பரிதிமாற் கலைஞர்
வாழ்க்கைக்குறிப்பு
- இயற் பெயர் = சூரிய நாராயண சாஸ்திரி.
- ஊர் = மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
- பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
- தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
- இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார்
- இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம்
பரிதிமாற்கலைஞர் சிறப்பு பெயர்கள்
- தமிழ் நாடக பேராசிரியர்
- திராவிட சாஸ்திரி (சி.வை.தாமோதரம்பிள்ளை)
- தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
பரிதிமாற் கலைஞர் நூல்கள்
- பாவலர் விருந்து
- தனிப்பாசுரத் தொகை
- தமிழ் மொழி வரலாறு
- சித்திரக்கவி
- மதிவாணன்(புதினம்)
- உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
- முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
- தமிழ் புலவர் சரித்திரம்
- தமிழ் வியாசங்கள்
பதிப்பித்த நூல்கள்
- தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)
- சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
- மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
- புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
- உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
பரிதிமாற் கலைஞர் நாடகங்கள்
- ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
- கலாவதி(நாடக நூல்)
- மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
- நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
- சூர்பநகை(புராண நாடகம்)
இதழ்கள்
- ஞானபோதினி (மு.சி. பூர்ணலிங்கம் என்பவருடன் இணைந்து நடத்தியது)
- விவேக சிந்தாமணி
பரிதிமாற்கலைஞர் TNPSC
- சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
- எப்.ஏ (A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார்
- சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்
- 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
- மறைமலை அடிகளின் ஆசிரியர்
- சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலை வெளியிட்டார்
- “அங்கம்” என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
- கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் தனது நாடகங்களில் தாமே நடித்தார்
- சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்
- இவர் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்
- நவம்பர் 2, 1903-இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்
“ என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே. ”
பரிதிமாற்கலைஞர் சிறப்பு
- சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
- இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
- இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
- உயர்தனிச் செம்மொழி (classical language), தகுந்தவை தங்கி நிற்றல் (survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
- முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்
- தமிழை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன் முதலில் தன பேச்சின் மூலம் கூறியவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது
- இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன
- 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
Kalki