11TH TAMIL சித்தர் பாடல்கள்

11TH TAMIL சித்தர் பாடல்கள்

11TH TAMIL சித்தர் பாடல்கள்
11TH TAMIL சித்தர் பாடல்கள்

11TH TAMIL சித்தர் பாடல்கள்

  • ‘சித்து’ என்ற சொல் அறிவு என்னும் பொருளைக் குறிக்கும்.
  • சித்தர் என்னும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத் தரும்.
  • சித்தர் இலக்கியம் சடங்குகள், சம்பிரதாயங்கள், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்தது.
  • அதே சமயம் மெய்யியல் அனுபவங்களையும் முன்வைத்தவர்கள் சித்தர்கள்.
  • உருவ வழிபாடுகளை எதிர்த்துள்ளனர்.
  • சாதி, சமய ஏற்றத்தாழ்வையும் எதிர்த்துள்ளனர்.
  • வானவியல், யோகாசனம், வர்மம், பஞ்சபட்சி சாஸ்திரம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் பெற்றிருந்தனர்.
  • பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி சித்தர்களின் கொடையாகும்.
  • சித்தர்கள் தமது கண்டுபிடிப்புகளையும் ஆற்றல்களையும் மக்களின் நன்மைக்கே பெரும்பாலும் பயன்படுத்தினர்.
  • இவர்கள் தம்பாடல்களின்வழி சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்தவர்கள்.
  • சித்தர்கள் பெரிதும் மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறி, மனத்தையும் உடலையும் யோகப்பயிற்சியால் ஒருமுகப்படுத்தலாம் என்னும் தத்துவத்தைத் தந்துள்ளனர்.
  • சித்தர்கள், மருத்துவத்தில் ‘சித்தமருத்துவம்’ என்ற தனிப்பிரிவு தோன்றும்படி பல்வேறு நோய்களையும் அவை தீர்க்கும் மருந்துகளையும் கண்டறிந்தவர்கள்.

இடைக்காட்டுச் சித்தர்

  • இடைக்காடு என்ற ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
  • இவர் போகர் என்ற சித்தரின் சீடர்.
  • ‘இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது என்பது இவருடைய நூல்.
  • மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் இவர் பாடியுள்ளார்.

குதம்பைச் சித்தர்

  • இவருடைய பாடல்களில் ‘குதம்பாய்’ என்று மகடூஉ முன்னிலை வருவதால், இவர் ‘குதம்பைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார்.
  • இவர் பாடல்களில் சித்தர்களின் இயல்புகள் பேசப்படுகின்றன.
  • “குதம்பாய்” என்பதன் இலக்கணக்குறிப்பு = மகடூஉ முன்னிலை.

Leave a Reply