10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Table of Contents

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

  • தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்ன ஒருவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம்

  • பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் உள்ள இடம் = சென்னை கோட்டூர்புரம்.
  • பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு = 1988
  • பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள காட்சிக் கூடங்களின் எண்ணிக்கை = 10.

360 பாகை அரைவட்ட வானத்திரை

  • பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழக வளாகத்தில் உள்ள கோளரங்கம், இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோளரங்கம் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தற்காலத்தின் ஐன்ஸ்டீன்

  • “தற்காலத்தின் ஐன்ஸ்டீன்” என்று புகழப்படுபவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.
  • “மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக் கூர்மை” என்று கூறியவர் = ஸ்டீபன் ஹாக்கிங்
  • “அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே” என்று கூறியவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.

ஸ்டீபன் ஹாக்கிங்

10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
  • ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினம் = 8 ஜனவரி 1942.
  • ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு ஏற்பட்ட நோய் = பக்கவாதம் (Amyotrophic lateral Scleroses) என்னும் நரம்பு நோய்ப் பாதிப்பு.
  • பக்கவாதம் ஏற்பட்ட பொழுது அவருக்கு வயது = 21 வயது (1963ஆம் ஆண்டு)
  • மருத்துவ உலகமே மிரண்டுபோகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார்
  • 1985இல் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்தார்.

செயற்கை நுண்ணறிவு கணினி

  • கன்னத் தசையசைவு மூலம் தன் கருத்தைக் கணினியில் தட்டச்சுசெய்து வெளிப்படுத்தினார்.
  • அவரின் ஆய்வுகளுக்குத் துணையாகச் செயற்கை நுண்ணறிவுக் கணினி செயல்பட்டது.

பெருவெடிப்பு கொள்கை

  • ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகளில் முக்கியமானவை = பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளை.
  • இப்பேரண்டம் பெருவெடிப்பினால் (Big Bang Theory) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்.
  • இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார்.
  • “பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை” என்று கூறியவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.
10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
10TH TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

கருந்துளை

  • நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன.
  • அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று.
  • ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது.
  • அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது.
  • விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்துகொண்டே சென்று அளவற்றதாகிறது.

கருந்துளை பற்றி ஸ்டீபன் ஹாக்கிங்

  • ‘சில நேரங்களில் உண்மை, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது.
  • அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும்.
  • புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன.
  • அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்துகொள்ள முயல்கிறது” என்று கூறுகிறார், ஸ்டீபன் ஹாக்கிங்.

கருந்துளை என்றால் என்ன

  • “கருந்துளை” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் = அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர்
  • “கருந்துளை கோட்பாட்டை” முதன் முதலில் குறிப்பிட்டவர் = அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர்.
  • கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் = அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர்.
  • சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும்கூடத் தப்பமுடியாது.
  • உள்ளே ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனைக் கருந்துளை எனலாம் என்று ஜான் வீலர் கருதினார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி முடிவுகள்

  • ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி முடிவுகள் ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று அழைக்கப்படுகிறது.
  • அவரின் ஆராய்ச்சி முடிவுகளாவன,
    • கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது.
    • கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து (Event Horizon) கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    • கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும்.

படைப்பின் ஆற்றல்

  • முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை “அழிவு ஆற்றல்” என்று கருதப்பட்டது.
  • ஆனால் ஹாக்கிங், கருந்துளை என்பது “படைப்பின் ஆற்றல்” என்று நிறுவினார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்

  • ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் = ஐன்ஸ்டைன், நியூட்டன்.
  • ஐன்ஸ்டைன், நியூட்டன் ஆகியோர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.

லூகாசியன் பேராசிரியர்

  • நியூட்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர்’ என்ற மதிப்பு மிகுந்த பதவியை ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்திருக்கிறார்.

ஈர்ப்பலைகள்

  • ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர் = ஐன்ஸ்டீன்
  • அவரின் சமன்பாடு “E = MC2”.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை கோட்பாடு

  • கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை ஐன்ஸ்டைன் போல, கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்துகொண்டது.

ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்

  • அமெரிக்காவின் உயரிய விருதான, அதிபர் விருது (Presidential medal of Freedom)
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
  • உல்ஃப் விருது (Wolf Foundation Prize)
  • காப்ளி பதக்கம் (Copley Medal)
  • அடிப்படை இயற்பியல் பரிசு (Fundamental Physics Prize)

ஹாக்கிங், கலிலியோ, ஐன்ஸ்டீன் – ஒற்றுமை

  • ஹாக்கிங், கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கூற்று

  • ஸ்டீபன் ஹாக்கிங் = “தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?”
  • ஸ்டீபன் ஹாக்கிங் = “”வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்”
  • “மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக் கூர்மை” என்று கூறியவர் = ஸ்டீபன் ஹாக்கிங்
  • “அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே” என்று கூறியவர் = ஸ்டீபன் ஹாக்கிங்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகிழ்ச்சியான தருணங்கள்

  • 2012இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பைப் பெற்றார்.
  • ‘அடுத்த தலைமுறை (The next generation), பெருவெடிப்புக் கோட்பாடு (The Bigbang Theory) உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றார்.
  • சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
  • போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் சிறப்புகள்

  • உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது; ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்.
  • அறிவியல் உலகில் மட்டுமன்றி, சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
  • அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் நூல்கள்

  • ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • 1988ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.

ஐன்ஸ்டீனின் கூற்று

  • ஐன்ஸ்டீன் = “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது”

 

 

 

Leave a Reply