11TH TAMIL கலைச்சொல்லாக்கம்

11TH TAMIL கலைச்சொல்லாக்கம்

11TH TAMIL கலைச்சொல்லாக்கம்

  • பிறமொழிச் சொற்களுக்கு தகுத்த தமிழ்ச் சொற்களை உருவாக்கும் முறைமைக்கு கலைச்சொல்லாக்கம் என்று பெயர்.

கலைச்சொல்லாக்கம் என்றால் என்ன

  • கலைச் சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்து புதிதாக சொற்களை உருவாக்கியும் தருவது ஆகும்.

கலைச்சொற்கள் என்றால் என்ன

  • ஒரு மொழியில் காலத்திற்கேற்ப துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்பர்.
  • ஒரு மொழி தன வேர்ச்சொற்களை கொண்டு புதிய கலைச்சொற்களை உருவாக்கி கொள்ள வேண்டும்
  • கலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயராகவே அமையும்.

அகராதியின் நோக்கம்

  • பொருள் தெரியாத சொற்களுக்கு பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும்.

கலைச்சொல்லாக்க பணிக்கு முன் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள்

  • ஆக்கப்பெறும் சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.
  • ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும்.
  • தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
  • நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக்கூடாது.

அறிவியல் சொற்களை தமிழாக்குவதில் உள்ள முறைகள்

11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
11TH TAMIL கலைச்சொல்லாக்கம்

முறைகள்

எடுத்துக்காட்டுகள்
பழந்தமிழிலக்கியச் சொல்லைப் பயன் படுத்துதல்

வலவன் (PILOT)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல்

அம்மை (MEASLES)
பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல்

தசம முறை (Decimal)

புதுச்சொல் படைத்தல்

மூலக்கூறு (Molecule)
உலக வழக்கை ஏற்றுக் கொள்ளல்

எக்ஸ் கதிர் (X-ray)

பிறமொழித்துறைச்  சொற்களை மொழி பெயர்த்தல்

ஒளிச்சேர்க்கை (Photosynthesis)
ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும் சொற்கள்

மீட்டர், ஓம் (Meter, Ohm)

உலக அளவிலான குறியீடுகள், சூத்திரங்கள்

∑ √A = πr2 H20, Ca

ஒரு சொல்லில் இருந்து பல சொற்களை உருவாக்கல்

  • ஒரு சொல்லை மொழிபெயர்க்கும்போதோ அல்லது புதிய சொல்லை உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்ற வேறு பல சொற்களை உருவாக்க உதவ வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக,
    • Library என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நூலகம், நூல்நிலையம் ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன.
    • இச்சொற்களில் நூலகம் என்னும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது.
    • library – நூலகம்
    • librarian – நூலகர்
    • library science – நூலக இயல்

கலைச்சொற்களை தரப்படுத்தல் வேண்டும்

  • அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும்போது பல்வேறு சொற்களை ஆள்கின்றனர்.
  • எடுத்துக்காட்டாக, Antibiotics = எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லிகள், உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நச்சுயிர்க் கொல்லிகள் எனப் பல்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இக்கலைச்சொற்கள் தமிழில் சொல்லாக்க வளர்ச்சியினை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
  • ஆனால், கலைச்சொற்களைக் கற்பதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் துறைசார்ந்த நிலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இவற்றைத் தவிர்க்க அச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். இதற்கென குழு ஒன்றை உருவாக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை

  • ‘தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி, Member என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லொன்றை உருவாக்க முனைந்தார்.
  • மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை .
  • “அவயவி, அங்கத்தான், சபிகன், உறுப்பாளி” என்ற பல்வேறு சொற்களை பயன்படுத்தி பார்கிறார். ஆனால் அவருக்கு அந்த வார்த்தைகளில் திருப்தி ஏற்படவில்லை.
  • “கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன்” என்று கூறுகிறார் பாரதியார்

தொழில்நுட்ப கலைச்சொற்கள்

  • Cellphone          = கைப்பேசி, செல்லிடப்பேசி, அலைபேசி
  • Website              = இணையம்
  • Blog                     = வலைப்பூ
  • E-Mail                 = மின்னஞ்சல்
  • Smartphone     = திறன்பேசி
  • Windows           = பலகணி

மருத்துவ கலைச் சொற்கள்

  • Clinic                  = மருத்துவமனை
  • Blood Group    = குருதிப் பிரிவு
  • Pharmacist       = மருந்தாளுநர்
  • X-Ray                  = ஊடுகதிர்
  • Typhoid              = குடற்காய்ச்சல்
  • Ointment           = களிம்பு

கல்வி சார்ந்த கலைச் சொற்கள்

  • Note Book         = எழுதுசுவடி
  • Answer Book   = விடைச்சுவடி
  • Rough Note Book  = பொதுக் குறிப்புச் சுவடி
  • Prospectus        = விளக்கச்சுவடி

ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்கள்

  • Touch Scrren   = தொடுதிரை
  • Bug                      = பிழை
  • Gazette              = அரசிதழ்
  • Despatch           = அனுப்புகை
  • Subsidy             = நல்கை
  • Ceiling               = உச்சவரம்பு
  • Circular            = சுற்றறிக்கை
  • Sub Junior       = மிக இளையோர்
  • Super Senior   = மீமூத்தோர்
  • Carrom              = நாலாங்குழி ஆட்டம்
  • Sales Tax           = விற்பனை வரி
  • Customer          = வாடிக்கையாளர்
  • Consumer         = நுகர்வோர்
  • Account             = பற்று வரவுக் கணக்கு
  • Refree                = நடுவர்

 

 

Leave a Reply