங்கிளர்ச்சி (Indian Rebellion, 1857) காரணமாக கம்பெனியின் நூற்றாண்டுகால ஆட்சி (1757 – 1857) முடிவுக்கு வந்து, பிரிட்டிஷ் ஆட்சியாக உருமாற்றம் அடைந்தது.
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
-
CHARTER ACT OF 1793 (பட்டயச் சட்டம் 1793)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)