11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
- “பிறமொழிச் சாத்திரங்களைதி தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும்” என்று கூறியவர் = பாரதியார்
மொழிபெயர்ப்புக்கலை என்றால் என்ன
- ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும்.
- அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது, முதல் மொழிக்கு நிகரான செய்தி இரண்டாவது மொழியிலும் இடம்பெற வேண்டும்.
- முதல் மொழியை = “மூலமொழி, தருமொழி” என்றும் கூறுவர்.
- இரண்டாவது மொழி = “பெறுமொழி, இலக்கு மொழி” என்றும் கூறுவர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மொழிபெயர்ப்பு
- “Translation” என்ற வார்த்தை “Translatio” என்ற இலத்தின் மொழி வார்த்தையில் இருந்து வந்தது.
- இதற்கு பொருள் = கொண்டு செல்லுதல்
- “FIsh Seed” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = மீன்குஞ்சு
- “Trained Staff” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = பயிற்சி பெற்ற அலுவலர்
- “Training Staff” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = பயிற்சி தரும் அலுவலர்.
மொழிபெயர்ப்பு வகைகள்
- மொழிபெயர்க்கும் செயலில் “தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர் மொழிபெயர்ப்பு” என நான்கு வகைகள் உண்டு.
தழுவல் |
நேரடியாக மொழிபெயர்க்காமல், மூலமொழியின் செய்தியை படித்து புரிந்து கொண்டு அதனை தழுவி எழுதுவதாகும்.
எ.கா = கம்பர் எழுதிய கம்பராமாயணம் |
சுருக்கம் |
படைப்பை சுருக்கி அறிமுகப்படுத்தும் நிலை. இதில் கொஞ்சம் கட்டுப்பாடு இன்றி எழுதலாம் |
மொழியாக்கம் |
ஒரு கவிதையை கவிதையாகவும் உரைநடையாகவும் மொழிபெயர்ப்பது மொழியாக்கம் எனப்படும். |
நேர் மொழிபெயர்ப்பு |
மூலமொழிச் செய்தியில் இருந்து சிறிதும் வழுவாமல் மொழிபெயர்ப்பது |
மொழிபெயர்ப்பு பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுதல்
- தொல்காப்பியர், தனது தொல்காப்பியத்தில் மரபு நிலையறிந்து, அந்த மொழிவழக்குக்கு ஏற்றார் போல் மொழிபெயர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் தொல்காப்பியர், வடமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழலில், வடமொழியில் இருக்கின்ற சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும், “வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் என்கிறார்”.
- வருஷம் என்ற வடமொழி சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = ஆண்டு.
- “வருஷம்” என்பதற்கு பதில் “வருடம்” என்பதை பயன்படுத்தலாம் என்கிறார்.
- “பிரசங்கம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = சொற்பொழிவு
- “பிரசாரம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = பரப்புரை
மொழிபெயர்ப்பில் பொருள் பொருத்தப்பாடு
- மொழிபெயர்ப்பில் முதன்மையானது = பொருள் பொருத்தப்பாடு ஆகும்.
- அதனால், மூலமொழியின் செய்தியைப புரிந்து கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும்.
பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார்
- வடசொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிய, பேராசியர் நீலாம்பிகை அம்மையாரின் “வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்” என்னும் நூல் உதவியாக இருக்கும்.
- “வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்” என்ற நூலின் ஆசிரியர் = பேராசியர் நீலாம்பிகை அம்மையார்.
மொழிபெயர்ப்பு வகைகள்
- பத்திரிகை மொழிபெயர்ப்பு
- விளம்பர மொழிபெயர்ப்பு
- வானொலி மொழிபெயர்ப்பு
- கணிப்பொறி மொழிபெயர்ப்பு
- இலக்கிய மொழிபெயர்ப்பு
- அறிவியல் மொழிபெயர்ப்பு
ராவ்சாகிப் கே கோதண்டபாணி
- புறநானூற்றில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் பாடலி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் = ராவ்சாகிப் கே கோதண்டபாணி.
அரிஸ்டாட்டில்
- கிரேக்க மொழியில் “POETICS” என்ற நூலை எழுதியவர் = அரிஸ்டாட்டில்
- இந்நூலை தமிழில் “கவிதையியல்” என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் = பேராசிரியர் அ.அ.மணவாளன்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
- ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்தவர் = ஜி.யு.போப்.
- திருக்குறளை ஜெர்மானிய (செருமானிய) மொழியில் மொழிப்பெயர்த்தவர் = டாக்டர் கார்ல் கிரௌல்.
- திருக்குறளை “மாண்டரின்” (சீன) மொழியில் மொழிபெயர்த்தவர் = தைவானை சேர்ந்த கவிஞர் யூஸி ஆவார். இவருக்கு இம்மொழிப்பெயர்பபு பணிக்காக தமிழக் அரசு 77.4 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
மொழிபெயர்ப்பு சிக்கலுக்கு காரணமானவை
- மொழிபெயர்ப்பு சிக்கலுக்கு காரணமாக அமைவன,
- மொழியின் தனித் தன்மை
- தொடரமைப்பு மாறுபாடு
- பண்பாட்டு இடைவெளி
- உறவுமுறைச் சிக்கல்
- மரியாதை வழக்கு
- இடக்கரக்டக்கல்
- மொழியியல் சிக்கல்கள்
- ஒருபொருட்பன்மொழி
- பொருள் மயக்கம்
கவிஞர்கள் ஒப்பீடு
- “கம்பனுடன் மில்டனையும், பாரதிதாசனுடன் வோர்ட்ஸ்வொர்தையும்” ஒப்பிட்டவர் = பேராசிரியர் அ.அ.மணவாளன்.
- “பாரதிதாசனை கார்ல்சாண்ட்பர்க்” உடன் ஒப்பிட்டவர் = முனைவர் சண்முக.செல்வகணபதி ஆவார்.
- “பாரதிதாசன் – கார்ல்சாண்ட்பர்க் ஓர் ஒப்பாய்வு” என்ற நூலை எழுதியவர் = முனைவர் சண்முக.செல்வகணபதி.
- பண்டைய தமிழ்ப் பாடல்களை கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீர உணர்சிக் கவிதைகளுடன் ஒப்பிட்டு “Tamil Heroic Poetry” என்ற நூலை எழுதியவர் = அறிஞர் க. கைலாசபதி
- அறிஞர் க. கைலாசபதியின் “Tamil Heroic Poetry” என்ற நூலை தமிழில் “தமிழ் வீரநிலைக் கவிதை” என்ற நூலாக மொழிப்பெயர்த்தவர் = கு.வெ. பாலசுப்ரமணியன்.
மொழிபெயர்ப்பு நூல்கள்
- உமர்கய்யாம் பாடல்கள் பாரசீகப் புலவரால் எழுதப்பட்டவை. அவற்றை எட்வர்டு பிற்செரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைக் கவிமணி, தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- சுந்தர ராமசாமி தமிழில் எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை என்னும் நாவலை Black went worth என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- சூத்திரகரின் “மிருச்ச கடிகம்” என்ற வடமொழி நாடக நூலை “மண்ணியல் சிறுதேர்” எனப் பண்டிதமணி மு.கதிரேசனார் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்பு இதழ்
- தமிழில் மொழிபெயர்ப்புக்கென வெளிவரும் இதழ் = திசை எட்டும்.
- அதன் ஆசிரியர் குறிஞ்சி வேலன்.
தமிழ் மொழிபெயர்ப்பு இணையதளம்
- இணைய இதழ் thinnai.com ஆகும்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது.
வடசொல் என்பதைக் கண்டறிய சில குறிப்புகள்
- தமிழ் எழுத்துகளின் வடிவம் இல்லாச் சொற்கள். (எ.கா.) புஷ்பம்
- தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகளில் தொடங்குவன. (ரம்யா, லட்டு)
- தமிழில் மொழி இறுதியில் வாராச் சொற்கள் (எ.கா.) வீரேந்திரநாத்.
- தமிழில் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு உட்படாத எழுத்துகள் தொடர்ந்து வருவன. ( பக்தி)
- தனிக்குற்றெழுத்தை அடுத்து, ரகர ஒற்று அமைந்திருப்பன. (எ.கா.) தர்மம், நிர்வாகம்.
- எதிர்ப்பொருளை உணர்த்தவரும் முன்னொட்டுடன் கூடிய வடசொற்கள். (எ.கா.) நீதி – அநீதி, நியாயம் – அநியாயம்
- அழுத்தமாக ஒலிக்கக் கூடிய சொற்கள். (எ.கா.) பாவனை
- வேர்ச்சொல் அல்லது காரணப்பெயர் இன்றி அமையும் சொற்கள் போன்று வருவனவெல்லாம் வடசொற்களே.
- ஓவியப்பா
- ரவீந்த்ரநாத் தாகூர்
- தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
- உலக சிறுகதை ஆசிரியர்கள்
- நாடகக்கலை
- தெருக்கூத்தில் கட்டியக்காரன்
- நாடகவியல் ஆளுமைகள்
- 11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
- 11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
- பேச்சுக்கலை
- இலக்கண வரலாறு
- இலக்கண நூல்கள்
- தொடரியல்
- அகராதிக்கலை