10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது
10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது

  • நால்வகைப் பாக்கள் = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
  • தமிழ்விடு தூது கூறும் வயலின் வரப்புகளாக இருப்பவை = நால்வகை பாக்கள்.
  • பாவினங்கள் = மூன்று.
  • மூவகை பாவினங்கள் = துறை, தாழிசை, விருத்தம்.
  • தமிழ்விடு தூது கூறும் வயலின் மடைகளாக இருப்பவை = மூவகை பாவினங்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • கரணங்கள் = நான்கு.
  • நாற்கரணங்கள் = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  • தமிழ்விடு தூது கூறும் ஏர்களாக இருப்பவை = நால்வகை கரணங்கள்.
  • செய்யுள் நன்னெறிகள் = நான்கு.
  • நான்கு செய்யுள் நன்னெறிகள் = வைதருப்பம் (ஆசுகவி), கௌடம் (மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரக்கவி), மாகதம் (வித்தாரக்கவி).
  • தமிழ்விடு தூது கூறும் வயலின் விதைகளாக இருப்பவை = நான்கு செய்யுள் நன்னெறிகள்.
  • தமிழ்விடு தூது கூறும் வயலில் இருந்து கிடைக்கும் விளைபொருள்கள் யாவை = அறம், பொருள், இன்பம், வீடு.
  • பயிர்களுக்கு இடையே வளரும் “களைகள்” = போலிப்புலவர்கள்.
  • போலிப்புலவர்களின்,
    • தலையில் குட்டுவதற்கு = அதிவீரராம பாண்டியன்
    • செவியை அறுக்க = வில்லிப்புத்தூரார்
    • தலையை வெட்ட = ஒட்டக்கூத்தர்.
10TH தமிழ்விடு தூது
10TH தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது நூற்குறிப்பு

  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தூதின் பா வகை = கலிவெண்பா.
  • கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப் பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
  • தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத்தலைவன் = மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்.
  • மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண் ஒருத்தி, “தமிழ் மொழியை” தூதாக அனுப்புவது போல் அமைந்த நூல், “தமிழ்விடு தூது” ஆகும்.
  • தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சொற்பொருள்

  • அரியாசனம் – சிங்காதனம்
  • பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  • வரம்பு – வரப்பு
  • ஏர் – அழகு
  • நாற்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  • நெறிநாலு – வைதருப்பம் (ஆசுகவி), கௌடம் (மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரகவி), மாகதம் (வித்தாரகவி)
  • நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
  • சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
  • நாளிகேரம் – தென்னை

இலக்கணக்குறிப்பு

  • செவியறுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை

பிரித்தறிதல்

  • நாற்கரணம் = நான்கு + கரணம்
  • காரணத்தேர் = கரணத்து + ஏர்
  • நாற்பொருள் = நான்கு + பொருள்
  • இளங்கனி = இளமை + கனி
  • விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு

 

 

Leave a Reply