10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி

Table of Contents

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி
10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி

  • மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு.
  • நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு.

மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா கூற்று

  • “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் மணவை முஸ்தபா.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

  • “ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்’ என்கிறார் மு.கு. ஜகந்நாதர்.

சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு

  • “மொழிபெயர்த்தல்” என்ற தொடரைத் தொல்காப்பியர் எங்கு குறிபிட்டுள்ளார் = தொல்காப்பிய “மரபியலில்” (98).
  • “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள செப்பேடு = சின்னமனூர்ச் செப்பேடு
  • பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் தேவை

  • மொழிபெயர்ப்பு எல்லாக் காலக்கட்டங்களிலும் தேவையான ஒன்று.
  • விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது;
  • ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது;
  • பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது.
  • இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

ஜப்பான் – அமேரிக்கா போர்

  • உலகப் போரின்போது அமெரிக்கா, “சரண் அடையாவிடில் குண்டு வீசப்படும்” என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், ‘மொகு சாஸ்ட்டு’ என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர்.
  • அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹீரோஷிமாவில் குண்டுவீசியது என்று சொல்கிறார்கள்.
  • அந்தத் தொடருக்குப் பொருள், ‘விடைதர அவகாசம் வேண்டும்’ என்பதாம்.
  • ஆனால் அதற்கு அமெரிக்கர்கள், ‘மறுக்கிறோம்’ என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர்.

மொழிபெயர்ப்புக் கல்வி

  • மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்;
  • நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன.
  • அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில்வளர்ச்சி, கலை போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொழிவேலியை அகற்றும் மொழிபெயர்ப்பு

  • பிறமொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.
  • பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது.
  • மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.

ஷேக்ஸ்பியர்

  • ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

உலக மொழிகளில் திருக்குறள்

  • தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிப் பெயர்ப்பால் தான்.

மொழிப்பெயர்ப்பு படைப்பாளிகள்

  • மொழிபெயர்ப்பு இல்லாவிடில் ஷேக்ஸ்பியர், கம்பன் போன்ற படைப்பாளிகள் தெரிந்திருக்க மாட்டார்கள்.
  • இரவீந்திரநாத தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
  • மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலகஅளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

ஒரு நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடல்

  • ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

மொழிபெயர்ப்பின் இலக்கியத் திறனாய்வு

  • மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம்.
  • இன்றுள்ள புதிய திறனாய்வு முறைகளை எல்லாம் எந்த மொழியின் வழியாக நாம் பெற்றிருக்கிறோம் = ஆங்கிலம்.

மொழிபெயர்ப்பு – செம்மை

  • “Camel” என்பதன் பொருள் = ஒட்டகம், வடம் (கயிறு).
  • “Underground Drainage” என்பதன் தமிழாக்கம் = புதைசாக்கடை (மலையாள மொழியில் இருந்து பெறப்பட்டது)
  • “Telegraph” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைவரி
  • “Television” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைக்காட்சி
  • “Telephone” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைபேசி
  • “Telescope” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைநோக்கி
  • “Telemetry” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைஅளவியல்
  • “Transcribe” என்பதன் தமிழ்ச்சொல் = படியெடுத்தல்
  • “Transfer” என்பதன் தமிழ்ச்சொல் = மாறுதல்
  • “Transform” என்பதன் தமிழ்ச்சொல் = உருமாற்றுதல்
  • “Transact” என்பதன் தமிழ்ச்சொல் = செயல்படுத்துதல்

நூல்கள் மொழிபெயர்ப்பு

  • ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.
  • தமிழ்நூல்கள் பிறமொழிகளில் புள்ளிவிவரப்படி அதிகமான மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

பயன்கலை என்பது யாது

  • உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
  • கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்.
  • எதனை “பயன்கலை” என்று கூறுவர் = மொழிபெயர்ப்பை.

தமிழில் உரைநடை வளர்ச்சி

  • செய்யுளையே தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
  • அப்போது தமிழ், ஆங்கிலத் தொடரமைப்புகளையும் கூறுகளையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

குலோத்துங்கன்

  • தமிழுக்கு அணைத்து அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்பதனை குறிப்பிடும் குலோத்துங்கன், கீழ்க்கண்டவாறு குறிபிட்டுள்ளார்,

“காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

பேசி மகிழ் நிலை வேண்டும்”

பாரதியின் கூற்று

  • பாரதியார் = “”சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்கிறார்.
  • பாரதியார் = “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”.

தனிநாயக அடிகளின் கூற்று

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி
10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி
  • பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள.
  • இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம்.
  • பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன.
  • அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன்.
  • “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.”

வால்காவிலிருந்து கங்கை வரை

  • “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை இந்தியில் எழுதியவர் = ராகுல் சாங்கிருத்யாயன் (1942)
  • எந்த சிறையில் இருந்த பொழுது ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார் = ஹஜிராபாக் மத்திய சிறை
  • “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை தமிழில் முதலில் மொழிப்பெயர்த்தவர் = கணமுத்தையா (1949)
  • “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை 2016 ஆம் ஆண்டு தமிழில் மொழிப் பெயர்த்தவர் = டாக்டர் என்.ஸ்ரீதர்
  • “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை 2016 ஆம் ஆண்டு தமிழில் மொழிப் பெயர்த்தவர் = முத்து மீனாட்சி
  • “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை 2018 ஆம் ஆண்டு தமிழில் மொழிப் பெயர்த்தவர் = யூமா வாசுகி.

பாரதியார் உருவாக்கிய மொழிபெயர்ப்பு வார்த்தைகள்

10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி
10TH TAMIL மொழிபெயர்ப்புக் கல்வி
  • “Exhibition” என்ற சொல்லுக்கு பாரதியார் உருவாக்கிய மொழிபெயர்ப்புச் சொல் = காட்சி, பொருட்காட்சி
  • “East Indian Railways” என்ற சொல்லுக்கு பாரதியார் உருவாக்கிய மொழிபெயர்ப்புச் சொல் = இருப்புப் பாதை
  • “Revolution” என்ற சொல்லுக்கு பாரதியார் உருவாக்கிய மொழிபெயர்ப்புச் சொல் = புரட்சி
  • “Strike” என்ற சொல்லுக்கு பாரதியார் உருவாக்கிய மொழிபெயர்ப்புச் சொல் = தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்.

 

 

 

Leave a Reply