11TH TAMIL சிற்றிலக்கியங்கள்
11TH TAMIL சிற்றிலக்கியங்கள்
- பேரிலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனையும் உணர்த்துவதற்காக எழுந்தன.
- இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வரும் தன்மையில் அமைந்த இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள்.
- சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியம் கூறும் ‘விருந்து’ என்னும் வனப்பினுள் அடங்கும்.
- சிற்றிலக்கியம் 96 வகையின என்பர்.
- தூது, உலா, பரணி, குறவஞ்சி, பள்ளு, அந்தாதி, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ், சதகம் போன்றன சிற்றிலக்கிய வகைகளுள் சில.
- சிற்றிலக்கியங்களின் காலத்தைக் குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட இயலாது.
- சங்கம் முதல் இன்று வரை பெரிதும் சிறிதுமாக இவ்வகை இலக்கியம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
- வட்டாரச் சார்புடைய இலக்கியங்கள் = சிற்றிலக்கியங்கள்
- பக்தி இலக்கியங்கள் காலம் = பல்லவர் காலம்
- சிற்றிலக்கியங்கள் காலம் = நாயக்கர் காலம்.
-
சிற்றிலக்கியங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ஆசியா உம்மா பாடல்கள் – சூஃபித்துவம்
- மெய்ஞ்ஞானத்தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம்.
- அதன் தொடக்கப் புள்ளியாக அலி இபின் அபி தாலிஃப் கருதப்படுகிறார்.
- சூஃபித்துவத்தின் ஆணிவேர், இசுலாத்தின் அடிப்படையான மனிதநேயத்திலும் ஆன்மீகத்திலும் வேரூன்றியுள்ளது.
- தத்துவக்கோட்பாடுகளையும் அறிவு சார்ந்த தருக்கங்களையும் தாண்டி, ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வலியுறுத்தும் அகத்தரிசனமே சூஃபித்துவத்தின் அடிப்படை எனலாம்.
- தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
|
ஆசியா உம்மா
- சீதக்காதி மரபு வந்த ஹபீபு முகம்மது மரைக்காயருக்கும் ஹபீபு உம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் செய்யிது ஆசியா உம்மா.
- இவர் கல்வத்து நாயகத்தின் சீடர்.
- இவர் மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம் ஆகிய பாடல்களை அரபுத்தமிழ் வடிவத்தில் இயற்றினார்.
- இவை ‘மெய்ஞ்ஞானப் பாடல் எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.
கீர்த்தனை
- சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று = கீர்த்தனை
- “கீர்த்தி” என்ற சொல்லுக்கு பொருள் = புகழ், இசை
- கீர்த்தனை என்பதை இசைப்பாடல் என்பர்.
- இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுவதால் இதனை கீர்த்தனை என்பர்.
- கீர்த்தனையாக வளர்ச்சி பெற்ற பாடல் வகை = சிந்து பாடல் வகை
- கீர்த்தனைகளில் முதன்மை அளிக்கப்படுவது = சொற்களுக்கு
கீர்த்தனைகளின் மூன்று நிலை
- கீர்த்தனைகளில் மூன்று நிலைகள் உள்ளன. அவை,
- பல்லவி
- அநுபல்லவி
- சரணம்
கீர்த்தனை சிற்றிலக்கியம்
- 17 நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த இச்சிற்றிலக்கியம், பிற்காலத்தில் மக்களின் சிக்கல்களையும் பேசத் துவங்கியது.
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
- “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” என்னும் இசைப்பாடல நூலினை பாடியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்.
- இந்நூலின் பெயருக்கு ஏற்ப அணைத்து சமயத்திற்க்கும் பொதுவான சமரசக் கீர்த்தனையை வேதநாயகம் அவர்கள் பாடியுள்ளார்.
- சர்வ சமய சமரசக் கீர்த்தனை நூலின் உள்ள மொத்த கீர்த்தனைகள் = 192 கீர்த்தனை பாடல்கள்.
நூல் பாகுபாடு
- வேதநாயகர் இவற்றை, ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார். அவை,
- தேவதோத்திரக் கீர்த்தனைகள்
- ஈசுவர வருடத்துப் பஞ்சத்தைப் பற்றிய கீர்த்தனைகள்
- ஹிதோபதேசக் கீர்த்தனைகள்
- உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்
- குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள்
மாயுரம் வேதநாயகம் பிள்ளை
- வேதநாயகர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் பிறந்தவர்.
- சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால், ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது.
- பின்பு, தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப்பாகப் பணியாற்றினார்.
- கி.பி. (பொ.ஆ.) 1876 ஆம் ஆண்டு வெளியான இவரின் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.
-
மாயுரம் வேதநாயகம் பிள்ளை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்