11TH TAMIL இலக்கண நூல்கள்
11TH TAMIL இலக்கண நூல்கள்
- தமிழில் இலக்கண நூல்கள் செய்யுள் வடிவத்தையும், உரைநடை வடிவத்தையும் கொண்டுள்ளன.
- பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் வடிவில் அமைந்த இலக்கண நூலாகும்.
- தொல்காப்பியத்தை பின்பற்றி பல இலக்கண நூல்கள் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன.
தொல்காப்பியம் நூல் குறிப்பு
- தொல்காப்பியம் ஐந்திலக்கண நூலாகும்.
- தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் = 3 (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)
- தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் = 27
- ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 9 இயல்கள் உள்ளன.
- இந்நூல், எழுத்துகளாலும் சொற்களாலும் உருவாக்கப்படும் செய்யுளுக்கும் அதில் இடம்பெறும் பொருளுக்கும் இலக்கண வரையறைகளைத் தந்துள்ளது.
- தொல்காப்பியப் பொருளதிகாரம், பழந்தமிழரின் நாகரிகத்தையும் அவர்தம் வாழ்வியல் நடைமுறைகளையும் எடுத்தியம்புகிறது.
- இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களிலிருந்து இயற்கை, சுற்றுப்புறச்சூழல், அக்கால மக்களின் அகவுணர்வுகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடிகிறது.
- போர் நெறிகள் குறித்த செய்திகளைப் புறப்பொருள் பற்றிய இயலிலும் அன்பின் ஐந்திணை அவற்றின் முதல், கரு, உரிப்பொருள் ஆகியவற்றை அகப்பொருள் பற்றிய இயல்களிலும் அறியமுடிகிறது.
- இந்நூலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளனர்.
- தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் = 7
- புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் = 12
- புறநானூற்றில் துறை, திணை வகுக்கப்பட்டது = புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில்
தொல்காப்பியம் |
|||
வ.எண் |
எழுத்ததிகாரம் | சொல்லதிகாரம் | பொருளதிகாரம் |
1 | நூல் மரபு | கிளவியாக்கம் |
அகத்திணையியல் |
2 |
மொழி மரபு | வேற்றுமையியல் | புறத்தினையியல் |
3 | பிறப்பியல் | வேற்றுமை மயங்கியல் |
களவியல் |
4 |
புணரியல் | விளிமரபு | கற்பியல் |
5 | தொகைமரபு | பெயரியல் |
பொருளியல் |
6 |
உருபியல் | வினையியல் | மெய்ப்பாட்டியல் |
7 | உயிர்மயங்கியல் | இடையியல் |
உவமவியல் |
8 |
புள்ளி மயங்கியல் | உரியியல் | செய்யுளியல் |
9 | குற்றியலுகரப்புணரியல் | எச்சவியல் |
மரபியல் |
இறையனார் அகப்பொருள் நூல் குறிப்பு
- இந்நூலினை எழுதியவர் = இறையனார்.
- அகப்பொருள் சார்ந்தது இந்நூல்.
- இறையனார் அகப்பொருள் நூலின் வேறுபெயர் = களவியல்
- “களவியல்” எனப்படும் நூல் = இறையனார் அகப்பொருள்.
- இறையனார் அகப்பொருள், அகம் என்பதனைக் களவு, கற்பு என்று இரண்டாகப் பிரிக்கிறது.
- இந்நூலுக்கான மூலம் கிடைக்கவில்லை.
- எனினும், நூலுக்குரிய முழுமையான உரைப்பகுதி கிடைத்துள்ளது.
- தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை
புறப்பொருள் வெண்பாமாலை நூல் குறிப்பு
- புறப்பொருளைப்பற்றி வெண்பா யாப்பில் கூறும் நூல் புறப்பொருள் வெண்பா மாலை.
- இது புறப்பொருளுக்குரிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
- புறப்பொருள் வெண்பாமாலை நூலினை இயற்றியவர் ஐயனாரிதனார்.
- போர் பற்றிய செய்திகளை இந்நூலில் அறியமுடிகிறது.
- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய பன்னிரு திணைகளின் இலக்கணத்தைத் துறைவகையோடு புறப்பொருள் வெண்பாமாலை விளக்குகின்றது.
- தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் = 7
- புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் = 12
- புறநானூற்றில் துறை, திணை வகுக்கப்பட்டது = புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில்
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள்
வெட்சி |
பகைவரது ஆநிரை கவர்தல் |
கரந்தை |
பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல் |
வஞ்சி |
பகை நாட்டின் மீது போர் தொடுத்தல் |
காஞ்சி |
பகைவரை எதிர்த்துப் போரிடுதல் |
நொச்சி |
பகைவரிடம் இருந்து மதிலைக் காத்தல் |
உழிஞை |
பகைவர் நாட்டின் மதிலை சுற்றி வளைத்தல் |
தும்பை |
பகை மன்னர் இருவரும் போரிடுதல் |
வாகை |
போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல் |
பாடாண் |
ஒருவருடைய கல்வி, புகழ், வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல் |
பொதுவியல் |
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்கு பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல் |
கைக்கிளை |
ஒருதலைக் காமம் |
பெருந்திணை |
பொருந்தாக் காமம் |
யாப்பருங்கலக்காரிகை நூல் குறிப்பு
- யாப்பிலக்கணம் கற்பாருக்கு உறுதுணையாக அமைவது யாப்பருங்கலக் காரிகை.
- காரிகை என்பதற்குப் பெண் எனவும் பொருள் உண்டு.
- யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் = அமிர்தசாகரர்.
- இந்நூலுள் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் இயல்கள் அமைந்துள்ளன.
- ‘காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’ என்னும் கூற்று, யாப்பருங்கலக் காரிகையின் பெருமையையும் அதன் யாப்பைக் கற்பதின் கடினத்தையும் உணர்த்தும்.
- அமிர்தசாகரர் இயற்றிய மற்றொரு நூல் = யாப்பருங்கலம்.
- இந்நூலுக்கு உரை எழுதியவர் குணசாகரர்.
வீரசோழியம் நூல் குறிப்பு
- தொல்காப்பியத்திற்குப் பின்னர், ஐந்திலக்கண அமைப்பிலமைந்த நூல், வீரசோழியம்.
- ஐந்திலக்கண நூல் = வீரசோழியம்.
- இந்நூல், ஐந்து அதிகாரத்தையும் பத்துப் படலத்தையும் கொண்டுள்ளது.
- வீரசோழியம் நூலின் ஆசிரியர் புத்தமித்திரர்.
- வீரசோழியம் வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டுக்கும் இலக்கணம் கூற முற்படுகிறது.
- வடமொழி, தமிழ்மொழி இரண்டிற்க்கும் இலக்கணம் கூறும் நூல் = வீரசோழியம்
தண்டியலங்காரம் நூல் குறிப்பு
- தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும்.
- தண்டி என்பவரால் வடமொழியிலுள்ள காவ்யதர்சம் என்னும் நூலைத்தழுவி, இந்நூல் எழுதப்பெற்றது.
- இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டுள்ளது.
- பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
- பொருளணியியலில், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன.
- சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
- பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாறனலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.
-
தண்டியலங்காரம் நூல் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
நேமிநாதம் நூல் குறிப்பு
- எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மற்றொரு நூல் நேமிநாதம்.
- எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் நூல்கள் = தொல்காப்பியம், நேமிநாதம்
- இந்நூல், தொல்காப்பிய எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் சுருக்கமாகக் கூறுவதனால் ‘சின்னூல்’ என்று அழைக்கப்படுகிறது.
- “சின்னூல்” என்று அழைக்கப்படும் = நேமிநாதம்
- வெண்பாவால் அமைந்த நேமிநாதம் நூலைக் கற்றபின்னரே, தொல்காப்பியத்தைக் கற்கும் நடைமுறை இருந்தமை இந்நூலின் சிறப்பைப் புலப்படுத்தும்.
- தொல்காப்பியம் கற்பதற்கு முன்னர், கற்க வேண்டிய நூல் = நேமிநாதம்.
- நேமிநாதம் நூலினை எழுதியவர் குணவீரபண்டிதர் ஆவார்.
- நேமிநாதர் எழுதிய மற்றொரு நூல் = வச்சணந்திமாலை (அல்லது) வெண்பாப் பாட்டியல்
- வெண்பாப்பாட்டியல் நூலின் வேறு பெயர் = வச்சணந்திமாலை.
நன்னூல் நூல் குறிப்பு
- தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும் இலக்கண நூல், நன்னூல்.
- தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்குகிறது.
- தெளிவும் எளிமையும் கொண்டு விளங்கும் இலக்கண நூல் = தொல்காப்பியம்
- செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்கும் இலக்கண நூல் = நன்னூல்
- நன்னூலில் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் உள்ளன.
- இந்நூலுள் அமைந்துள்ள பொதுப் பாயிரம் (முகவுரை) நல்ல நூலுக்குரிய இலக்கணம், பத்து அழகு, பத்துக்குற்றம், நல்லாசிரியர், ஆசிரியர் ஆகாதவர் ஆகியோரது இலக்கணம், நல்ல மாணாக்கர், மாணாக்கர் ஆகாதவரின் இயல்புகள், பாடங்கற்பிக்கும் முறை, கற்கும் முறை ஆகியன குறித்து விரிவாகக் கூறியுள்ளது.
- தொல்காப்பியத்தின் பாயிர உரை மேற்கோள்கள், இந்நூலில் இலக்கணச் சூத்திரங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
- நன்னூலின் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல், தொல்காப்பியத்தின் வளர்நிலையாக அமைந்துள்ளது.
- இவ்வியல், சொற்களின் கட்டமைப்பைத் தெளிவாக விளக்குகிறது.
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனச் சொற்களைப் பகுத்து விளக்குகிறது.
- இந்நூலின் சொல்லதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்றுள்ள,
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே |
- வழக்கிழந்த இலக்கணக் கருத்துகளை நீக்குவதும் புதிய வழக்குகள் சிலவற்றை ஏற்றுக்கொள்வதும் தவறல்ல; காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்குட்பட்டதே இலக்கணம் எனக்கூறி அமைகிறது.
- இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் முதலானோர் உரை கண்டுள்ளனர்.
-
11 ஆம் வகுப்பு நன்னூல் பாயிரம்
நம்பியகப்பொருள் நூல் குறிப்பு
- நம்பி என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் அகப்பொருள் சார்ந்தது.
- இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தியலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
- தொல்காப்பியம், அகப்பொருள் இலக்கணத்தைத் கதை மாந்தர்களின் கூற்றுவகையாகக் கூற, நம்பியகப்பொருள் அகப்பொருள் இலக்கணத்தைத் துறைவகையாக விளக்கிக் கூறுகிறது.
- அகஇலக்கிய நூல்களுக்கு நம்பியகப்பொருள் நூல் அடிப்படையிலேயே துறை வகுக்கப்பட்டுள்ளது.
இலக்கண விளக்கம் நூல் குறிப்பு
- இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூவதிகாரமாகப் பகுக்கப்பட்டு, ஐந்திலக்கணமும் கூறுகிறது .
- தொல்காப்பியத்தைப் பின்பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பதால் இந்நூலைக் ‘குட்டித்தொல்காப்பியம்’ என்றும் அழைப்பர்.
- இந்நூலை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர் ஆவார்.
தொன்னூல் விளக்கம் நூல் குறிப்பு
- வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் = தொன்னூல் விளக்கம்.
- இந்நூல் ஐந்திலக்கண நூல் ஆகும்.
- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணத்தை உடையதாகும் தொன்னோல் விளக்கம்.
- இந்நூலாசிரியர், தம் நூலில் நன்னூல் கருத்துகளையே பெரும்பான்மையாக எடுத்தாண்டுள்ளார்.
பாட்டியல் நூல்கள்
- சிற்றிலக்கியங்களின் அமைப்பு முதலானவற்றை விளக்க, பாட்டியல் நூல்கள் தோன்றின.
- பாட்டியல் நூல்களுள் முதன்மையானதாகக் கருதப்பெறுவது பன்னிரு பாட்டியல். இஃது எழுத்தியல், சொல்லியல், இனவியல் என மூவியலாக அமைந்துள்ளது.
- ‘வச்சணந்தி மாலை’ என்னும் வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன, பாட்டியல் நூல்களுள் சிலவாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
- அவன், இவன், உவன் என்பனவற்றுள் “உவன்” என்னும் சுட்டுப்பெயர் இன்று வழக்கில் இல்லை.
- நறுமணம் என்னும் பொருளைக் குறித்த “நாற்றம்” என்னும் சொல், இன்று விரும்பத்தகாத மணத்தைக் குறிக்கிறது.
- தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துக்கள் = ல, ர. ஆனால் இன்று பலருடைய பெயர்களின் முதல் எழுத்துக்களாய் உள்ளன.
- தனிப்பாடல்கள்
- சித்தர் பாடல்கள்
- சிற்றிலக்கியங்கள்
- ஓவியப்பா
- ரவீந்த்ரநாத் தாகூர்
- தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
- 11TH TAMIL இலக்கண நூல்கள்
- 11TH TAMIL இலக்கண நூல்கள்
- 11TH TAMIL இலக்கண நூல்கள்
- 11TH TAMIL இலக்கண நூல்கள்
- 11TH TAMIL இலக்கண நூல்கள்
- உலக சிறுகதை ஆசிரியர்கள்
- நாடகக்கலை
- தெருக்கூத்தில் கட்டியக்காரன்
- நாடகவியல் ஆளுமைகள்