11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

  • “பிறமொழிச் சாத்திரங்களைதி தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும்” என்று கூறியவர் = பாரதியார்

மொழிபெயர்ப்புக்கலை என்றால் என்ன

  • ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும்.
  • அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது, முதல் மொழிக்கு நிகரான செய்தி இரண்டாவது மொழியிலும் இடம்பெற வேண்டும்.
  • முதல் மொழியை = “மூலமொழி, தருமொழி” என்றும் கூறுவர்.
  • இரண்டாவது மொழி = “பெறுமொழி, இலக்கு மொழி” என்றும் கூறுவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மொழிபெயர்ப்பு

  • “Translation” என்ற வார்த்தை “Translatio” என்ற இலத்தின் மொழி வார்த்தையில் இருந்து வந்தது.
  • இதற்கு பொருள் = கொண்டு செல்லுதல்
  • “FIsh Seed” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = மீன்குஞ்சு
  • “Trained Staff” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = பயிற்சி பெற்ற அலுவலர்
  • “Training Staff” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் = பயிற்சி தரும் அலுவலர்.

மொழிபெயர்ப்பு வகைகள்

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
  • மொழிபெயர்க்கும் செயலில் “தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர் மொழிபெயர்ப்பு” என நான்கு வகைகள் உண்டு.

தழுவல்

நேரடியாக மொழிபெயர்க்காமல், மூலமொழியின் செய்தியை படித்து புரிந்து கொண்டு அதனை தழுவி எழுதுவதாகும்.

எ.கா = கம்பர் எழுதிய கம்பராமாயணம்

சுருக்கம்

படைப்பை சுருக்கி அறிமுகப்படுத்தும் நிலை.

இதில் கொஞ்சம் கட்டுப்பாடு இன்றி எழுதலாம்

மொழியாக்கம்

ஒரு கவிதையை கவிதையாகவும் உரைநடையாகவும் மொழிபெயர்ப்பது மொழியாக்கம் எனப்படும்.
நேர் மொழிபெயர்ப்பு

மூலமொழிச் செய்தியில் இருந்து சிறிதும் வழுவாமல் மொழிபெயர்ப்பது

மொழிபெயர்ப்பு பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுதல்

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
  • தொல்காப்பியர், தனது தொல்காப்பியத்தில் மரபு நிலையறிந்து, அந்த மொழிவழக்குக்கு ஏற்றார் போல் மொழிபெயர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் தொல்காப்பியர், வடமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழலில், வடமொழியில் இருக்கின்ற சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும், “வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் என்கிறார்”.
    • வருஷம் என்ற வடமொழி சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = ஆண்டு.
    • “வருஷம்” என்பதற்கு பதில் “வருடம்” என்பதை பயன்படுத்தலாம் என்கிறார்.
    • “பிரசங்கம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = சொற்பொழிவு
    • “பிரசாரம்” என்னும் வடமொழிச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் = பரப்புரை

மொழிபெயர்ப்பில் பொருள் பொருத்தப்பாடு

  • மொழிபெயர்ப்பில் முதன்மையானது = பொருள் பொருத்தப்பாடு ஆகும்.
  • அதனால், மூலமொழியின் செய்தியைப புரிந்து கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும்.

பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார்

  • வடசொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிய, பேராசியர் நீலாம்பிகை அம்மையாரின் “வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்” என்னும் நூல் உதவியாக இருக்கும்.
  • “வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்” என்ற நூலின் ஆசிரியர் = பேராசியர் நீலாம்பிகை அம்மையார்.

மொழிபெயர்ப்பு வகைகள்

  • பத்திரிகை மொழிபெயர்ப்பு
  • விளம்பர மொழிபெயர்ப்பு
  • வானொலி மொழிபெயர்ப்பு
  • கணிப்பொறி மொழிபெயர்ப்பு
  • இலக்கிய மொழிபெயர்ப்பு
  • அறிவியல் மொழிபெயர்ப்பு

ராவ்சாகிப் கே கோதண்டபாணி

  • புறநானூற்றில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் பாடலி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் = ராவ்சாகிப் கே கோதண்டபாணி.

அரிஸ்டாட்டில்

  • கிரேக்க மொழியில் “POETICS” என்ற நூலை எழுதியவர் = அரிஸ்டாட்டில்
  • இந்நூலை தமிழில் “கவிதையியல்” என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் = பேராசிரியர் அ.அ.மணவாளன்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்தவர் = ஜி.யு.போப்.
  • திருக்குறளை ஜெர்மானிய (செருமானிய) மொழியில் மொழிப்பெயர்த்தவர் = டாக்டர் கார்ல் கிரௌல்.
  • திருக்குறளை “மாண்டரின்” (சீன) மொழியில் மொழிபெயர்த்தவர் = தைவானை சேர்ந்த கவிஞர் யூஸி ஆவார். இவருக்கு இம்மொழிப்பெயர்பபு பணிக்காக தமிழக் அரசு 77.4 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

மொழிபெயர்ப்பு சிக்கலுக்கு காரணமானவை

  • மொழிபெயர்ப்பு சிக்கலுக்கு காரணமாக அமைவன,
    • மொழியின் தனித் தன்மை
    • தொடரமைப்பு மாறுபாடு
    • பண்பாட்டு இடைவெளி
    • உறவுமுறைச் சிக்கல்
    • மரியாதை வழக்கு
    • இடக்கரக்டக்கல்
    • மொழியியல் சிக்கல்கள்
    • ஒருபொருட்பன்மொழி
    • பொருள் மயக்கம்

கவிஞர்கள் ஒப்பீடு

  • “கம்பனுடன் மில்டனையும், பாரதிதாசனுடன் வோர்ட்ஸ்வொர்தையும்” ஒப்பிட்டவர் = பேராசிரியர் அ.அ.மணவாளன்.
  • “பாரதிதாசனை கார்ல்சாண்ட்பர்க்” உடன் ஒப்பிட்டவர் = முனைவர் சண்முக.செல்வகணபதி ஆவார்.
  • “பாரதிதாசன் – கார்ல்சாண்ட்பர்க் ஓர் ஒப்பாய்வு” என்ற நூலை எழுதியவர் = முனைவர் சண்முக.செல்வகணபதி.
  • பண்டைய தமிழ்ப் பாடல்களை கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீர உணர்சிக் கவிதைகளுடன் ஒப்பிட்டு “Tamil Heroic Poetry” என்ற நூலை எழுதியவர் = அறிஞர் க. கைலாசபதி
  • அறிஞர் க. கைலாசபதியின் “Tamil Heroic Poetry” என்ற நூலை தமிழில் “தமிழ் வீரநிலைக் கவிதை” என்ற நூலாக மொழிப்பெயர்த்தவர் = கு.வெ. பாலசுப்ரமணியன்.
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • உமர்கய்யாம் பாடல்கள் பாரசீகப் புலவரால் எழுதப்பட்டவை. அவற்றை எட்வர்டு பிற்செரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைக் கவிமணி, தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சுந்தர ராமசாமி தமிழில் எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை என்னும் நாவலை Black went worth என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சூத்திரகரின் “மிருச்ச கடிகம்” என்ற வடமொழி நாடக நூலை “மண்ணியல் சிறுதேர்” எனப் பண்டிதமணி மு.கதிரேசனார் மொழிபெயர்த்துள்ளார்.

மொழிபெயர்ப்பு இதழ்

  • தமிழில் மொழிபெயர்ப்புக்கென வெளிவரும் இதழ் = திசை எட்டும்.
  • அதன் ஆசிரியர் குறிஞ்சி வேலன்.

தமிழ் மொழிபெயர்ப்பு இணையதளம்

  • இணைய இதழ் thinnai.com ஆகும்.
  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது.
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை
11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

வடசொல் என்பதைக் கண்டறிய சில குறிப்புகள்

  • தமிழ் எழுத்துகளின் வடிவம் இல்லாச் சொற்கள். (எ.கா.) புஷ்பம்
  • தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகளில் தொடங்குவன. (ரம்யா, லட்டு)
  • தமிழில் மொழி இறுதியில் வாராச் சொற்கள் (எ.கா.) வீரேந்திரநாத்.
  • தமிழில் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு உட்படாத எழுத்துகள் தொடர்ந்து வருவன. ( பக்தி)
  • தனிக்குற்றெழுத்தை அடுத்து, ரகர ஒற்று அமைந்திருப்பன. (எ.கா.) தர்மம், நிர்வாகம்.
  • எதிர்ப்பொருளை உணர்த்தவரும் முன்னொட்டுடன் கூடிய வடசொற்கள். (எ.கா.) நீதி – அநீதி, நியாயம் – அநியாயம்
  • அழுத்தமாக ஒலிக்கக் கூடிய சொற்கள். (எ.கா.) பாவனை
  • வேர்ச்சொல் அல்லது காரணப்பெயர் இன்றி அமையும் சொற்கள் போன்று வருவனவெல்லாம் வடசொற்களே.

 

 

 

Leave a Reply