10TH TAMIL பொது
10TH TAMIL பொது
- திணை இரண்டு வகைப்படும்.
- இருதிணைகளாவன = உயர்திணை, அஃறிணை
- உயர்திணை = ஆறறிவு உடைய மக்களை உயர்திணை என்பர்.
- அஃறிணை = உயிரற்ற பொருட்களை அஃறிணை (அல்திணை) என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பால் எத்தனை வகைப்படும்
- பால் ஐந்து வகைப்படும். அவை,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
ஐம்பால்
- திணையின் உட்பிரிவே = பால்.
- பால் என்பதன் பொருள் = பகுப்பு, பிரிவு
உயர்திணை பிரிவுகள் யாவை
- உயர்திணை = ஆண்பால், பெண்பால், பலர்பால்
அஃறிணை பிரிவுகள் யாவை
- அஃறிணை = ஒன்றன்பால், பலவின்பால்.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்
- வீரன், அண்ணன், மருதன் = ஆண்பால்
- மகள், அரசி, தலைவி = பெண்பால்
- மக்கள், பெண்கள், ஆடவர் = பலர்பால்
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்
- அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
- எ.கா. யானை, புறா, மலை
- அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
- எ.கா. பசுக்கள், மலைகள்
மூவிடங்கள் யாவை
- இடங்கள் மூன்று வகைப்படும். அவை,
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
இடம் |
பெயர் / வினை | எடுத்துக்காட்டு |
தன்மை |
தன்மைப் பெயர்கள் |
நான், யான், நாம், யாம் |
தன்மை வினைகள் |
வந்தேன், வந்தோம் | |
முன்னிலை |
முன்னிலைப் பெயர்கள் |
நீ, நீர், நீவிர், நீங்கள் |
முன்னிலை வினைகள் |
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் | |
படர்க்கை |
படர்க்கைப் பெயர்கள் |
அவன், அவள், அவர் அது, அவை |
படர்க்கை வினைகள் |
வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள் பறந்தது, பறந்தன |
வழாநிலை என்றால் என்ன
- இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
வழாநிலை எத்தனை வகைப்படும்
- வழாநிலை ஏழு வகைப்படும். அவை,
- திணை வழாநிலை (இருதிணை)
- பால் வழாநிலை
- இடம் வழாநிலை
- காலம் வழாநிலை
- வினா வழாநிலை
- விடை வழாநிலை
- மரபு வழாநிலை
வழுநிலை என்றால் என்ன
- இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு (குற்றம்) எனப்படும்.
வழு எத்தனை வகைப்படும்
- வழு ஏழு வகைப்படும். அவை,
- திணை வழுநிலை
- பால் வழுநிலை
- இடம் வழுநிலை
- கால வழுநிலை
- வினா வழுநிலை
- விடை வழுநிலை
- மரபு வழுநிலை
வழு |
வழாநிலை |
|
திணை |
செழியன் வந்தது | செழியன் வந்தான் |
பால் | கண்ணகி உண்டான் |
கண்ணகி உண்டாள் |
இடம் |
நீ வந்தேன் | நீ வந்தாய் |
காலம் | நேற்று வருவான் |
நேற்று வந்தான் |
வினா |
ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்டல் | இரு விரல்களைக் காட்டி ‘எது சிறியது? எது ‘பெரியது?’ என்று கேட்டல் |
விடை | ‘கண்ணன் எங்கே இருக்கிறார்?’ என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல் |
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல் |
மரபு |
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் |
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல் |
வழுவமைதி என்றால் என்ன
- இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.
வழுவமைதி எத்தனை வகைப்படும்
- வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை,
- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- இட வழுவமைதி
- கால வழுவமைதி
- மரபு வழுவமைதி
திணை வழுவமைதி என்றால் என்ன
- “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும்.
- இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
பால் வழுவமைதி என்பது யாது
- “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும்.
- இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
இட வழுவமைதி என்பது யாது
- மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
கால வழுவமைதி என்றால் என்ன
- குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
- இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும்.
- அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
- ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
மரபு வழுவமைதி என்றால் என்ன
- “கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்”- பாரதியார்.
- குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும்.
- இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- பெருமாள் திருமொழி