11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
- நூல்களையோ, இதழ்களையோ வெளியிடும்போது பிழையின்றி அச்சிடவேண்டும்.
- எழுத்துப்பிழைகள், தொடர்ப்பிழைகள், மயங்கொலிப் பிழைகள், ஒருமை பன்மைப் பிழைகள் ஆகியவை நிறைந்த செய்திகள், படிப்போர்க்குத் தவறான கருத்தை அளித்து, குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
- எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.
அச்சுப்படி திருத்துபவரின் பணிகள்
- மூலப்ப டியில் (Original Copy) உள்ளபடியே செய்திகள் அச்சாகியுள்ளனவா? என்று ஒவ்வொரு வரியையும் படித்துக் கவனித்தல் வேண்டும்.
- செய்தியின் உள்ளடக்கம், புள்ளிவிவரங்கள், எண்க ள், அட்டவணைகள் முதலியன விடுபட்டுள்ளனவா என்பதை மூலப்படியோடு ஒப்பிட்டுக் கவனித்தல் இன்றியமையாதது. ஏனெனில், புள்ளி விவரங்கள் மாறினால் செய்தியின் பொருளில் முரண்பாடு ஏற்படும்.
- அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.
- பிழை ஏற்பட்ட சொல்லின்மீது எழுதுதல் கூடாது. ஒரு வரியின் இடப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் இடப்பக்க ஓரமும் வலப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் வலப்பக்க ஓரமும் திருத்தம் தருதல் அச்சிடுவோர்க்குப் பயனுடையதாக அமையும்.
- பிழைகளை ஓரம்வரை கோடிழுத்துக் காட்டும்போது, மேலும் கீழும் உள்ள வரிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
- ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.
- ஒரு சொல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாகப் பக்க ஓரத்தில் தருதல் வேண்டும்.
- எண்ணின் (Number) இடையில் பிழையிருந்தால் அந்தத் தொகையை முழுவதுமாகப் பிழையின்றி எழுதிக்காட்டுதல் நல்லது.
- அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ணமுடைய மையால் திருத்துதல் வேண்டும். இது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.
குறியீடுகள் இடுதல்
- அச்சுப்படியில் இருக்கும் பிழைகளைத் திருத்த உலக அளவில் பொதுவான திருத்தக் குறியீடுகள் என்று சில உண்டு.
- அத்தகைய திருத்தக் குறியீடுகளை அச்சுப்படி திருத்துவோர் முதலில் படித்தறிதல் வேண்டும்.
- பிழையிருக்கும் இடத்தில் ஒரு சிறு கோட்டினால் குறித்து, அந்த வரிக்கு நேராகப் பக்கத்தின் ஓரப்பகுதியில் (Margin) குறியீடுகளைப் பொருத்தமாக இட்டுப் பிழையின் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
- ஒரே வரியில் பல தவறுகள் வந்தால் அவற்றை வரிசைப்படி பக்க ஓரத்தில் சிறு சாய்வான கோடிட்டுத் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
- எ.கா
- பாரதியார் கேளிச்சித்திரத்தை விகடச்சித்திறம் என்று குரிப்பார். /லி /ர /றி
திருத்தக் குறியீடுகளின் வகைகள்
- திருத்தக் குறியீடுகள் ஐந்து வகைகளாகப் பிரிப்பர்
- பொதுவானவை (General)
- நிறுத்தக்குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
- இடைவெளி தரவேண்டியவை (Spacing)
- இணைக்க வேண்டியவை (Alignment)
- எழுத்து வடிவம் (Type/Font)
பொதுவானவை
குறியீடு |
குறியீட்டுப் பொருள் |
Dt |
அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக |
Ʌ |
சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க |
[ |
புதிய பத்தி (New Paragraph) தொடங்குக. |
நிறுத்தக் குறியீடுகள்
, / |
கால் புள்ளியை சேர்க்கவும் |
; / |
அரைப் புள்ளியை சேர்க்கவும் |
. / |
முற்றுப்புள்ளி இடவும் |
? / |
வினாக்குறி அடையாளம் இடவும் |
! / |
வியப்புக்குறி சேர்க்கவும் |
: / |
முக்காற்புள்ளி சேர்க்கவும் |
இடைவெளி தரவேண்டியவை
சொற்களை அல்லது எழுத்துக்களைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம். | |
# |
பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கிடையில் இடைவெளி தருக |
இணைக்க வேண்டியவை
எழுத்து வடிவம்
Unbold |
வழக்கமான எழுத்தில் மாற்றுக |
Bold |
தடித்த எழுத்தில் மாற்றுக |
Trs |
சொற்கள், எழுத்துக்களை இடம் மாற்றுக |
I.c. |
எழுத்துருவை சிறியதாக மாற்றுக |
திருத்தக்குறியீடுகளின் தமிழ்ப் பெயர்கள்
ஆங்கில பெயர் |
குறியீடு | தமிழ்ப்பெயர் |
Apostrophe | ‘ |
எழுத்துக்குறை |
Semicolon |
; | அரைப்புள்ளி |
Colon | : |
முக்காற்புள்ளி |
Colondash |
: – | வரலாற்றுக்குறி |
Ditto mark | ,, |
மேற்படிக்குறி |
Dash |
– | இடைக்கோடு |
Bar | / |
வெட்டுக்கோடு |
Brackets |
( ) | பிறைக்கோடு |
Double Brackets | { } |
இரட்டை பிறைக்கோடு |
Large Brackets |
[ ] |
பகர அடைப்பு |