11TH TAMIL அகராதிக்கலை

11TH TAMIL அகராதிக்கலை

11TH TAMIL அகராதிக்கலை
11TH TAMIL அகராதிக்கலை

11TH TAMIL அகராதிக்கலை

  • “குவலயம்” என்ற சொல்லின் பொருள் = உலகம்
  • “உலகம்” எனப் பொருளை குறிக்கும் மற்ற சொற்கள் = வையம், ஞாலம், புவி, புவனம், அகிலம், அண்டம், பார், தாரணி, பூமி

அகராதி

  • அகரம் + ஆதி = அகராதி
  • “ஆதி” என்பதன் பொருள் = முதல்

அகராதி என்றால் என்ன

  • ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசையில் அமையும்படி தொகுத்து விளக்கும் நூல், அகராதி எனப்படும்.
  • அகராதியின் மற்றொரு பெயர் = அகரமுதலி
  • ஒரு மொழியின் சொல்வளங்காட்டும் கண்ணாடியே “அகராதி” ஆகும்.

தொல்காப்பியத்தில் பொருள் விளக்கம்

  • தமிழில் சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் செய்யும்முறை தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
  • தொல்காப்பியர், உரியியலில் பல சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்துள்ளார்.
  • “ஐ வியப்பாகும்” என்பதன் இலக்கணக்குறிப்பு = உரிச்சொல்

அகராதி நிகண்டு

  • தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு” என்னும் நூலாகும்.
  • “அகராதி நிகண்டு” என்னும் நூலின் ஆசிரியர் = இரேவணச்சித்தர்.

நிகண்டு என்றால் என்ன

  • ‘நிகண்டு’ என்பது, வடசொல் ஆகும்.
  • நிகண்டு என்னும் சொல்லுக்குத் தமிழில் = சொற்றொகை, தொகுப்பு அகராதி, தொகையகராதி, தமிழ்ப்பா அகராதி, தொகுதி, கூட்டம் எனப் பல பொருள்களுள்ளன.
  • நிகண்டுகள், தமிழிலுள்ள சொற்களைப் பல்வேறு பகுப்புகளுக்குட்படுத்தி, அவற்றிற்குரிய பொருளைப் பாடல் வடிவில் தந்தன.

முதல் நிகண்டு நூல்

  • தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம்
  • சேந்தன் திவாகரம் நூலின் ஆசிரியர் = திவாகர முனிவர்.
  • நிகண்டு நூல்களுள் சிறந்த நூல் = சூடாமணி நிகண்டைக் கூறுவர்.
  • “சூடாமணி நிகண்டு” நூலின் ஆசிரியர் = மண்டல புருடர்.

சொற்களை பகுப்படுத்தல்

  • அகராதியில் உள்ள மொத்த பெயர்த்தொகுதிகள் = 12.
  • தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம் முதலான பன்னிரு பெயர்த்தொகுதியில், தமிழிலுள்ள சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
  • எடுத்துக்காட்டாகச் சூடாமணி நிகண்டில், விலங்குகளின் இளமைப்பெயரை அறிய விரும்பினால், முதலில் விலங்கின் பெயர்த்தொகுதியைக் காண வேண்டும்.
  • பின்னர், விலங்கின் பிள்ளைமரபு என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு விலங்குகளுக்குரிய இளமைப்பெயர்களைக் காணலாம்.
  • பறழ், பிள்ளை , குட்டி , குழவி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம் என்பனவெல்லாம் விலங்கின் இளமைப்பெயர்களே.
  • அது மட்டுமன்று, அப்பெயர்களுக்குரிய விலங்குகள் எவையெவை என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும்.

வீரமாமுனிவரின் சதுரகராதி

11TH TAMIL அகராதிக்கலை
11TH TAMIL அகராதிக்கலை
  • சதுரகராதியை உருவாக்கியவர் = வீரமாமுனிவர்.
  • இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
  • வீரமாமுனிவரின் இயற்பெயர் = கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி.
  • வீரமாமுனிவர் சதுரகராதியை தொகுத்த ஆண்டு = 1732
  • “சதுர்” என்பதன் பொருள் = நான்கு.
  • சதுரகராதி, “பெயர், பொருள், தொகை, தொடை” என சொற்களை நான்காக பகுத்து பொருள் விளக்கம் தருகிறது.

தமிழ் அகராதியை உருவாக்கிய வெளிநாட்டினர்

  • வீரமாமுனிவரை போல, ஐரோப்பியர் பலர் தமிழ் அகராதிகளை உருவாக்கி உள்ளனர்.
  • அவர்களுள் பெப்ரீசியஸ், இராட்லர், வின்சுலோ, பெர்சிவல், ஜி.யு.போப் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தமிழ்ப்பேரகராதி

  • சென்னை பல்கலைக்கழகத்தார் வெளியிட்ட அகராதி = தமிழ்ப் பேரகராதி அல்லது தமிழ் லெக்ஸிகன் என்பர்.
  • இவ்வகராதியில் சொற்களுக்கான விளக்கங்கள் 7 கூறுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
  • ஏழு கூறுகள் = சொல், சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பு, இலக்கண பாகுபாடு, சொல்லின் தோற்றம், இனச்சொற்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லுக்கான பொருள், சொற்பொருளுக்கு ஏற்ற இலக்கிய மேற்கோள்.

கலைக்களஞ்சியம் என்றால் என்ன

11TH TAMIL அகராதிக்கலை
11TH TAMIL அகராதிக்கலை
  • ‘செய்திகளைத் தொகுத்துத் தரும் பார்வை நூல்களைத்தான் கலைக்களஞ்சியம்’ என்கிறோம்.
  • அறிஞர்கள், புலவர்கள், தலைவர்கள் ஆகியோர்தம் வரலாறுகள், தாவரங்கள், விலங்குகள் பற்றிய செய்திகள், புகழ்பெற்ற இடங்கள், பொருள்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் ஆகிய அனைத்துச் செய்திகளையும் உங்களுக்குத் தொகுத்துத் தரக்கூடிய நூல்கள் கலைக்களஞ்சியங்களே.

அகராதி வகைகள் யாவை?

  • சிறுவர்க்கான அகராதிகள்
  • எதுகை மோனை அகராதிகள்
  • மரபுத்தொடர் அகராதிகள்
  • வட்டாரவழக்கு அகராதிகள்
  • கலைச்சொல் அகராதிகள்
  • பழமொழி அகராதிகள்
  • மேற்கோள் அகராதிகள்
  • ஒரு பொருட் பன்மொழி அகராதிகள்
  • எதிர்ச்சொல் அகராதிகள்
  • ஒலிக்குறிப்பு அகராதிகள்
  • ஒலிப்பு அகராதிகள்
  • வணிகச் சொல் அகராதிகள்
  • கணினிச் சொல் அகராதிகள்
  • மருத்துவச் சொல் அகராதிகள்
  • அலுவலகப் பயன்பாட்டுச் சொல் அகராதிகள்
  • ஆட்சிமொழி அகராதிகள்
  • இணைய அகராதிகள்
  • பொறியியற் சொற்சார்ந்த அகராதிகள்
  • தத்துவம்சார் அகராதிகள்
  • சமயக் கருத்துசார்ந்த அகராதிகள்
  • இலக்கியவியல் சார்ந்த அகராதிகள்
  • அயற்சொல் அகராதிகள்

அகராதிகளும் அவற்றின் ஆசிரியர்களும்

அகராதி

ஆசிரியர்
சதுரகராதி

வீரமாமுனிவர்

தமிழ் – ஆங்கில அகராதி

பெப்ரீஷியஸ்
பட அகராதி

இராமநாதன்

தமிழ்ச்சொற்பிறப்பியல் ஒப்பியல் அகராதி

ஞானப்பிரகாச அடிகள்
திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி

பரோ, எமினோ

பழமொழி அகராதி

பெர்சிவல்

11TH TAMIL அகராதிக்கலை
11TH TAMIL அகராதிக்கலை

நிகண்டுகளும் அவற்றின் ஆசிரியர்களும்

நிகண்டு

ஆசிரியர்
திவாகர நிகண்டு

திவாகரர்

பிங்கல நிகண்டு

பிங்கலர்
சூடாமணி நிகண்டு

மண்டல புருடர்

அகராதி நிகண்டு

சிதம்பர ரேவணசித்தர்
கயாதர நிகண்டு

கயாதரர்

உரிச்சொல் நிகண்டு

காங்கேயர்

 

 

 

 

 

11TH ADVANCED TAMIL

Leave a Reply