10TH TAMIL நீதிவெண்பா

10TH TAMIL நீதிவெண்பா

10TH TAMIL நீதிவெண்பா
10TH TAMIL நீதிவெண்பா

10TH TAMIL நீதிவெண்பா

  • “கற்றவர் வழி அரசு செல்லும்” எனக் கூறுவது = சங்க இலக்கியங்கள்.
  • “தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்” எனக் கூறும் நூல் = திருக்குறள்.
  • கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம்வரை தொடர்கின்றனர் தமிழர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நீதிவெண்பா பாடல்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

                       –    செய்குதம்பிப் பாவலர்

10TH TAMIL நீதிவெண்பா
10TH TAMIL நீதிவெண்பா

சதாவதானம் என்றால் என்ன

  • “சதம்” என்பதன் பொருள் = நூறு.
  • ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்

  • “சதாவதானி என அழைக்கப்படுபவர் = செய்குதம்பிப் பாவலர்.
  • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.
  • சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
  • 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப்பெற்றார்.
  • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன.
  • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

 

 

 

Leave a Reply